search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Metal statue"

    • 63 நாயன்மார்கள் உலோக சிலைகள் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட பழமையான விலை உயர்ந்த சாமி படங்கள், விலை மதிப்பு மிக்க நகைகள் இருந்ததாக தகவல்.
    • மடத்தின் நிர்வாகி ஒருவரிடம் கேட்கும் போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கிறார்.

    சுவாமிமலை:

    தஞ்சை மாவட்ட அனைத்து இந்து கூட்டமைப்பு சார்பில் அனுமன் சேனா கட்சியின் மாநில பொது செயலாளர் பாலா, அகில பாரத இந்து மகா சபா ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் ராம.நிரஞ்சன், அகில பாரத இந்து ஆன்மீக பேரவை மாநில இளைஞரணி பொது செயலாளர் கண்ணன், சிவசேனா தஞ்சை மாவட்ட நிர்வாகி குட்டி சிவகுமார் ஆகியோர் கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    கும்பகோணம் மகாமககுளம் அருகே உள்ள மவுன சாமிகள் மடம் கடந்த 1843-ம் ஆண்டு முதல் பக்தர்கள் வழிபாட்டில் இருந்து வருகிறது.

    இதற்கு முன்பாக இந்த மடம் 63 நாயன்மார்கள் மடமாக இருந்துள்ளது. தஞ்சை மாவட்டம் திருபுவனம் பகுதியை சேர்ந்த மவுன சாமிகள் இந்த மடத்தில் ஜீவ சமாதி அடைந்த பிறகு 63 நாயன்மார்கள் மடம் மவுன சாமிகள் மடம் என பெயர் மாற்றம் பெற்றது.

    இந்த மவுன சாமிகள் மடத்துக்கு சுவாமி விவேகானந்தர் வந்து சென்றுள்ளார். இத்தகைய சிறப்பு பெற்ற இந்த மடத்தில் பழமையான விலை மதிப்பு மிக்க 63 நாயன்மார்கள் உலோக சிலைகள் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட பழமையான விலை உயர்ந்த சாமி படங்கள், விலை மதிப்பு மிக்க நகைகள் இருந்ததாக தகவல்கள் தெரிய வருகிறது. ஆனால் தற்போது இந்த விலைமதிப்பு மிக்க உலோக சிலைகள், நகைகள் இந்த மடத்தில் இல்லை.

    இதுகுறித்து இந்த மடத்தின் நிர்வாகி ஒருவரிடம் கேட்கும் போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கிறார். இது பக்தர்களுக்கு பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

    எனவே மவுன சாமிகள் மடத்தில் இருந்ததாக கூறப்படும் விலை உயர்ந்த உலோக சிலைகள், தங்க நகைகள் குறித்து உரிய விசாரணை நடத்தி அவற்றை கண்டுபிடித்து கோயில்களில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளிநாட்டுக்கு கடந்த இருந்த சிலைகளை கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • அர்த்த நாதீஸ்வரர், சிவகாமி, புத்தர், கிருஷ்ணர், மயில் சிலை உள்ளிட்ட 7 உலோக சிலைகளை கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளிநாட்டுக்கு கடந்த இருந்த சிலைகளை கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் ஆரோவில்லில் உள்ள கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் 7 உலோக சிலைகள் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளதாக கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆரோவில் உள்ள கைவினை பொருட்கள் விற்பனை கடைக்கு விரைந்தனர். மேலும் அந்த கடையில் சோதனை செய்ததில் அர்த்த நாதீஸ்வரர், சிவகாமி, புத்தர், கிருஷ்ணர், மயில் சிலை உள்ளிட்ட 7 உேலாக சிலைகளை கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×