search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "91 mm rain"

    • சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது
    • மழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இதனால் பகல் நேரங்களில் அனல் காற்று வீசியது.

    இதன் காரணமாக மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இந்தநிலையில் நேற்று மாலை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான பொள்ளாச்சி, சின்ேகானா, சின்னக்கல்லாறு, வால்பாறை பி.ஏ.பி., மாக்கினாம்பட்டி உள்ளிட்ட இடங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

    மழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    பொள்ளாச்சி தன்னிச்சி யப்பன் கோவில் வீதியில் ஒரு வீடு மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் இடிந்து விழுந்தது.

    அங்கு யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை.

    மேலும் அந்த பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக மரப்பேட்டை நடுநிலை ப்பள்ளியில் தங்க வைக்க ப்பட்டனர்.

    இதே போல சின்னியம்பாளையம் பகுதியில் மழை காரணமாக கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் ஆர்.எம். நகர் வீதியில் மழைநீர் குளம் போல் தேங்கியது.

    மேலும் மழையின் காரணமாக பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரத்துக்கு மேலாக மின் தடை ஏற்பட்டது.

    நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 308.90 மில்லி மீட்டர் மழை பெய்தது. அதிகபட்சமாக மாக்கினாம்பட்டியில் 91 மி.மீட்டர், பொள்ளாச்சியில் 68 மி.மீட்டர், வால்பாறை பி.ஏ.பி.யில் 43 மி.மீ, வால்பாறை தாலுகா 42 மி.மீ., சின்கோனா 23.மி.மீ., சின்னக்கல்லாறு 22 மி.மீ., ஆழியாறு 7.60 மி.மீ., ஆனைமலை தாலுகா 5.30 மி.மீ., கிணத்துக்கடவு 5மி.மீ., சேலையாறு 2 மி.மீட்டர் என மழை பதிவாகி இருந்தது. திடீரென கோவை மழை பெய்து குளிர்வி த்ததால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்தனர்.

    ×