search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kenndy MLA"

    • கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்
    • விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த தெசீர், வினோத் மற்றும் ராகேஷ், பாஸ்கல், மோரீஸ், ரகுமான் ஆகியோர் உடன் இருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகி றது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.

    இந்த நிலையில் உப்பளம் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சென்று தொகுதி எம்.எல்.ஏ. கென்னடி ஆறுதல் கூறினார். மேலும் தனது சொந்த செலவில் நிவாரண பொருட்கள் மற்றும் வீடுகளுக்கு தார் பாய்களை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியின் போது தொகுதி செயலாளர் சக்தி வேல், தி.மு.க. நிர்வாகிகள் ெஜயராமன், தங்கவேல், காத்தலிங்கம், நோயல், ராஜி, விநாயகமூர்த்தி, செல்வம், விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த தெசீர், வினோத் மற்றும் ராகேஷ், பாஸ்கல், மோரீஸ், ரகுமான் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • ரூ.41 லட்சத்து 70 ஆயிரம் செலவில் குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவறை,குளியல் அறை, கதவுகள் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் செய்வதற்கான தொடக்க விழா நடந்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி உப்பளம் தொகுதிக் குட்பட்ட அப்துல்கலாம் அரசு குடியிருப்பு பகுதியை புனரமைத்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.

    இந்நிலையில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.41 லட்சத்து 70 ஆயிரம் செலவில் குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவறை,குளியல் அறை, கதவுகள் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் செய்வதற்கான தொடக்க விழா நடந்தது. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூஜை செய்து பராமரிப்பு பணிகளை தொடங்கி வைத்தார்.

    இதில் பொதுப்பணித் துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் (மத்திய) கோட்டம் செயற்பொறி யாளர் திருஞானம், உதவிப்பொறி யாளர் பார்த்தசாரதி இள நிலைப் பொறியாளர் ஜெய சந்திரன், தி.மு.க. நிர்வாகிகள் தங்கவேல், சக்திவேல், ஹரிகிருஷ்ணன், ராஜி, விநாயகமூர்த்தி, ராகேஷ், பாலாஜி, மோரிஸ், பஸ்கல், ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுப்பணி துறை தலைமை என்ஜினீயரிடம் கென்னடி எம்.எல்.ஏ. மனு
    • அப்துல்கலாம் அரசு குடியிருப்புகளை புதுப்பிக்கும் பணியை விரைந்து தொடங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை பொதுப்பணி துறை தலைமை பொறியாளர் வீரசெல்வத்தை கென்னடி எம்.எல்.ஏ. சந்தித்து தொகுதி பணிகள் குறித்து மனு அளித்தார்.

    உப்பளம் தொகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.3.31 கோடி மதிப்பீட்டில் சாலை அமைப்பது, வாய்க்கால் கட்டுவது, அம்பேத்கார் சிலையை புதுப்பித்து பூங்காவை சீரமைப்பது போன்ற பணிகளை தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும்.

    அதுபோல் அப்துல்கலாம் அரசு குடியிருப்புகளை புதுப்பிக்கும் பணியை விரைந்து தொடங்க வேண்டும். அதோடு கனிபாய் தோட்டம், வம்பா கீரப்பாளையம் முத்து மாரியம்மன் கோவில், வம்பா கீரப்பாளையம் தெப்பகுளம் வீதி, வம்பா கீரப்பாளையம் பழைய துறைமுகம் கலங்கரை விளக்கம் பின்புறம், உள்ளிட்ட 7 இடங்களில் ஹமாஸ் விளக்கு அமைத்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கென்னடி எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

    மனுவை பெற்றுக்கொண்ட தலைமை பொறியாளர் இப் பணிகளை விரைந்து முடித்துத் தருவதாக உறுதியளித்தார்.

    • ெகன்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • உப்பளம் சுப்பையா சாலை, காந்தி வீதி மற்றும் ஆம் பூர் சாலைகளை மேம் படுத்தும் பணி தொடக்க விழா நடந்தது.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதியில் சுப்பையா சாலை, மகாத்மாகாந்தி வீதியில் புஸ்ஸி வீதி முதல் சுப் பையா சாலை வரை மற்றும் நகர பகுதிக்குட் பட்ட, 22.675 கி.மீ நீளமுள்ள தார் சாலைகள் ரூ.10.83 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட உள்ளது.

