search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NEET Malpractice"

    • தேர்வுகளிலிருந்து கட்டணம் மூலமாக ரூ.3,512.98 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
    • செலவழித்தது போக கடந்த 6 ஆண்டுகளில் ரூ.448 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

    2024 நீட் முறைகேடு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, பல்கலைக்கழக நுழைவுத்தேர்வான CUET, பொறியியல் படிப்புகளுக்கான JEE தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளைத் தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.

    கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசால் உருவாக்கப்பட்ட இந்த தேசிய தேர்வு முகமை அமைப்பு இதுவரை நடத்திய தேர்வுகளிலிருந்து கட்டணம் மூலமாக ரூ.3,512.98 கோடி  வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த புதன்கிழமை மாநிலங்களவையில் மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுகந்தா மஜூம்தார் இந்த தகவலைத் தெரிவித்திருந்தார்.

    குறிப்பாகக் கடந்த 2022 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட CUET பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளுக்குப் பிறகு தேசிய தேர்வு முகமையின் வருமானம் 78 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021-22 ஆண்டில் ரூ. 490 கோடி ஈட்டிய நிலையில் 2022-23 ஆண்டு காலத்தில் ரூ.873 கோடி ஈடுபட்டுள்ளது.

    இந்நிலையில் தேசிய தேர்வு முகமை மாணவர்களின் எதிர்காலத்தை வெறும் வருமானம் ஈட்டுவதற்கான வழியாக மாற்றியுள்ளது என காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.

    இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் பேசுகையில், நீட் தேர்வு ஊழலின் மையமாகத் தேசியத் தேர்வு முகமை உள்ளது. அது, மத்திய கல்வி அமைச்சகத்தின் ஒரு அங்கம். ஆனால், தனது பணிகளை தனியார் வியாபாரிகளிடம் ஒப்படைத்துச் செயல்படுகிறது. தேசிய தேர்வு முகமையானது தற்போது, மெகா மோசடிகள் நடைபெற்ற மத்தியப் பிரதேச அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்குத் தலைமை தாங்கிய ஒருவரின் தலைமையில் உள்ளது.


     


    மாணவர்களிடமிருந்து ரூ.3,512.98 கோடி வசூலித்துள்ள NTA, தேர்வுகளை நடத்துவதற்காக ரூ.3,064.77 கோடி செலவழித்தது போக கடந்த 6 ஆண்டுகளில் ரூ.448 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

    ஆனால் இந்த லாபத்தைத் தேசிய தேர்வு முகமை, தானாகவே தேர்வு நடத்தும் அளவுக்கு அதன் திறமையை மேம்படுத்தப் பயன்படுத்தவில்லை. எனவே, மில்லியன் கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை வருவாய் ஈட்டும் நடவடிக்கையாக மோடி அரசு சீரழித்து இருப்பது தெளிவாகத் தெரிகிறது என்று தெரிவித்துள்ளார். 

    • நீட் தேர்வு மட்டுமன்றி நாட்டில் நடக்கும் முக்கியமான தேர்வுகள் நடத்தப்படும் முறையில் தீவிரமான பிரச்சனை உள்ளது தெரிகிறது.
    • 'பணம் இருந்தால் இந்தியாவின் தேர்வு அமைப்பை விலைக்கு வாங்கிவிடலாம்'

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் நீட் தேர்வு முறைகேடு குறித்த காரசாமான விவாதம் நடந்து வருகிறது.

    அந்த வகையில் பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், மொத்த நாட்டுக்கும் நீட் தேர்வு மட்டுமன்றி நாட்டில்  நடக்கும் முக்கியமான தேர்வுகள் நடத்தப்படும் முறையில் தீவிரமான பிரச்சனை உள்ளது தெரிகிறது.

    அமைச்சர் [மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்] இந்த பிரச்சனைகளுக்கு தன்னைத் தவிர மற்ற அனைவர் மீதும் குற்றம்சாட்டிவருகிறார். அவருக்கு இந்த விவகாரத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்ற அடிப்படையான புரிதல் இல்லை.

    நாட்டில் உள்ள மில்லியன் கணக்கான மாணவர்கள் இந்த விவகாரத்தில் என்னதான் நடக்கிறது என்று கவலையுடன் உள்ளனர், இந்தியாவின் தேர்வு முறை என்பதே மோசடியானது என்று அவர்கள் நம்பத் தொடங்கியுள்ளனர்.

