search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Financial credit"

    • ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், தேசிய வேளாண் சந்தை திட்டம் (இ-நாம்) செயல்படுத்தப்படுகிறது.
    • விளை பொருளுக்குரிய தொகை உடனடியாக சம்பந்தப்பட்ட விவசாயியின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    தேசிய வேளாண் சந்தை திட்டம் மற்றும் பொருளீட்டு கடன் திட்டங்களை பயன்படுத்தி பயன்பெறலாம் என திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் வனிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், தேசிய வேளாண் சந்தை திட்டம் (இ-நாம்) செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகள் பொருட்களுக்கு அதிக விலை கிடைப்பதுடன், கொள்முதல் செய்த விளை பொருளுக்குரிய தொகை உடனடியாக சம்பந்தப்பட்ட விவசாயியின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

    வேளாண் விளைபொருட்களுக்கு விலை வீழ்ச்சியடையும் போது விளை பொருட்களை குறைந்த வாடகையில் 6 மாதம் வரை இருப்பு வைக்கும் வசதியும் உள்ளது. விலை உயரும் போது விற்பனை செய்யும் வகையிலான கிடங்கு வசதியும் உள்ளது. கிடங்குகளில் இருப்பு வைக்கும் விளைபொருட்கள் அடிப்படையில், பொருளீட்டுக்கடன் வழங்கப்படும். விவசாயிகளுக்கு 5 சதவீத வட்டியில் அதிகபட்சம் மூன்று லட்சம் ரூபாய் வரையில் பொருளீட்டு கடன் வழங்கப்படுகிறது. வியாபாரிகளுக்கு பொருளீட்டு கடனாக 9 சதவீத வட்டியில் அதிகபட்சம் 2லட்சம் ரூபாய் வரை பொருளீட்டுக்கடன் வழங்கப்படும்.ஒழுங்குமுறை விற்பனைக்கூட சேவைகளை பயன்படுத்தி விவசாயிகளும் வியாபாரிகளும் பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×