search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK 2-year"

    • பவானி நகர தி.மு.க. சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • இது போன்று பல திட்டங்களை முதல்-அமைச்சர் மக்களுக்காக செய்து வருகிறார்.

    பவானி:

    பவானி நகர தி.மு.க. சார்பில் பவானியில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்க பொது க்கூட்டம் நடைபெற்றது. ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமை வகித்தார். அவை த்தலைவர் மாணிக்கராஜ், நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன், நகர பொருளாளர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பவானி நகர தி.மு.க. செயலாளர் நாகராசன் வரவேற்று பேசினார்.

    இதில் சிறப்பு அழைப்பா ளராக ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான முத்துசாமி கலந்து கொண்டு 2 ஆண்டு கால ஆட்சியின் சிறப்பை பற்றி கூடியிருந்த மக்களிடையே விளக்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    276 கோடி முறை பெண்கள் பஸ்சில் பயணம் செய்துள்ளதாகவும், அதன் மூலம் 4426 கோடி ரூபாய் அரசிற்கு செலவு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த தொகை பெண்களுக்கு சேமிப்பாக உள்ளது. அரசு அதை ஏற்று கொண்டு உள்ளது எனவும், அதேபோல் முதல்- அமைச்சர் இலவசம் என கூற கூடாது கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் பெண்கள் என கூறுங்கள் என அறிவுறுத்தி பேசினார்.

    தற்போது 6-ம் வகுப்பு சேர்க்கை உயர்ந்துள்ளது. 8-ம் வகுப்பு இடையில் நின்ற மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. கல்லூரியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை கூடியுள்ளது. சாதாரண மக்கள் தங்கள் குழந்தைகள் படிக்க வேண்டும். எதிர்காலத்தில் அவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என நினைக்கி ன்றனர். தமிழகத்தில் இருந்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிப்பு படிக்கும் மாணவர்கள் குறைந்து வருகின்றனர்.

    வடமாநிலத்தில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரு காலத்தில் நம் மாநிலத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகமாக படிக்கும் மாணவர்கள் இல்லாமல் போய்விடும். இதற்காக முதல்-அமைச்சர் இந்த தேர்வு நடக்கும் முன்னதாக பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன் முறையாக ரூ.7,500, 2-வது முறையாக தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ரூ.25,000 வழங்கி வருகிறார்.

    ஏனென்றால் அவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்தி வெற்றி பெற வேண்டும் எனவும், நம் மாநில மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்று பல்வேறு மாநிலங்களில் பணியாற்ற வேண்டும் என இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இது போன்று எண்ணற்ற பல திட்டங்களை இந்த 2 ஆண்டில் முதல்-அமைச்சர் மக்களுக்காக செய்து வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. பி.ஜி.நாராயணன், மாவட்ட துணைச்செயலாளர் அறிவானந்தம், மாவட்டத்துணை அமைப்பாளர் சுப்பிரமணி, முன்னாள் இளைஞர் அணி அமைப்பாளர் தவமணி, உட்பட மாவட்ட, ஒன்றிய, நகர தி.மு.க. கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பவானி நகர துணைச்செயலாளர் முருகேசன் நன்றி கூறினார்.

    ×