search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jasmine flower is"

    • பனி அதிகமாக பொழிந்து வருவதால் சம்பங்கி, மல்லிகை உள்ளிட்ட பூக்கள் செடியி லேயே கருகுகிறது.
    • தை மாதத்தில் கடைசி முகூர்த்த நாள் என்பதால் பூக்களின் தேவை அதிகமாக உள்ளது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றியுள்ள பகுதிகளில் மல்லிகை, முல்லை, கனகாம்பரம், ரோஜா, சம்பங்கி, அரளி உள்ளிட்ட பூ வகைகளை விவசாயிகள் பல ஏக்கரில் பயிரிட்டுள்ளனர்.

    பூக்கள் பறிக்கப்பட்டு சத்தியமங்கலம் விவசாயி களால் நடத்த ப்படும் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. வியாபாரிகள் பூக்களை வாங்கி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநில ங்களுக்கும், கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பு கின்றனர்.

    இங்கு பண்டிகை காலம், திருமண முகூர்த்த நாட்கள் மற்றும் முக்கிய நாட்களில் பூக்களின் விற்பனை அதிகமாக இருக்கும். பூக்கள் வரத்துக்கு ஏற்ப விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனை செய்யப்படும்.

    இந்நிலையில் விசேஷ நாட்களின்போது பூக்களுக்கு கிராக்கி அதிகம். தற்போது பனி அதிகமாக பொழிந்து வருவதால் சம்பங்கி, மல்லிகை உள்ளிட்ட பூக்கள் செடியி லேயே கருகுகிறது. இதனால் விளைச்சல் குறைந்து பூக்கள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

    மேலும் தமிழ்நாடு, கேரளாவில் முகூர்த்த நாள் என்பதால் பூக்களின் தேவை அதிகமாக இருந்தது. குறிப்பாக தை மாதத்தில் கடைசி முகூர்த்த நாள் என்பதால் பூக்களின் தேவை அதிகமாக உள்ளது.

    சத்தி பூ மார்க்கெட்டில் இந்த மாத தொடக்கத்தில் கிலோ ரூ.1,300-க்கு விற்ற மல்லிகை பூ நேற்று கிலோ ரூ.3 ஆயிரத்திற்கும், ரூ.1,200-க்கு விற்ற முல்லைப்பூ ரூ.2,900-க்கு விற்பனையானது. சம்பங்கி பூ ரூ.120-க்கு விலை உயர்ந்து விற்பனையானது.

    இதோபோல் கனகாம்பரம் ரூ.500, காக்கடா பூ ரூ.600-1175, செண்டுமல்லி ரூ.18-54, கோழிக்கொண்டைப்பூ ரூ.10-110, அரளி ரூ.100, ஜாதி முல்லை ரூ.750-1000, துளசி ரூ.40, செவ்வந்திப்பூ ரூ.100-க்கு விற்பனை யானது.

    ×