search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Army Soldier Arrested"

    • கடந்த வாரம் மீண்டும் ஊருக்கு வந்த ஜெகதீஷ் மனைவியை விஜயநகரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகதீஷை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம், பங்காரம்மா பேட்டையை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது30). ராணுவ வீரர். இவரது மனைவி அனுஷா (30). இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    ஜெகதீசுக்கு விருப்பம் இல்லாமல் அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் திருமணம் முடிந்தவுடன் ஜெகதீஷ் ராணுவத்தில் வேலைக்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் ஊருக்கு வந்த ஜெகதீஷ் மனைவியை விஜயநகரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றார்.

    பின்னர் மனைவியை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு விஜயவாடாவுக்கு சென்றார். தனக்கு பிடிக்காத பெண்ணை திருமணம் செய்து வைத்ததால் மனைவியை கொலை செய்ய முடிவு செய்தார்.

    கொலை செய்யும்போது எந்த தடையும் போலீசிடம் சிக்காமல் தப்பிப்பது எப்படி என யூடியூபில் பார்த்து தெரிந்து கொண்டார்.

    அன்று இரவு 11 மணிக்கு வீட்டிற்கு வந்த ஜெகதீஷ் மனைவியை வீட்டிலிருந்து வெளியே அருகில் உள்ள மாட்டுத் தொழுவத்திற்கு அழைத்துச் சென்றார். மனைவியிடம் நடத்தையில் சந்தேகம் இருப்பதாக கூறி தகராறு செய்தார்.

    பின்னர் தான் தயாராக வைத்திருந்த நைலான் கயிற்றை எடுத்து அனுஷாவை கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.

    பின்னர் மனைவியின் செல்போனில் இருந்து தனக்கும், அவரது பெற்றோர் மற்றும் சகோதரருக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். அதில் அதே ஊரை சேர்ந்த பிரசாத் என்பவர் தன்னை துன்புறுத்துவதாகவும் அதனால் தற்கொலை செய்வதாக கூறப்பட்டு இருந்தது.

    இதனைக் கண்ட அனுஷாவின் பெற்றோர், உறவினர்கள் பிரசாத்தின் வீட்டை தாக்க வந்தனர். இதுகுறித்து பிரசாத் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அனுஷாவின் உறவினர்களை சமாதானப்படுத்தினர்.

    பிரசாத்தை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அனுஷாவுக்கும், பிரசாத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிந்தது.

    ஜெகதீஷ் மீது போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அனுஷாவை தனக்கு பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்ததால் மனைவியை நைலான் கயிற்றால் இறுக்கி கொலை செய்ததாகவும், கொலை செய்யும்போது தடயம் இல்லாமல் தப்பிப்பது எப்படி என யூடியூப் பார்த்து தெரிந்து கொண்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.

    இதனைக் கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகதீஷை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    ×