search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "In Perumal temples"

    • வெள்ளைக்கரடு மலை கோவில் திம்மராய பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீதேவி- பூதேவி பெருமாள் சாமிக்கு 108 திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடை பெற்றது.
    • அதனைத் தொடர்ந்து உற்சவ மூர்த்தி அலங்க ரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    எடப்பாடி:

    எடப்பாடி அடுத்த வெள்ளைக்கரடு மலை கோவில் திம்மராய பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீதேவி- பூதேவி பெருமாள் சாமிக்கு 108 திரவியங்களால் சிறப்பு

    அபிஷேகம் நடை பெற்றது. இதையடுத்து மலர் அலங்கா ரத்தில் சாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    அதனைத் தொடர்ந்து உற்சவ மூர்த்தி அலங்க ரிக்கப்பட்ட தேரில் எழுந்த ருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேளம், தாளம் முழங்க பெண்கள் சீர் தட்டுகளுடன் ஊர்வலமாக வெள்ளாண்டி வலசு, புதுப்பேட்டை, பழைய பேட்டை, நடுத்தெரு வீரப்பம்பாளையம் வழி யாக வந்து கோவிலை அடைந்தனர்.

    தொடர்ந்து கோவில் கொடிமரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது. பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோஷ மிட்டனர். அதைத் தொடர்ந்து திம்மராய பெருமாள் சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. மேலும் திம்மராய பெருமாள் கோவிலில் உள்ள பிரம்மாண்ட ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம், துளசி மாலை, வெற்றிலை மாலை, வடை மாலை அலங்காரங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் அன்னதான வழங்கப்பட்டது

    விழா ஏற்பாடுகளை 2-ம் சனிக்கிழமை கட்டளை தாரர்கள் மருத்துவர் சமுதா யத்தினர் ராமு பண்டிதர், கிட்டு பண்டிதர், ஞானப்பிரகாசம், சிவப்பிரகாசம், சண்முக சுந்தரம், ஜெய கிருஷ்ணன், சரவண பெருமாள், மதியழகன், ராமகிருஷ்ணன், ராஜமாணிக்கம், ஆனந்தராஜ், குப்புசாமி, முத்துவேல், காமராஜ், ராஜா, பிரபு, சூர்யா, தாமரைச்செல்வன், விஜயராஜ், சவுந்தர்ராஜன், பூபால கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர் .

    இதே போல் பழைய எடப்பாடி சென்றாய பெருமாள் கோவில், மேட்டுதெரு சவுந்தரராஜ பெருமாள் சன்னதி, எடப்பாடி மூக்கரை நரசிம்ம பெருமாள் ஆலயம், பூலாம்பட்டி பகுதியில் உள்ள மாட்டு பெருமாள் மலைக்கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாதம் 2-ம் சனிக்கிழ .மையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்களை கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.

    சேலம்:

    சேலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.

    கோட்டை பெருமாள்: சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவிலில் இன்று காலை சிறப்பு அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடந்தது. அதன்பின்னர் அழகிரிநாதர் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சேலம் சின்னக்கடை வீதியில் உள்ள பட்டை கோவில் பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவிலில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவில், பெரமனூர் வெங்கடேச பெருமாள் கோவில், ஜாகீர் அம்மாபாளையம் வரபிரசாத ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட பூஜைகள் நடந்தது. இதேபோல் ஆனந்தா இறக்கம் அருகே உள்ள லட்சுமி நாராயணசாமி கோவில், செவ்வாய்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோவில், செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவில், அயோத்தியாப்பட்டணம் ராமர் கோவில், சின்னத் திருப்பதி வெங்கடேச பெருமாள்கோவில், அழகாபுரம் வெங்கடேசுவரா பாலாஜி டிரஸ்ட் கோவில், உடையாப்பட்டி சென்றாய பெருமாள் கோவில், கடைவீதி வேணுகோபாலசுவாமி கோவில், நாமமலை பெருமாள் கோவில், நெத்திமேடு கரியபெருமாள் கோவில் உள்பட பல்வேறு பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.

    ×