search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "94.53 percent"

    • இன்று காலை எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
    • ஈரோடு மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 7-வது இடத்தை பிடித்துள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி முடிவடைந்தது. ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 12,229 மாணவர்களும், 12,428 மாணவிகளும் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 24,657 பேர் எழுதினர்.

    இந்நிலையில் தேர்வு முடிந்து வினாத்தாள் திருத்தும் பணிகளும் நிறைவடைந்ததையொட்டி இன்று தமிழ்நாடு முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் 11,287 மாணவர்களும், 12, 022 மாணவிகளும் என மொத்தம் 23,309 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.53 சதவீதம் ஆகும். மாநில அளவில் ஈரோடு மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 7-வது இடத்தை பிடித்துள்ளது.

    மாணவர்கள் 92.30 சதவீதம் பேரும், மாணவிகள் 96.73 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்று ள்ளனர். வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 180 அரசு பள்ளிகளை சேர்ந்த 6,163 மாணவர்களும், 6,588 மாணவிகளும் என மொத்தம் 12 ஆயிரத்து 751 பேர் எழுதினர்.

    இதில் 5,452 மாணவர்களும், 6,242 மாணவிகளும் என மொத்தம் 11 ஆயிரத்து 694 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 91.71 ஆகும்.

    மாணவ, மாணவிகள் தேர்வு முடிவுகளை தங்கள் செல்போன்களிலும் தெரிந்து கொண்டனர். இன்னும் சில மாணவ, மாணவிகள் தங்கள் படித்த பள்ளியில் சென்று தேர்வு முடிவுகளை ஆர்வத்துடன் தெரிந்து கொண்டனர்.

    ×