search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Naam tamizhar party"

    • தமிழர்கள் இழந்த உரிமையை மீட்கவும், இருக்கும் உரிமையைப் பாதுகாக்கவும் கிடைத்த நல்வாய்ப்பு.
    • இறையன்புக்கு பிறகு தமிழர் ஒருவரை தலைமைச் செயலாளராக நியமித்துள்ள தமிழ்நாடு அரசிற்கு உள்ளப்பூர்வமான பாராட்டுகள்.

    தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமிக்கப்பட்டிருப்பதற்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்றுள்ளார்.

    இதுகுறித்து சீமான் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் புதிய தலைமைச்செயலாளராக அனுபவமும், திறமையும் வாய்ந்த மதிப்பிற்குரிய ஐயா முருகானந்தம் இ.ஆ.ப. அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

    ஐயா முருகானந்தம் அவர்களின் உண்மையும், நேர்மையுமான, அர்ப்பணிப்பு மிகுந்த பணித்திறனுக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே இந்நியமனத்தைக் கருதுகிறேன்.

    தமிழர்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரச் சிக்கல்களை உணர்வுப்பூர்வமாக அணுகி உரிய தீர்வினைக் காண, தமிழ்நாட்டின் அதியுயர் ஆட்சிமை பதவிகளில் மண்ணின் மொழியும், மக்களின் வலியும் புரிந்த மாட்சிமை பொருந்திய தமிழர்களே நியமிக்கப்பட வேண்டும் என்ற நாம் தமிழர் கட்சியின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்கும் விதமான தற்போதைய நியமனம் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

    தலைமைச்செயலாளராக ஐயா முருகானந்தம் அவர்களின் நியமனம் தமிழர்கள் இழந்த உரிமையை மீட்கவும், இருக்கும் உரிமையைப் பாதுகாக்கவும் கிடைத்த நல்வாய்ப்பாகும்.

    தத்துவ அறிஞர் ஐயா இறையன்பு அவர்களுக்குப் பிறகு, தமிழர் ஒருவரைத் தலைமைச்செயலாளராக நியமித்துள்ள தமிழ்நாட்டு அரசிற்கு என்னுடைய உளப்பூர்வமான பாராட்டுகள்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

    தமிழகத்தில் நிலவி வரும் படுகொலைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைக் கண்டித்தும், மின் கட்டண உயர்வைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தால், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

    இந்நிலையில், சீமானின் பேச்சுக்கு, திருச்சி மாவட்ட எஸ்.பி., வருண்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    சென்னையில் பொதுக்கூட்டம் ஒன்றில் சீமான், காவல்துறை பொறுப்பு வகிக்கும் பதவிகளை இழிவுபடுத்தி பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்நிலையில், இதுதொடர்பாக, திருச்சி மாவட்ட எஸ்.பி., தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் மூலமாக சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். சீமானின் பொய்யான அபிப்பிராயங்களுக்கு நீதிமன்றங்கள் மூலம் வழக்கு தொடர்வேன்.

    பொது மேடையில் பேசினாலும், கொச்சையான பொய்களை தமிழக மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழகத்தில் தொடர்ந்து நிலவிவரும் படுகொலைகள்.
    • மின்கட்டண உயர்வு உள்ளிட்டவை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவிப்பு.

    தமிழகத்தில் சீர்கெட்ட சட்டம்- ஒழுங்கு, மின் கட்டண உயர்வு உள்ளிட்டவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நாம் தமிழர் கட்சி தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பேரன்பு கொண்டு நாங்கள் பெரிதும் நேசிக்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

    தமிழகத்தில் தொடர்ந்து நிலவிவரும் படுகொலைகள், சீர்கெட்ட சட்டம்-ஒழுங்கு, மின்கட்டண உயர்வு இவற்றையெல்லாம் கண்டித்து,

    மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

    சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நாளை (04-08-2024) காலை 11 மணிக்கு மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!

    இலக்கு ஒன்றுதான்! இனத்தின் விடுதலை!

    இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!

    நாம் தமிழர்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • படகு அல்லது பாய்மரப் படகு சின்னத்தை நாம் தமிழர் கட்சி சார்பில் கேட்கப்பட்டது.
    • தேர்தல் ஆணையத்தில் மின்னஞ்சல், நேரில் மனு அளித்திருந்தனர்.

    பாராளுமன்ற தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது.

    தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.

