search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Championship of Legends"

    • வெற்றியை கொண்டாடும் விதமாக யுவராஜ் சிங், ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை போன்ற நடந்து டான்ஸ் ஆடினர்.
    • நாங்கள் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்த விரும்பவில்லை.

    முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கான லெஜெண்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணியில் முன்னாள் வீரர்களான யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் விளையாடினர்.

    வெற்றியை கொண்டாடும் விதமாக யுவராஜ் சிங், ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை போன்ற நடந்து டான்ஸ் ஆடினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. ஆனால் மாற்றுதிறனாளிகளை கிண்டல் செய்வது போல் உள்ளதாக விமர்சனம் எழுந்தது. இதனால் 3 பேருக்கு டெல்லியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் 15 நாட்கள் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடிய பிறகு எங்கள் உடலின் வலியைப் பிரதிபலிக்கும் வகையில் மட்டுமே இந்த வீடியோவை பதிவிட்டோம் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சமூக ஊடகங்களில் தௌபா தௌபாவின் வீடியோக்களைப் பற்றி புகார் செய்யும் எங்கள் மக்களுக்குத் அதற்கான காரணத்தை தெளிவுபடுத்த விரும்புகிறோம். நாங்கள் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்த விரும்பவில்லை. ஒவ்வொரு தனிமனிதனையும் சமூகத்தையும் நாங்கள் மதிக்கிறோம்.

    15 நாட்கள் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடியதால் எங்கள் உடல் வலியை பிரதிபலிக்கும் வகையில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது. நாங்கள் யாரையும் அவமதிக்கவோ அல்லது புண்படுத்தவோ முயற்சிக்கவில்லை.. இன்னும் மக்கள் நாங்கள் ஏதாவது தவறு செய்ததாக நினைத்தால்.. அனைவரும் மன்னிக்கவும்.. ப்ளீஸ் இதை இங்கே நிறுத்திவிட்டு முன்னேறுவோம். மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள். அனைவரையும் விரும்புகிறேன்.

    இவ்வாறு ஹர்பஜன் தெரிவித்தார்.

    • லெஜெண்ட்ஸ் சாம்பியன்ஷிப்பில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் ஆனது.
    • வெற்றி கொண்டாட்டத்தின்போது அவர்கள் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்திய அணியின் முன்னாள் வீரர்களான யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் லெஜெண்ட் கிரிக்கெட்டில் விளையாடினர். இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    வெற்றியை கொண்டாடும் விதமாக யுவராஜ் சிங், ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை போன்ற நடந்து டான்ஸ் ஆடினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. ஆனால் மாற்றுதிறனாளிகளை கிண்டல் செய்வது போல் உள்ளதாக விமர்சனம் எழுந்தது.

    இந்த நிலையில் மூன்று பேருக்கு டெல்லியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதனால் தகவல் தொழில்நுட்பம் சட்டத்தை (2000) மீறியதாக மெட்டா இந்தியாவின் மானேஜிங் டைரக்டரும், துணை தலைவருமான சந்தியா தேவநாதன் மீதும் புகர் அளிக்கப்பட்டுள்ளது.

    டெல்லி போலீசார் இந்த புகாரை சைபர் பிரிவிற்கு அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான வெறும் மன்னிப்பு கேட்டால் மட்டுமு் போதாது. அவர்களுடைய நடவடிக்கைக்காக தண்டனை வழங்கப்பட வேண்டும் என புகார் அளித்தவர் தெரிவித்துள்ளார்.

    ×