search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Edible Oil"

    • எண்ணெய் இறக்குமதிக்கான வரி 25 சதவீதம் உயர்வு.
    • லிட்டருக்கு ரூ.30 வரை கூடியுள்ளது.

    சென்னை:

    எண்ணெய் இறக்குமதிக்கான வரியை மத்திய அரசு 25 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. இதனால் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    பெட்ரோல், டீசல், தங்கம், வெள்ளியை போல எண்ணெய் விலையும் தினமும் நிர்ணயிக்கப்படுகிறது.

    அனைத்து சமையல் எண்ணெய், கடலை எண்ணெய், தீப எண்ணெய் வகைகள் திடீரென உயர்ந்துள்ளன. எண்ணெய் மார்க்கெட்டில் தினசரி நிர்ணயிக்கப்படும் விலை கடந்த 3 நாட்களாக அதிகரித்துள்ளது.


    பாமாயில் ஒரு லிட்டருக்கு ரூ.15 உயர்ந்துள்ளது. 90 ரூபாய்க்கு விற்கப்பட்ட பாமாயில் மளிகை கடைகளில் தற்போது ரூ.110 வரை விற்கப்படுகிறது.

    சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணை போன்றவை லிட்டருக்கு ரூ.30 வரை கூடியுள்ளது. சில்லரை வியபாரிகள் மொத்த வியாபாரிகளிடம் எண்ணெய் ஆர்டர் கொடுக் கும் போது விலையேற்றத்தை கூறியதோடு மட்டுமின்றி இன்னும் விலை உயர வாய்ப்பு இருப்பதாக தெரி வித்தனர்.

    மளிகைக் கடைகளில் உயர்த்தப்பட்ட திடீர் எண்ணெய் விலையை கேட்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து மளிகை கடை வியாபாரிகள் கூறும்போது, எல்லா எண்ணெய் வகைகளும் 3 நாட்களில் உயர்ந்து விட்டன. மத்திய அரசின் இறக்குமதி வரி உயர்வின் காரணமாக இந்த விலையேற்றம் ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படு கிறார்கள்.

    தற்போது பண்டிகை காலம் என்பதால் எண்ணெய் பயன்பாடு அதிகரித்து உள்ளது. ஓட்டல்களில், இனிப்பு, காரம் தயாரிப்பு களுக்கு பயன்படுத்தப்படும் பாமாயில் விலை உயர்வு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தீபாவளி பண்டு பிரித்து இருப்பவர்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு எண்ணெய், இனிப்பு வழங்கு வார்கள். இந்த விலை உயர்வு அவர்களையும் பாதித்துள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    சென்னையில் உள்ள எண்ணெய் உற்பத்தி நிறுவனம் தரப்பில் கூறும்போது, இறக்குமதி வரியின் காரணமாக எல்லா எண்ணெய் வகைகளும் உயந்துள்ளன. பாமாயில் விலை 10 பாக்கெட்டுகள் கொண்ட பெட்டிக்கு ரூ.100 உயர்ந்தது. தீப எண்ணெய் பெட்டி ரூ.1035-ல் இருந்து ரூ.1230 ஆக உயர்ந்தது என்றார்.


    கடலை பருப்பு

    இதே போல கடலை பருப்பு விலை கிலோவிற்கு 15 ரூபாய் கூடியுள்ளது. ரூ.90-க்கு விற்கப்பட்டது. தற்போது ரூ.105 ஆக கூடியுள்ளது. பச்சை பட்டாணி, வெள்ளை மூக்கடலை போன்றவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.

    • சர்வதேச சந்தையில் இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்களின் விலையில் சரிவு.
    • உள்நாட்டுச் சந்தையிலும் அதற்கு ஏற்றவாறு, விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை.

    மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை சார்பில் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில், சர்வதேச சந்தையில் இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்களின் விலையில் ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் உள்நாட்டுச் சந்தையிலும் அதற்கு ஏற்றவாறு, விலைக்குறைப்பு நடவடிக்கையை உறுதிபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

    இதன் அடிப்படையில் சமையல் எண்ணெயின் விலையை அதிகபட்ச சில்லரை விலையில் 15 ரூபாய் உடனடியாக குறைக்கப்படுவதை உறுதி செய்யுமாறு முன்னணி சமையல் எண்ணெய் சங்கங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    விலை குறைப்பு எந்த வகையிலும் நீர்த்துப்போகாமல் இருக்க, உற்பத்தியாளர்களும் சுத்திகரிப்பாளர்களும்விநியோகஸ்தர்களுக்கு விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன் பயன் நுகர்வோருக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சமையல் எண்ணெய்களின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்ததை அடுத்து, கடந்த மே மாதம் முன்னணி சமையல் எண்ணெய் சங்கங்களுடன் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை நடத்திய ஆலோசனை கூட்டத்தில், ஃபார்ச்சூன் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் 1 லிட்டர் பேக்கின் விலை ரூ.220-லிருந்து ரூ. 210 –ஆகக் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவில் கடந்த மாதம் லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை விலை குறைக்கப்பட்டது.
    • ஒரே கம்பெனியின் சமையல் எண்ணெய் விலை, வெவ்வேறு மண்டலங்களில் வேறுபாடாக இருக்கிறது.

    புதுடெல்லி :

    இந்தியா தனது சமையல் எண்ணெய் தேவையில், 60 சதவீதத்தை இறக்குமதி செய்து வருகிறது. கடந்த சில மாதங்களாக, சர்வதேச சந்தையில் விலை அதிகரித்து வந்ததால், இந்தியாவில் அதன் சில்லரை விலையும் அதிகரித்து வந்தது. ஆனால், சமீபகாலமாக சர்வதேச சந்தையில் விலை குறைந்து வருகிறது. அதனால், இந்தியாவில் கடந்த மாதம் லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை விலை குறைக்கப்பட்டது.

    அதன் பிறகும் சர்வதேச சந்தை விலை குறைந்திருப்பதால், அதுபற்றி விவாதிக்க மத்திய உணவு செயலாளர் சுதன்சு பாண்டே, அனைத்து சமையல் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கங்கள் மற்றும் பெரும் உற்பத்தியாளர்கள் கூட்டத்தை நேற்று கூட்டினார். அதன்பிறகு அவர் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும், சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை 10 சதவீதம் குறைந்திருப்பதால், அதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு அளிக்குமாறு வலியுறுத்தினோம். விலையை 10 ரூபாய் குறைக்குமாறு கூறினோம். அதற்கு பெரும் உற்பத்தியாளர்கள், அடுத்த வாரத்துக்குள் பாமாயில், சோயாபீன், சன்பிளவர் ஆயில் போன்ற இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து எண்ணெய்களின் விலையை ரூ.10 குறைப்பதாக உறுதி அளித்தனர்.

    இந்த எண்ணெய்கள் விலை குறைந்தால், இதர சமையல் எண்ணெய்கள் விலையும் குறைந்துவிடும். மேலும், ஒரே கம்பெனியின் சமையல் எண்ணெய் விலை, வெவ்வேறு மண்டலங்களில் ரூ.3 முதல் ரூ.5 வரை வேறுபாடாக இருக்கிறது. எனவே, நாடு முழுவதும் ஒரே மாதிரி விலையை நிர்ணயிக்குமாறு கூறினோம். அவர்களும் ஒப்புக்கொண்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×