    இதை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் சீமான் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மேல்முறையீட்டு மனுவுக்கு ஏப்ரல் 1-ந் தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கும், பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கும் உத்தரவிட்டு இருந்தது.

    தொடர்ந்து, பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு "மைக்" சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது.

    மைக் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் படகு அல்லது பாய்மரப் படகு சின்னத்தை நாம் தமிழர் கட்சி சார்பில் கேட்கப்பட்டது.

    இந்நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் தான் என சீமான் வைத்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

    மாற்று சின்னம் கோரி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தேர்தல் ஆணையத்தில் மின்னஞ்சல், நேரில் மனு அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திருச்சி சூர்யா, சாட்டை துரைமுருகனை போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
    • ஆடியோவை திருச்சி சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    மக்களவை தேர்தல் நடைபெறும் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தல் முதற்கட்டமாக தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

    பாஜக கட்சி கூட்டணி தொகுதி பங்கீடுகள் முடிவடைந்த நிலையில், வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

    அந்த வகையில், தமிழகத்தில் பாஜக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல், 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.

    இதில், தென் சென்னையில் தமிழசை சவுந்தரராஜன், கோவையில் அண்ணாமலை, விருதுநகரில் ராதிகா சரத்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

    பரபரப்பான தேர்தல் கள நேரத்தில், தமிழக பாஜக நிர்வாகியான திருச்சி சூர்யா சிவா, நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளரும் யூட்யூபருமான சாட்டை துரைமுருகனுக்கும் இடையேயான ஆடியோ உரையாடலை வெளியிட்டுள்ளார்.

    திருச்சி சூர்யா, சாட்டை துரைமுருகனை போனில் தொடர்பு கொண்டு, "அண்ணாமலை குறித்து சாட்டை துரைமுருகன் பேசிய வீடியோவை நீக்குமாறும், இனிமேல் அதுபோன்று வீடியோக்களை வெளியிட வேண்டாம் எனவும்" கேட்டுக்கொண்டார்.

    அதற்கு பதிலளித்த சாட்டை துரைமுருகன், "இனிமே பாஜகவை எதிர்த்து வீடியோ வெளியிட மாட்டேன், அண்ணனே சொல்லிவிட்டார். நாம் தமிழரின் முழு டார்கெட்டும் திமுகதான் என்று. ஆகையால் இதை விட்டுவிடுங்கள். இனிமே பார்த்துக்கொள்கிறேன். 100 விழுக்காடு உறுதியாக இனி அப்படி வீடியோ வராது" என கூறியிருந்தார். 

    சாட்டை துரைமுருகனோடு பேசிய இந்த ஆடியோவை திருச்சி சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ஆடியோ சர்ச்சையை கிளப்பியது.

    ஏற்கனவே, நாம் தமிழர் கட்சி பாஜகவிற்கு மறைமுகமாக ஆதரவாக இருப்பதாக பேசப்படுகிறது. இந்த சூழலில், திருச்சி சூர்யா கேட்டதற்கினங்க பாஜகவிற்கு ஆதரவாக பதிலளித்தது மட்டுமின்றி எங்களது டார்கெட் பாஜக அல்ல என குறிப்பிட்டிருப்பது நாம் தமிழர் கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த ஆடியோ தீயாய் பரவியதை அடுத்து, சாட்டை துரைமுருகன், திருச்சி சூர்யாவை கடுமையாக விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் குறிப்பிட்டிருப்பதாவது, 'ஆடியோல என்னடா சொல்றது இங்கேயே சொல்றேன். எங்கள் இனத்தை கொன்றொழிக்க காரணாமாக இருந்த காங்கிரசும் துணை நின்ற திமுகவும் எங்கள் முதல் எதிரிகள் ! அவர்களை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழித்துக் கட்டவே நாம்தமிழர் கட்சி துவங்கப்பட்டது !

    பாஜக மனித குலத்திற்கு ஆபத்து அண்ணாமலை போன்றவர்கள் தமிழ்நாட்டு அரசியலுக்கே பேராபத்து என்பதை சொல்லி காணொளி போட்டதற்கு காலில் விழாத குறையாக கெஞ்சி கோரிக்கை வைப்பது போல் அலைபேசி உரையாடலை பதிவு செய்து போடுவதெல்லாம் சில்லரைத்தனத்தின் உச்சம் ! இதுக்காகவே கோவையில் தங்கியிருந்து அண்ணாமலை போன்றவர்களை காலி செய்வோம் !' என குறிப்பிட்டுள்ளார்.

    ×