    இத்திட்டத்தில் உப்பளம் சுப்பையா சாலை, காந்தி வீதி மற்றும் ஆம் பூர் சாலைகளை மேம் படுத்தும் பணி தொடக்க விழா நடந்தது. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் செல்வம், வீர கட்டடங் கள் மற்றும் சாலை கள் மத்திய கோட்ட செயற்பொறியாளர் திருஞானம், உதவிப் பொறியாளர் பன்னீர், இளநிலைப்பொறியாளர் வேல்முருகன் கலந்து கொண்டனர்.

    • கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்
    • திருநங்கை போன்றவர்கள் உதவித் தொகை பெறுவதற்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி சட்ட மன்ற உறுப்பினர் அலுவல கத்தில் நடந்தது.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதியில் மகளிர் மற்றும் குழந்தை கள் மேம்பாட்டு துறை மூலம் விதவை, முதிர் கன்னிகள், திருநங்கை போன்றவர்கள் உதவித் தொகை பெறுவதற்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது.

    இதில் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டையை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட் டுத்துறை அதிகாரிகள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் செல்வம், விநாயகமூர்த்தி, ராகேஷ், ரகுமான், பஸ்கல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கென்னடி எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
    • சுத்திகரிப்பு குடிநீர் வழங்கும் மையத்தில் விநியோகிக்கப்படும் தண்ணீர் சரியில்லை என்று கடந்த ஒருவாரமாக பொது மக்கள் குறை கூறி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி, அம்பேத்கர் சாலையில் பொதுப் பணித்துறை தண்ணீர் டேங்க் மற்றும் திருவள்ளுவர் வீதி எதிரில் அமைந்திருக்கும் சுத்திகரிப்பு குடிநீர் வழங்கும் மையத்தில் விநியோகிக்கப்படும் தண்ணீர் சரியில்லை என்று கடந்த ஒருவாரமாக பொது மக்கள் குறை கூறி வருகின்றனர்.

    இதனை அறிந்த தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி குடிநீர் மையத்தை கொட்டும் மழையில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது தரமற்ற குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை அறிந்தார்.அதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அதி காரிகளை நேரில் சந்தித்து சுத்திகரிக்கப்பட்ட (ஆர்.ஓ.) குடிநீர் மையத்தில் உள்ள பில்டரை உடனடியாக மாற்ற வேண்டும் என வலி யுறுத்தினார். அப்போது பொதுப் பணித்துறை உத விப்பொறியாளர் வாசன், இளநிலைப் பொறியாளர் வெங்கடேசன் ஆகியோர் உடனடியாக சரி செய்து புதிய பில்டரை பொருத்தி தருகிறோம் என்று

    எம்.எல்.ஏ.விடம் உறுதி யளித்தனர்.

    தி.மு.க. நிர்வாகி கள் இருதயராஜ். ராகேஷ், மோரிஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் உடையார் தோட்டத்தில் சமுதாய நல கூடம் புனரமைக்கும் பணி நடைபெறுகிறது.
    • தி.மு.க. நிர்வாகிகள் சக்திவேல், நோயல், சதிஷ், குணா, ராகேஷ், ரகுமான் ஆகியோர் உடன் இருந்தனர்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட திப்பு ராயப்பேட்டையில் வீடு இல்லாத 80-க்கு மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு ஸ்மார்ட் சிட்டி மூலம் அடுக்கு மாடி குடியிருப்பு திட்டம் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. முயற்சியால் கொண்டு வரப்பட்டது. அப்பணி அரசு மூலம் நடந்து வருகிறது.

    அதுபோல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் உடையார் தோட்டத்தில் சமுதாய நல கூடம் புனரமைக்கும் பணி நடைபெறுகிறது.

    இப்பணிகளை கென்னடி எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அங்கிருந்த ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகளிடம் பணியை விரைந்து முடிக்குமாறு கேட்டு கொண்டார்.

    அப்போது அவருடன் தி.மு.க. நிர்வாகிகள் சக்திவேல், நோயல், சதிஷ், குணா, ராகேஷ், ரகுமான் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கல்லறை புனரமைக்கப்படும் என உறுதி அளித்தார்.
    • ஆய்வின்போது தொகுதி நிர்வாகிகள் சக்திவேல், ராஜி, நோயல், செழியன், இருதயராஜ், ராகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகர் பகுதியில் உள்ள கிறிஸ்தவ கல்லறை பல ஆண்டுகளாக சரியாக பராமரிக்கப்படாமல் புதர் மண்டிகிடந்தது.

