search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AFGvSA"

    • ஒருநாள் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.
    • தென் ஆப்பிரிக்கா அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

    ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான ஒருநாள் தொடர், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பி பார்க்க செய்தது. பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொண்டு விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.

    ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் அபாரமாக ஆடிய ஆப்கானிஸ்தான் அணி இரண்டிலும் வெற்றி பெற்று அசத்தியது. இதே வேகத்தில் மூன்றாவது போட்டியை எதிர்கொண்ட ஆப்கானிஸ்தான், அதில் மட்டும் தோல்வியை தழுவியது. இதனால், மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

    இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது ஆப்கானிஸ்தான் வீரர் ரகமத் ஷா அவுட் ஆன விதம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. போட்டியின் ஒன்பதாவது ஓவரை வீசிய நிகிடியின் பந்தை ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர்-பேட்டர் ரகமனுள்ளா குர்பாஸ் ஓங்கி அடித்தார்.

    எனினும், அந்த பந்து நிகிடி கையை நோக்கி சென்றது. அதனை பிடிக்க நிகிடி முயற்சிக்க, அது அவரது கையில் இருந்து நழுவி அருகே ரன் ஓட முயற்சித்த ரகமத் ஷாவின் தலையில் பட்டு, நேரடியாக ஸ்டம்ப்களை தாக்கியது. பந்து ஸ்டம்ப்களை அடிக்கும் போது அவர் கிரீஸை விட்டு வெளியே நின்றிருக்க அவர் அவுட் என தீர்ப்பு கொடுக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


    • முதலில் நடைபெற உள்ள டெஸ்ட் போட்டி இந்தியாவில் உள்ள நொய்டாவில் நடக்கிறது.
    • அதனை தொடர்ந்து நடக்கும் ஒருநாள் போட்டி யுஏஇ-யில் நடைபெற உள்ளது

    ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இருதரப்பு தொடர் செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 22 வரை நடைபெற இருக்கிறது. இரு அணிகளும் ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.

    முதல் முறையாக ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிர்க்கா அணிகள் இருதரப்பு தொடரில் விளையாட உள்ளது. முதலில் நடைபெற உள்ள டெஸ்ட் போட்டி இந்தியாவில் உள்ள நொய்டாவில் செப்டம்பர் 9-ந் தேதி தொடங்குகிறது.

    இதனை தொடர்ந்து நடக்கும் ஒருநாள் போட்டி யுஏஇ-யில் நடைபெற உள்ளது என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த தொடர் ஆப்கானிஸ்தான் தலைமையில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தகக்து.

    ×