search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CANvIRE"

    • அயர்லாந்து 53 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்தது.
    • ஜார்ஜ் டாக்ரெல் ஆட்டமிழக்காமல் 23 பந்தில் 30 ரன்கள் எடுத்தும் பயனில்லை.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. நேற்றிரவு நியூயார்க்கில் நடைபெற்ற போட்டியில் கனடா- அயர்லாந்து அணிகள் மோதின. முதலில் விளையாடிய கனடா 7 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் நிக்கோலஸ் கிர்ட்டன் 49 ரன்களும், ஷ்ரேயாஸ் மோவ்வா 37 ரன்களும் அடித்தனர்.

    இங்கிலாந்து போன்ற முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த அணி அயர்லாந்து. அதனால் கத்துக்குட்டி அணியான கனடாவை அயர்லாந்து எளிதா வீழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் கனடா பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக பந்து வீச அயர்லாந்து தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமழிந்தனர்.

    பால்பிரைன் (17), பால் ஸ்டிர்லிங் (9), டக்கர் (10), ஹாரி டெக்கர் (7), கேம்பர் (4) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 53 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    ஜார்ஜ் டாக்ரெல் ஆட்டமிழக்காமல் 23 பந்தில் 30 ரன்களும், மார்க் அடெர் 24 பந்தில் 34 ரன்கள் எடுத்தும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை. அயர்லாந்து அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் கனடா 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் இத்தொடரில் முதல் வெற்றியை ருசித்துள்ளது.

    ×