    இதனை புனரமைக்க கோரி அப்பகுதி மக்கள் கென்னடி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து கென்னடி எம்.எல்.ஏ. நேதாஜி நகர் கல்லறைக்கு சென்று ஆய்வு செய்து, சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கல்லறை புனரமைக்கப்படும் என உறுதி அளித்தார்.

    இது சம்பந்தமாக செயற் பொறியாளர் சிவபாலன், வருவாய் துறை அதிகாரி பிரபாகரனுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. தொடர்ந்து எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை ஏற்று தற்போது கிறிஸ்தவ கல்லறை சுவரில் வண்ணம் பூசப்பட்டுள்ளது.

    அங்கு புதிதாக 27 மின்விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் கல்லறை திருநாள் நிகழ்ச்சியை முன்னிட்டு அங்கு நடைபெற்று வரும் பணிகளை எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். ஆய்வின்போது தொகுதி நிர்வாகிகள் சக்திவேல், ராஜி, நோயல், செழியன், இருதயராஜ், ராகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.




    • முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கென்னடி எம்.எல்.ஏ.மனு
    • காவல்துறை மற்றும் தாசில் தார் முன்னிலையில் கூட்டம் நடத்தப்பட்டும் உடன்பாடு எட்டப்படவில்லை.

     புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி வம்பாகீரப்பாளையம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு அறங்காவல் குழு தேர்வு செய்வதில் நடுத்தெரு ஊர் பஞ்சாயத்தார் மற்றும் அங்காளம்மன் கோவில் பஞ்சாயத்தாரிடையே பிரச்சினை இருந்து வருகிறது.

    இதனால் கோவில் பூட்டப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக காவல்துறை மற்றும் தாசில் தார் முன்னிலையில் கூட்டம் நடத்தப்பட்டும் உடன்பாடு எட்டப்படவில்லை.

    இந்நிலையில் இதுசம்பந்த மாக நடுத்தெரு ஊர் பஞ்சாயத்தார் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி தலைமையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு கொடுத்தனர்.

    அப்போது நடுத்தெரு பொதுமக்கள் முன்னி லையில் கோவிலில் கூட்டம் போட்டு மக்களின் கருத்தை கேட்டு அறங்காவலர் குழு நிர்வாகிகளை முடிவு செய்ய ஆவண செய்ய வேண்டும். ஊர் கோவிலை திறக்க நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இது சம்பந்தமாக உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்ப தாக முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார்.

    • கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • அதிகாரிகளும் விரைந்து முடித்து தருவதாக உறுதியளித்தனர்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நேத்தாஜி நகர் 3 பகுதியில் புதியசாலை மற்றும் எல் வடிவ வடிக்கால் வாய்கால் அமைக்கப்படுகிறது. இப்பணியினை உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் இளநிலை பொறியாளர் சண்முகசுந்தரம் ஊர்பஞ்சாயத்தாரர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள், கட்சி நிர்வாகிகள் சக்திவேல், கண்ணன், ராஜி, அருள், கணேசன், சண்முகம், மனோஜ், ராமலிங்கம், வீரமுருகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது கென்னடி எம்.எல்.ஏ. இப்பணியை மக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து முடித்துத்தர நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.

    அதிகாரிகளும் விரைந்து முடித்து தருவதாக உறுதியளித்தனர்.

    • புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக நலத்துறை மூலம் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது.
    • அப்போது பயனாளி களிடம் தற்போது வழங்க ப்படும் உதவித்தொகையை 30 சதவீதம் உயர்த்தி வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக நலத்துறை மூலம் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது.

    இதில் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி கலந்து கொண்டு மாற்று திறனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.

    அப்போது பயனாளி களிடம் தற்போது வழங்க ப்படும் உதவித்தொகையை 30 சதவீதம் உயர்த்தி வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதற்காக வருகின்ற சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் வலியுறுத்தப்படும் என்று கூறினார்.

    இந்நிகச்சியில் துறை அதிகாரிகள், தி.மு.க. தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, மாநில இளைஞரணி ராஜி, மாநில மீனவர் அணி விநாயகம், கிளைச் செயலாளர் செல்வம், சங்கர நாராயணன், காலப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×