    நீங்கள் பணக்காரராகவும் உங்களிடம் அதிக பணமும் இருந்தால் இந்தியாவின் தேர்வு அமைப்பை விலைக்கு வாங்கிவிடலாம் என்று மக்கள் தற்போது கருதுகின்றனர். அதையே எதிர்தரப்பில் உள்ள நாங்களும்  கருதுகிறோம் என்று பேசியுள்ளார். முன்னதாக இந்த வருட நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, அதிக மதிப்பெண் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது உறுதியானது குறிப்பிடத்தக்கது.

    • நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
    • நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த வழக்கில் பலரை சிபிஐ கைது செய்தது.

    நாடு முழுவதும் நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடத்தப்பட்டது. 24 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினார்கள். ஜூன் 4-ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியானது.

    இதற்கிடையே நீட் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்தது தெரிய வந்தது. இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இந்தியா முழுவதும் மாணவர்கள் பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

    அதனால் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.

    இதனையடுத்து நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த வழக்கில் பலரை சிபிஐ கைது செய்தது.

    இந்நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் குஜராத் மாநிலம் கோத்ராவில் உள்ள ஜெய் ஜலராம் பள்ளியின் உரிமையாளர் தீக்சித் படேலை சிபிஐ கைது செய்துள்ளது.

    இவரது பள்ளியில் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஏற்கனவே ஜார்க்கண்டில் பள்ளி முதல்வர் அசானுல் ஹக், துணை முதல்வர் இம்தியாஸ் ஆலம் ஆகியோரை சிபிஐ கைது செய்துள்ளது.

    நீட் வினாத்தாள் கசிவு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பிவரும் நிலையில், நாடாளுமன்றத்தில் இது குறித்து ஆக்கப்பூர்வமாக விவாதிக்க ராகுல் காந்தி உட்பட அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

    • விசாரணையில் அடுத்தடுத்து திடுக்கிடும் மோசடிகள் வெளிவந்த வண்ணம் உள்ளன
    • ஒரு நெட்ஒர்க் மட்டுமே சம்பாதிக்க திட்டமிட்டிருந்தது இத்தனை கோடியென்றால் , நாடு முழுவதும் இதுபோல் இயங்கி வந்த மற்ற நெட்ஒர்க்கள் மொத்தமாக எவ்வளவு சம்பாதித்திருக்கும்.

    நாடு முழுவதும் கடந்த மே மாதம் நடத்தப்பட்ட மருத்துவப்படிப்புகளில் சேர்வதற்கான நீட் இளநிலைத் தேர்வில் பல்வேறு  குளறுபடிகளும் முறைகேடுகளும் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்த விவகாரம் பூதகரமாகத் தொடங்கியுள்ளது.

    பீகார், ராஜஸ்தானில் வினாத்தாள் கசிவு நடந்து இருந்தது. ஒரு வினாத்தாள் ரூ.30 லட்சம் வரையில் விற்னையானது. நாடு முழுவதும் 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தனர். அரியானாவில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் முதலிடம் பெற்றனர். இந்த சம்பவங்களால் நீட் தேர்வில் மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது.

    நீட் முறைகேடுகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களிடம் நடந்துவரும் விசாரணையில் அடுத்தடுத்து திடுக்கிடும் மோசடிகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வினாத்தாள் கசிவுக்கு காரணமாக இருந்த முக்கிய குற்றவாளி பிஜேந்திர குப்தாவிடன் இன்று விசாரணை நடத்தப்பட்டது.

    முன்னதாக பிஜேந்தர் குப்தா, நீட் மட்டுமின்றி பீகார் , மத்தியப் பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் நடக்கும் அரசுத் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்திலும் சம்பந்தம் உடைய முக்கிய குற்றவாளி ஆவார். கடந்த 24 வருடங்களாக வினாத்தாள் கசிய விடுவதை தொழிலாளாக செய்து வரும் பிஜேந்தர், இந்த தொழிலில் பழக்க வழக்கம் மற்றும் நெட்வொர்க்கிங் தான் முக்கிய தேவை என்று குறிப்பிடுகிறார்.

