search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hindu sena"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சில தினங்களுக்கு முன்பு தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
    • மந்திரம் நோயை குணப்படுத்தி, தீய சக்திகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்கும் பண்புகளை கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

    அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

    அதிபர் தேர்தலை ஒட்டி அந்நாட்டு தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இரு வேட்பாளர்களும் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

    இதில் டிரம்ப் நூலிழையில் உயிர்தப்பினார். இந்த சம்பவம் உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

     

    இந்நிலையில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான கொலை முயற்சியை தொடர்ந்து, டெல்லியின் இந்து சேனா அமைப்பினர் அவரது நலம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக 'சிறப்பு ஹோமம்' நடத்தினர்.

    டெல்லியில் உள்ள தில்ஷத் கார்டனில் உள்ள மா பக்லமுகி சாந்தி பீடத்தில், 1.25 லட்சம் புனித மஹாமிருத்யுஞ்சய் மந்திரத்தை உச்சரிக்கும் மகாமிருத்யுஞ்சய் ஜப ஹோம யாகத்தை பூசாரிகள் நடத்தி உள்ளனர். இந்த மந்திரம் நோயை குணப்படுத்தி, தீய சக்திகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்கும் பண்புகளை கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

    இதுதொடர்பாக இந்து சேனாவின் செய்தி தொடர்பாளர், முன்னாள் அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்து தங்களுக்கு கவலைகள் இருப்பதாகவும், அவருக்கு உதவ தெய்வீக தலையீடு தேவை என்றும் தெரிவித்துள்ளார்.

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல் பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யும்படி மனுதாரருக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கமல் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதையடுத்து கமலுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது.  டெல்லி நீதிமன்றத்தில் கமலுக்கு எதிராக இந்து சேனா அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தா வழக்கு தொடர்ந்தார்.


    இவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதிகள் முன்பு, இந்துக்களுக்கு எதிராக பேசியதால் கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.  

    இதற்கிடையே குறுக்கிட்ட நீதிபதிகள் நீங்கள் ஏன் இதில் தலையிடுகிறீர்கள்? என மனுதாரருக்கு கேள்வி எழுப்பினர்.

    தான் ஒரு இந்து என்பதால் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளேன் என்று மனுதாரர் விஷ்ணு குப்தா தரப்பில் வாதிடப்பட்டது.

    இதையடுத்து நீதிபதிகள், கமல் பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஆதாரங்களை ஆய்வு செய்த பின் கமலுக்கு சம்மன் அனுப்பலாமா, வேண்டாமா என்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று கூறினர்.

    இந்நிலையில் இந்து சேனா அமைப்பு தொடர்ந்த வழக்கை ஆக.2-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
    ×