என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "8 people arrested"
- வேடசந்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அனுமதி பெறாமல் சேவல்சண்டை நடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்து ரூ.72 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
எரியோடு:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அனுமதி பெறாமல் சேவல்சண்டை நடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
வேடசந்தூர் டி.எஸ்.பி. துர்காதேவி உத்தரவின் பேரில் வடமதுரை, எரியோடு போலீசார் இதுகுறித்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இன்று எரியோடு கோவிலூர் பகுதியில் பண்ணைக்குளம் என்ற இடத்தில் சேவல் சூதாட்டம் நடந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட கோவிலூரை சேர்ந்த பெருமாள், திருமுருகன், குஜிலியம்பாறையை சேர்ந்த காளிமுத்து, நடராஜன், கோம்பையை சேர்ந்த தேவராஜ், தவசிமடையை சேர்ந்த தங்கபாண்டியன், மணப்பாறையை சேர்ந்த ரவிக்குமார் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ரூ.72 ஆயிரம் ரொக்கப்பணம், 2 சேவல்கள் மற்றும் 11 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அனுமதி பெறாமல் சேவல்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- பொங்கல் பண்டிகையையொட்டி அப்பகுதியில் நடைபெற்ற இசை நாற்காலி போட்டியை ராஜியின் மகன் பிரவீன்ராஜ் பார்க்க சென்றார்.
- கஜேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜி (வயது 43). பொங்கல் பண்டிகையையொட்டி அப்பகுதியில் நடைபெற்ற இசை நாற்காலி போட்டியை ராஜியின் மகன் பிரவீன்ராஜ் பார்க்க வந்தார் அப்போது அதே ஊரை சேர்ந்த ராஜா மகன் கஜேந்திரன் (19) கூச்சலிட்டபடி கொண்டு பிரவீன்ராஜ் மீது விழுந்ததாக தெரிகிறது. இதை தட்டிக்கேட்ட ராஜியை, கஜேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்
. இது குறித்து ராஜி கொடுத்த புகாரின் பேரில் அரசம் பட்டை சேர்ந்த கஜேந்திரன், ரமணா (18), ராஜா மனைவி அன்பு (38) ஆகியோர் மீது சங்கராபுரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்தியா வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர் இதே போல் விளையாட்டு போட்டியை பார்க்க வந்த கஜேந்தி ரனை பிரவீன்ராஜ் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கஜேந்திரன் கொடுத்த புகாாின் பேரில் ராஜி, இவரது மனைவி காந்தி (38), மகன் பிரவீன்ராஜ் மற்றும் சரவணராஜ், விக்னேஷ் (22), முருக வேல் (34), முருவாயி (40) ஆகிய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜி, விக்னேஷ், முருகவேல், முரு வாயி, காந்தி ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
- கொடைக்கானலில் யானை தந்தங்கள் விற்க முயன்ற 8 பேர் கைது செய்து தப்பியோடியவரை தேடி வருகின்றனர்
- யானை தந்தம் விற்பனை, 8 பேர் கைது
கொடைக்கானல்:
கொடைக்கானல் பெருமாள் மலையை அடுத்த பாலமலை பகுதியில் யானை தந்தங்கள் விற்பதாக கொடைக்கானல் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பாலமலை பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் 9 பேர் கொண்ட கும்பல் தங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். இவர்களிடம் விசாரணை நடத்தியதில் வத்தலகுண்டு பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த பிரபாகர் (40), கொடைக்கானல் பெருமாள் மலையைச் சேர்ந்த ஜோசப் சேவியர் (40), மதுரை தனக்கன்குளம் பகுதியைச் சேர்ந்த சந்திரன் (40), பிரகாஷ் (24), கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த அப்துல் ரஷீத் (47), திருச்சூரைச் சேர்ந்த சிபின் தாமஸ் (26), பழனி பாலாறு டேம் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் (56), காரைக்குடி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (29) ஆகிய 8 பேர்களையும் வனத்துறையினர் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து 2 யானைத்தந்தங்கள், 1 நாட்டு துப்பாக்கி மற்றும் இவர்கள் பயன்படுத்திய சொகுசு கார், செல்போன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். வனத்துறையினர் சுற்றி வளைத்து யானை தந்தங்களை விற்க முயன்ற கும்பலை கைது செய்த போது, கொடைக்கானல் பெருமாள் மலைப் பகுதியைச் சேர்ந்த சார்லஸ் என்பவர் தப்பி ஓடி விட்டார்.
அவரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இது குறித்து கொடைக்கானல் வனத்துறை ரேஞ்சர் சிவக்குமார், வனவர் அழகுராஜா ஆகியோர் வழக்கு பதிவு செய்து யானை தந்தங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? யாருக்கு விற்பனை செய்யப்படுகிறது? என்று விசாரித்து வருகின்றனர். மேலும் கொடைக்கானலில் தந்தங்கள் விற்பனை செய்யும் முயற்சி இது முதல் முறையா, அல்லது தொடர்ந்து நடைபெற்று வருகிறதா? வேறு ஏதேனும் வன விலங்குகள் சம்பந்தப்பட்ட பொருட்கள் இவர்களிடம் உள்ளதா? என தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்