search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mohan Prasath"

    • திண்டுக்கல் அணிக்கு எதிராக நெல்லை அணி வெற்றி பெற்றது.
    • நெல்லை வீரர் மோகன் அஸ்வினை மன்கட் எச்சரிக்கை கொடுத்தது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

    டிஎன்பிஎல் தொடரின் நேற்று நடந்த ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 19.4 ஓவரில் 136 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனைதொடர்ந்து விளையாடிய நெல்லை அணி 17.5 ஓவரில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    முன்னதாக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங் செய்த போது 15-வது ஓவரை நெல்லை வீரர் மோகன் பிரசாத் வீசினார். அப்போது ஸ்டிரைக்கில் சிவம் சிங்கும் எதிர் முனையில் அந்த அணியின் கேப்டன் அஸ்வினும் இருந்தனர்.

    மோகன் முதல் பந்தை வீச வந்த போது அஸ்வினை மன்கட் முறையில் அவுட் செய்ய முயற்சித்தார். பிறகு நடுவரிடம் எச்சரிக்கை கொடுத்தார். அவர் மன்கட் அவுட் செய்ய முயன்ற போது ரசிகர்கள் உற்சாகத்தில் கத்தினர்.

    அஸ்வின் பலரை மன்கட் முறையில் அவுட் செய்துள்ளார். அவரையே நெல்லை வீரர் மோகம் மன்கட் முறையில் அவுட் செய்ய முயன்றது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கெதிராக ஒரே ஓவரில் 32 ரன்கள் வழங்கி மோசமான சாதனையை பதிவு செய்தார் மோகன் பிரசாத் #TNPL2018
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 21-வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. காரைக்குடி காளை அணிக்கெதிரான இந்த ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    ஆட்டத்தின் 16-வது ஓவரை காரைக்குடி காளை அணியின் மோகன் பிரசாத் வீசினார். இந்த ஓவரை திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் ஆர் விவேக் சந்தித்தார். முதல் பந்தை லாங்-ஆஃப் திசையில் சிக்சருக்கு தூக்கினார் விவேக். 2-வது பந்தை லாங்-ஆன் திசையில் சிக்சருக்கு தூக்கினார்.



    3-வது பந்தை டீப் எக்ஸ்ட்ரா கவரில் பவுண்டரிக்கு விரட்டினார். 4-வது பந்தை ஓவர் லாங்-ஆஃப் திசையில் சிக்ஸ் விளாசினார். 5-வது பந்தையும் சிக்சருக்கு தூக்கினார். இதனால் ஐந்து பந்தில் 28 ரன்கள் அடித்தார்.

    இதன்மூலம் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்ததை சமன் செய்தார் மோகன் பிரசாத். கடைசி பந்தை பவுண்டரிக்கு தூக்கினார் விவேக். இதன்மூலம் மோகன் பிரசாத் ஒரே ஓவரில் 32 ரன்கள் விட்டுக்கொடுத்து அதிக ரன்கள் விட்டுக்கொடுத்து மோசமான சாதனையை படைத்துள்ளார்.
    ×