search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KRP Dam"

    • தொழிற்சாலை கழிவுநீர் கலந்த நீரால் அணையில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன.
    • அணையில் மீதம் உள்ள மீன்களை பிடிக்க முடியாத அளவுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடந்த வாரம் பெய்த மழைநீருடன், அங்குள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட ரசாயன கழிவுநீரும் சேர்ந்து ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு கடும் துர்நாற்றத்துடன் நுரை பொங்க தண்ணீர் வந்தது.

    கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 15-ந் தேதி கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணைக்கு வந்தது. தொழிற்சாலை கழிவுநீர் கலந்த நீரால் அணையில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதனால் மீன் பிடிப்பவர்கள் கவலை அடைந்தனர்.

    இந்த தண்ணீர் அணையின் ஷட்டர் பகுதி வரையில் சென்ற நிலையில் நேற்று காலை 7 டன் அளவிற்கு மீன்கள் அணையில் செத்து மிதந்தன. இதனால் கடும் துர்நாற்றம் வீசியது. இது குறித்து மீன் பிடிக்கும் தொழிலாளர்கள் கூறியதாவது:-

    கடந்த வாரம் அணைக்கு வந்த கழிவுநீர் கலந்த நீரால் மீன்கள் செத்தன. நேற்று முன்தினம் இரவிலும் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதந்தன. தற்போது யாருமே அணைக்கு செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அணையில் மீதம் உள்ள மீன்களை பிடிக்க முடியாத அளவுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் மீன் பிடி தொழிலை நம்பி உள்ள 500-க்கும்மேற்பட்ட குடும்பத்தினரின் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இது தொடர்பாக மீன் வளத்துறை உதவி இயக்குனர் ரத்னம் கூறியதாவது:-

    ஆக்சிஜன் பற்றாக்குறையால் மீன்கள் இறந்திருக்கலாம். அணையில் இருந்து நீரை எடுத்து ஆய்வுக்காக அனுப்பி உள்ளோம். ஆய்வு முடிவுக்கு பிறகே மீன்கள் இறப்புக்கான காரணம் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.

    • கே.ஆர்.பி., அணை கட்டி முடிக்கப்பட்டு, 1957-ம் ஆண்டு அணை திறக்கப்பட்டது.
    • அணை நீர்மட்டம் கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் நேற்று வரை, 248 நாட்களாக தொடர்ந்து, 50 அடிக்கு மேல் அணையில் தண்ணீர் இருப்பு இருந்தது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அடுத்த பெரியமுத்துார் அருகே, பெண்ணை ஆற்றின் குறுக்கில், கே.ஆர்.பி., அணை கட்டி முடிக்கப்பட்டு, 1957-ம் ஆண்டு அணை திறக்கப்பட்டது. இதன் மூலம் நேரடியாக, 9,012 ஏக்கர் விவசாய நிலங்களும், மறைமுகமாக, 40,000 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெற்று வருகின்றன. அணை கட்டி முடித்து, 66 ஆண்டுகளில் கடந்த, 2017ல் அணையின் பிரதான ஒரு ஷட்டர் உடைந்ததால் முதல்முறையாக இந்த அணை அந்த ஆண்டில் நிரம்பவில்லை. புதிய ஷட்டர் மாற்றும் பணியால் அடுத்த 3 ஆண்டுகளும் அணை நிரம்பியது குறிப்பிடத்தக்கது.

    ஆனால், 63 ஆண்டுகளும், இந்த அணை நிரம்பி, எப்போதும் ஆற்றில் தண்ணீர் ஓடுவதால், இந்த அணையை, இம்மாவட்ட மக்கள் வரப்பிரசாதமாக கருதுகின்றனர்.

    இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டின் இறுதியில், 4 மாதங்கள் பரவலாக மழை பெய்ததால், கே.ஆர்.பி., அணைக்கு தொடர்ந்து நீர்வந்து கொண்டிருக்கிறது.

    அணை நீர்மட்டம் கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் நேற்று வரை, 248 நாட்களாக தொடர்ந்து, 50 அடிக்கு மேல் அணையில் தண்ணீர் இருப்பு இருந்தது.

    கடந்த, 2 மாதங்களாக மழை இல்லாததால், 248 நாட்களுக்கு பிறகு நேற்று, அணை நீர்மட்டம் மொத்த உயரமான, 52 அடியில், 49.95 அடியாக குறைந்தது. அணைக்கு, 132 கன அடிநீர் வந்து கொண்டிருந்த நிலையில் அணையில் இருந்து வாய்காலில் 192 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது.

    • கடந்த 3 நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து படிப்படியாக உயர்ந்துள்ளது.
    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பகலில் வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.

    கிருஷ்ணகிரி:

    தொடர் மழை எதிரொலியாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை நிரம்பியது. இதனால் தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை நிரம்பியது விடுக்கப்பட்டுள்ளது.

    தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தும், அதிகரித்தும் காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து படிப்படியாக உயர்ந்துள்ளது.

    அதன்படி கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 645 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை வினாடிக்கு 1066 கன அடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 50.65 அடியாக உள்ளது. இதற்கு மேல் அணையில் நீர் தேக்க முடியாது என்பதால் அணைக்கு வரும் நீர் முழுவதும் பாசன கால்வாய்கள், மதகுகள் வழியாக திறந்துவிடப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் பெய்யும் மழை பொறுத்து நீர்வரத்து திறக்க அதிகரிக்கக்கூடும் என்பதால், தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு, நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நீர்வரத்து அதிகமாகும்பட்சத்தில் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கக்கூடும். இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்பும் ஆகிய 5 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் வசிக்கக்கூடிய மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பகலில் வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி அணையில் 60.20 மில்லி மீட்டரும், போச்சம்பள்ளி 36.20, கிருஷ்ணகிரி 26, பர்கூர் 14.20, நெடுங்கல் 7, ராயக்கோட்டை 5, தேன்கனிக்கோட்டை 5 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    ×