என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Five Great Festival"
- சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, கவிஞர்களுக்கு பரிசளிப்பு விழா, விளையாட்டு வீரர்களுக்கு பரிசளிப்பு விழா உள்பட ஐம்பெரும் விழா நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் சீர் மரபினர் நலச்சங்கத்தினர், இலக்கிய பேரவையினர், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கம்பம்:
கம்பத்தில் நண்பர்கள் சமூக இலக்கிய பேரவை மற்றும் சீர் மரபினர் நலச்சங்கம் இணைந்து நடத்திய கம்பத்தின் முதல் நகரத் தலைவர் ராமசாமி நூற்றாண்டு விழா, பேராசிரியர் புதியவனின் நூல் வெளியீட்டு விழா, சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, கவிஞர்களுக்கு பரிசளிப்பு விழா, விளையாட்டு வீரர்களுக்கு பரிசளிப்பு விழா என ஐம்பெரும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பேராசிரியர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். சமூக இலக்கிய பேரவை செயலாளர் சேகர் வரவேற்றார். தேனி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. உரையாற்றினார். கம்பம் நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன், கம்பம் நகர தி.மு.க. செயலாளர் வீரபாண்டியன், ராயப்பன்பட்டி எஸ்.யு.எம் பள்ளி தாளாளர் பிரபாகர், கம்பம் ஜமாத் கமிட்டி தலைவர் ஜெயினுலாபுதீன், கம்பம் தூய ஆரோக்கிய அன்னை ஆலய பங்குத்தந்தை செபாஸ்டின் டைட்டஸ், கம்பம் ஆர்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் ராஜாங்கம், த.மு.எ.க.ச. மாநில குழு சிவாஜி, வைகை தொல்லியல் பண்பாட்டுக் கழகம் பாவெல் பாரதி, தொழிலதிபர் அன்பழகன், கவிஞர் பாரதன் உட்பட பலர் பேசினர்.
தேசிய செட்டியார்கள் பேரவை தலைவர் ஜெகநாத் மிஸ்ரா நூல் வெளியிட ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., ஓய்வு பெற்ற எஸ்.பி. ராமகிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி உதவி பேராசிரியர் முகமது ரபிக் என்ற மானசிகன் நூலை அறிமுகம் செய்து பேசினார். கம்பம் முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் ஏற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் சீர் மரபினர் நலச்சங்கத்தினர், இலக்கிய பேரவையினர், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- 62 வகை விசேஷ ஹோமங்கள் நடைபெற்றது
- ஆரோக்யலஷ்மிக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது
வாலாஜா:
வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் 18-வது ஆண்டு வருஷாபிஷேக விழா, பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் 62-வது ஜெயந்தி விழா, தீர்த்தக்குளம் திறப்பு விழா, ஸ்தல வரலாறு நூல் வெளியீட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை அடங்கிய ஐம்பெரும் விழா நேற்று தொடங்கி வருகிற 11-ம் தேதி முடிய நடைபெறுகிறது.
விழாவில் முதல் நாளான நேற்று மங்கள இசையுடன் கோ பூஜை, விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கி, மஹா கணபதி, நட்சத்திர நவக்கிரக பூஜை, ஸ்ரீ தன்வந்திரி, ஏகாதச ருத்ர ஹோமம் உள்பட 62 வகை விசேஷ ஹோமங்கள் நடைபெற்றது. பின்னர் மஹா தீபாராதனையுடன் ஸ்வாமிகளுக்கு கலசாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் 62 சுமங்கலிகள், 62 கன்னி பெண்கள் பங்கேற்ற சுமங்கலி, கன்யா பூஜைகள் நடைபெற்றது.விழாவில் ஸ்தல வரலாறு நூல் வெளியிடப்பட்டு சாதுக்களுக்கு வஸ்திரம், 5கிலோ அரிசி உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.பின்னர் மூலவர் ஸ்ரீ தன்வந்திரிக்கு சிறப்பு பூஜையும், ஸ்ரீ ஆரோக்யலஷ்மி தாயாருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.
மாலையில் வாலாஜா ஸ்ரீ நடராஜ பெருமான் நாட்டிய பள்ளி எம்.ஷன்மதி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக தவத்திரு.கூனம்பட்டி ஆதினம், கலவை சச்சிதானந்த சுவாமிகள், நங்க நல்லூர் காமாட்சி ஸ்வாமிகள், பெலாகுப்பம் ஸ்ரீலஸ்ரீ ரகுராம அடிகளார், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், சிப்காட் நவசபரி ஐயப்பன் கோவில் குருசாமி ஜெயச்சந்திரன் ஸ்வாமிகள், வாலாஜா தாசில்தார் நடராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாளை (28-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி அளவில் மணப்பாறை ஒன்றியம் உள்ள தியாகேசர் ஆலை மைதானத்தில், ஐம்பெரும் விழா நடைபெறுகிறது.
- விழாவில் கழக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குகிறார்.
திருச்சி:
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாளை (28-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி அளவில் மணப்பாறை ஒன்றியம் உள்ள தியாகேசர் ஆலை மைதானத்தில், ஐம்பெரும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் கழக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குகிறார்.
இதையடுத்து மணப்பாறை ஒன்றிய தி.மு.க. சார்பில் அகில இந்திய அளவிலான கபடி போட்டி துவக்கி வைத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்குகிறார். மணப்பாறை ஒன்றிய தி.மு.க. அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா, கழகத் தலைவராக பொறுப்பேற்று நான்காம் ஆண்டு நிறைவு விழா, மணப்பாறையில் தொகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைய உத்தரவிட்ட முதல்-அமைச்சருக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவிக்கிறார்.
இந்த நிகழ்ச்சிகளில் தலைமைக் கழக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்