search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panruti youths arrest"

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தகாத வார்த்தைகளால் திட்டி ஏட்டுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரி புறக்காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் பரமசிவம். இவர் நேற்று வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது ஆஸ்பத்திரிக்கு மணம்தளர்ந்தபுத்தூர் பகுதியை சேர்ந்த பரதன் (வயது 28), பிரபாகரன் (25) ஆகியோர் வந்தனர்.

    அவர்கள் ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை பிரிவு முன்பு நின்று கொண்டு ஆஸ்பத்திரி ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டி கொண்டு இருந்தனர்.

    அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த பரமசிவம் அங்கு சென்று அந்த 2 பேரிடமும், இந்த இடத்தில் நின்று தகாத வார்த்தைகளால் பேசாதீர்கள். உடனே இங்கிருந்து சென்று விடுங்கள் என்று கூறினார்.

    ஆனால், பரதனும், பிரபாகரனும் அதனை ஏற்கவில்லை. இதனால் அவர்களுக்கும், ஏட்டு பரமசிவத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியது. ஆத்திரம் அடைந்த பரதன், பிரபாகரன் ஆகிய 2 பேரும் ஏட்டு பரமசிவத்தை தகாத வார்த்தைகளால் திட்டி கொலைமிரட்டலும் விடுத்தனர்.

    இது குறித்து ஏட்டு பரமசிவம் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜவாது உசேன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிரபாகரன், பரதன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
    பண்ருட்டி அருகே பெண்கள் குளிப்பதை செல்போனில் படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புலவனூர் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார்(வயது 24). அதே பகுதியை சேர்ந்தவர் மோகன்(19). இவர்கள் 2 பேரும் நண்பர்கள்.

    இவர்கள் அதே பகுதியில் வீட்டில் குளிக்கும் பெண்களை மறைந்து நின்று தங்களது செல்போனில் படம் பிடித்தனர். அதை வைத்து கொண்டு பெண்களை மிரட்டினர். எங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் இல்லையென்றால் செல்போனில் பிடித்த படங்களை வாட்ஸ்-அப், பேஸ்புக்-கில் வெளியிடுவோம் என கூறினர்.

    இதனால் அந்த பெண்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். இதையடுத்து பிரேம்குமார் மற்றும் மோகன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    ×