search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manu Bakher"

    • ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க வேட்டையை ஆரம்பித்துள்ளது.
    • மானு பாகெருக்கு ஜனாதிபதி திரவுபடி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து.

    பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் மானு பாகெர் பங்கேற்றார்.

    8 பேர் கலந்து கொண்டதில் இந்திய வீராங்கனை மானு பாகெர் 221.7 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்தார். இதன்மூலம் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தி, ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க வேட்டையை ஆரம்பித்துள்ளது.

    இதைதொடர்ந்து, வெண்கலப் பதக்கம் வென்ற மானு பாகெருக்கு ஜனாதிபதி திரவுபடி முர்மு, பிரதமர் மோடி, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மானு பாகெருக்கு காங்கிரஸ் எம்.பி, ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பாராட்டியுள்ளனர்.

    ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறுகையில், "பாரீஸ் ஒலிம்ப்பிக்கில் இந்தியா முதல் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது மிகவும் பெருமையாக உள்ளது. வெண்கல பதக்கத்தை கைப்பற்றி, ஒலிம்பிக் வரலாற்றில் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் பதக்கம் வென்று அசத்திய முதல் இந்தியரான மானு பாகெருக்கு வாழ்த்துகள். நமது மகள் சிறப்பான தொடக்கத்தை அளித்துள்ளார். இந்தியாவிற்கு மென்மேலும் பதக்கங்கள் குவியவுள்ளன" என்றார்.

    தொடர்ந்து, மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், " இந்தியா தனது ஒலிம்பிக் ஓட்டத்தை தகுதியான பதக்கத்துடன் தொடங்கியுள்ளது.

    பாரீஸ்2024-ல் பெண்களுக்கான 10மீ பிஸ்டல் போட்டியில் இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு வாழ்த்துகள்.

    உங்கள் சாதனை உங்களின் சிறப்பான திறமை மற்றும் விடாமுயற்சிக்கு சான்றாகும். நாங்கள் உங்களைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறோம்.

    இந்த முக்கியமான சந்தர்ப்பம் எண்ணற்ற இளம் விளையாட்டு வீரர்களை சிறந்து விளங்க பாடுபட ஊக்குவிக்கட்டும்" என்றார்.

    • ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க வேட்டையை ஆரம்பித்துள்ளது.
    • கொரிய வீராங்கனைகள் தங்கம், வெள்ளி பதக்கம் வென்றனர்.

    பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் மானு பாகெர் பங்கேற்றார்.

    8 பேர் கலந்து கொண்டதில் இந்திய வீராங்கனை மானு பாகெர் 221.7 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்தார். இதன்மூலம் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியதில், ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க வேட்டையை ஆரம்பித்துள்ளது.

    இதைதொடர்ந்து, வெண்கலப் பதக்கம் வென்ற மானு பாகெருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

    அந்த பதிவில், " இது ஒரு வரலாற்றுப் பதக்கம்!

    பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024ல் இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்றதற்காக மானு பாகெர்-க்கு வாழ்த்துகள்.

    இந்தியாவுக்காக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளதால், இந்த வெற்றி மேலும் சிறப்பு வாய்ந்தது" என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், பிரதமர் மோடியின் இந்த வாழ்த்துக்கு மானு பாகெர் நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மானு பாகெர் தனது எக்ஸ் பக்கத்தில், " உங்கள் வாழ்த்துக்களுக்காக மிக்க நன்றி பிரதமர் நரேந்திர மோடி. அனைத்து ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இது எனக்கு மிகப்பெரிய விஷயம்" என்றார்.

    ×