    இடதற்கிடையில் நீட் தேர்வு கடந்த மே மாதம் நடந்த நிலையில், மார்ச் மாதமே நீட் தேர்வுத் தாளுடன் பிஜேந்தர் உலாவும் வீடியோ ஒன்றும் போலீசாரிடம் சிக்கி உள்ளது. போலீசார் பிடிக்க வரும்போது இரண்டுமுறை டேக்கா கொடுத்த பிஜேந்தர் இறுதியாக தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வருடம் அரங்கேறிய நீட் வினாத்தாள் கசிவு குறித்து பிஜேந்தர் அளித்துள்ள வாக்குமூலம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    அதாவது, இந்த முறை நடந்த நீட் இளநிலை தேர்வுகளில் வினாத்தாளை 700 பேருக்கு விற்க டார்கட் பிக்ஸ் செய்து வேலை பார்த்துள்ளனர். இதன் மூலம் ரூ.200 கோடியிலிருந்து 300 கோடிவரை வருமானம் ஈட்டலாம் என்று எதிர்பார்த்துள்ளனர்.

    இந்த வருட நீட் முறைகேட்டில் பிஜேந்தரின் நெட்ஒர்க் மட்டுமே சம்பாதிக்க திட்டமிட்டிருந்தது இத்தனை கோடியென்றால், நாடு முழுவதும் இதுபோல் இயங்கி வந்த மற்ற நெட்ஒர்க்கள் மொத்தமாக எவ்வளவு சம்பாதித்திருக்கும் என்பதே தற்போது அனைவரின் கேள்வியாகவும் உள்ளது. பிரச்சனையின் தீவிரம் கருதி இந்த முறைகேடு வாழக்குகள் சிபிஐ வசம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • இந்திய அரசியலமைப்பு சட்டப்புத்தகத்தைக் கையில் ஏந்தி பாராளுமன்ற வளாகத்துக்கு முன்னாள் திரண்டு அணிவகுத்தபடி உள்ளே சென்றனர்.
    • நீட் முறைகேடு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து இந்தியா கூட்டணி என்.டி.ஏ அரசை நோக்கி குரல் உயர்த்தும்

    பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் 292 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி இந்தியாவில் மீண்டும் ஆட்சியமைத்துள்ள 3 வது முறையாக இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி கடந்த ஜூன் 9 ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார். அவருடன் புதிய அமைச்சரவையில் இடம்பெற்ற 71 அமைச்சர்களும் ஏற்றுக்கொண்டனர்.

    இந்நிலையில் புதிய அரசு அமைந்ததற்குப் பிறகு இன்று முதல் பாராளுமன்றக் கூட்டம் தொடங்கியுள்ளது. பாராளுமன்றத்துக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 543 எம்.பி.க்களுக்கும் இன்று பதவிப்பிரமாணம் நடக்கிறது. முதலாவதாக பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்ற உறுப்பினராக உறுதியேற்றுக்கொண்டார். மேலும் புதிய எதிர்கட்சி எம்.பிக்கள் பாராளுமன்றத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில் பாராளுமன்றத்துக்கு வருகை தந்துள்ள ராகுல் காந்தி, சோனியா காந்தி, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்களும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்களும் சேர்ந்து இந்திய அரசியலமைப்பு சட்டப்புத்தகத்தைக் கையில் ஏந்தி பாராளுமன்ற வளாகத்துக்கு முன்னாள் திரண்டு அணிவகுத்தபடி உள்ளே சென்றனர்.

    நாட்டில் தற்போது நிகழ்ந்து வரும் நீட் முறைகேடு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து இந்தியா கூட்டணி என்.டி.ஏ அரசை நோக்கி குரல் உயர்த்தும் என்று எதிராபகப்படுகிறது. நீட் முறைகேடு தவிர, அதிகரிக்கும் விலைவாசி, உணவு பற்றாக்குறை, வெப்ப அலையால் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் ஹீட் ஸ்ட்ரோக் மரணங்கள், நீட் PG தேர்வு ரத்து, UGC NET தேர்வு விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்க இந்தியா கூட்டணி என்.டிஏ அரசை வலியுறுத்தும் என்று தெரிகிறது.

     

     

    இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் சென்றமுறையை விட அதிக பிரதிநிதித்துவம் பெற்றுள்ளதால் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்குரல் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. இன்று [ஜூன் 24] தொடங்கியுள்ள 18 வது பாராளுன்றக் கூட்டத்தொடர் வரும் ஜூலை 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    ×