search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palestinian President Abbas"

    • இந்தியா-பாலஸ்தீன இரு தரப்பு உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்தினர்.
    • பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா தொடர்ந்து தமது ஆதரவை நல்கும் என உறுதி அளித்தார்.

    குவாட் அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசினார். நியூயார்கில் நடைபெற்ற இந்திய வம்சாவளியினரை சந்தித்து உரையாற்றினார்.

    அமெரிக்காவின் நியூயார்க்கில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

    அப்போது இந்தியா-பாலஸ்தீன இரு தரப்பு உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்தினர்.

     

    மேலும் இந்த சந்திப்பின்போது காசாவின் மனிதாபிமான நிலைமை குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்த பிரதமர், பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா தொடர்ந்து தமது ஆதரவை நல்கும் என உறுதி அளித்தார். காசா-இஸ்ரேல் இடையேயான போரில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும் அவர் வலியுறுத்தினார்.

    முன்னதாக, பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது கடந்த 11 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் படையினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தாக்குதலில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    நுரையீரல் பாதிப்புக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலஸ்தீன அதிபர் மஹமுத் அப்பாஸ் இன்று வீடு திரும்பினார். #MahmoudAbbas
    ரமல்லா:

    இஸ்ரேலின் பரம பகை நாடாக விளங்கும் பாலஸ்தீன நாட்டின் அதிபராக பொறுப்பு வகிப்பவர் மஹமுத் அப்பாஸ்(82). சமீப காலமாக நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இவர் ரமல்லா நகரில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஒருவார காலமாக சிகிச்சை பெற்று வந்தார்.

     
    இந்நிலையில், உடல் நலம் குணமடைந்த நிலையில் இன்று அவரை மருத்துவர்கள் டிஸ்சார்ஜ் செய்தனர். மருத்துவமனை வளாகத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அப்பாஸ், 'நல்ல ஆரோக்கியத்துடன் மருத்துவமனையை விட்டு செல்வதற்கு கடவுளுக்கு நன்றி. நல்லபடியாக நாளை பணிக்கு திரும்புவேன்' என கூறினார். #MahmoudAbbas


    ×