search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "94.88 percent students pass"

    தமிழகம் முழுவதும் இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தஞ்சை மாவட்டம் 94.88 சதவீதம் பெற்று மாநில அளவில் 21-வது இடத்தை பெற்றுள்ளது.
    தஞ்சாவூர்:

    எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. அதன் படி தஞ்சை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை 33 ஆயிரத்து 287 மாணவ-மாணவிகள் எழுதினர். இதில் 16 ஆயிரத்து 589 மாணவர்களும், 16 ஆயிரத்து 698 மாணவிகளும் அடங்குவர்.

    தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளில் 15 ஆயிரத்து 422 மாணவர்கள், 16 ஆயிரத்து 161 மாணவிகள் என மொத்தம் 31 ஆயிரத்து 581 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 92.97 சதவீதமும், மாணவிகள் 96.78 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தமிழ் தேர்வை 15 ஆயிரத்து 816 மாணவர்கள், 16 ஆயிரத்து 407 மாணவிகள் என மொத்தம் 32 ஆயிரத்து 223 பேர் எழுதினர். ஆங்கில தேர்வை 15 ஆயிரத்து 726 மாணர்வகள், 16 ஆயிரத்து 354 மாணவிகள் என மொத்தம் 32 ஆயிரத்து 80 பேர் எழுதியுள்ளனர். கணிதபாடத் தேர்வை 15 ஆயிரத்து 793 மாணவர்கள், 16 ஆயிரத்து 311 மாணவிகள் என மொத்தம் 32 அயிரத்து 104 பேர் எழுதியுள்ளனர். அறிவியல் தேர்வை 16 ஆயிரத்து 326 மாணவர்கள், 16 ஆயிரத்து 601 மாணவிகள் என மொத்தம் 32 ஆயிரத்து 927 பேர் எழுதியுள்ளனர். சமூகவியல் பாடத் தேர்வை 15 ஆயிரத்து 922 மாணவர்கள், 16 ஆயிரத்து 393 மாணவிகள் என 32 அயிரத்து 315 பேர் எழுதியுள்ளனர்.

    கடந்தாண்டு எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் தஞ்சை மாவட்டம் மாநில அளவில் 95.21 சதவீதம் பெற்று 14-வது இடத்தை பெற்று இருந்தது. இந்தாண்டு தஞ்சை மாவட்டம் 94.88 சதவீதம் பெற்று மாநில அளவில் 21-வது இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு குறைந்த மதிப்பெண்களே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    ×