search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paris 2024"

    • பி பிரிவில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.
    • இந்தப் போட்டியில் இந்தியா 3 கோல்கள் அடித்தது.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஹாக்கி அணியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன.

    இதில் பி பிரிவில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது. அபிஷேக் மற்றும் ஹர்மன்பிரித் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

    இரண்டாவது பாதியில் ஹர்மன்பிரித் மேலும் ஒரு கோல் அடித்தார். இறுதியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

    இதன்மூலம் 5 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 10 புள்ளிகள் பெற்று 2வது இடம்பிடித்தது.

    ஏற்கனவே இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு தகுதிபெற்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பி பிரிவில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் பெல்ஜியத்தை எதிர்கொண்டது.
    • இந்தப் போட்டியில் இந்தியா ஒரு கோல் மட்டுமே அடித்தது.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஹாக்கி அணியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன.

    இதில் பி பிரிவில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான பெல்ஜியத்தை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் இந்தியா ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. இந்த கோலை அபிஷேக் அடித்தார்.

    இரண்டாவது பாதியில் பெல்ஜியம் வீரர்கள் சிறப்பாக விளையாடி 2 கோல்கள் அடித்தனர். இதனால் பெல்ஜியம் அணி இந்தியாவை 2-1 என வீழ்த்தியது.

    இதன்மூலம் 4 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 7 புள்ளிகள் பெற்றுள்ளது. ஏற்கனவே இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு தகுதிபெற்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கிறித்தவர்கள் மனதை புண்படுத்தியதாக விமர்சனம் எழுந்தது.
    • இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

    பாரிஸ் ஓலிம்பிக்ஸ் 2024 துவக்க விழாவில் விசேஷ அணிவகுப்பு, வாணவேடிக்கை, கலைநிகழ்ச்சிகள் என கொண்டாட்டங்கள் நகரை அதிர வைத்தன. சய்ன் நதியில் அமைக்கப்பட்ட மேடையில் லேடி காகா, செலின் டியோன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இதன் வரிசையில் பிரபல ஓவியர் லியொனார்டோ டாவின்சியின் லாஸ்ட் சப்பர் எனப்படும் இயேசுவின் இறுதி இரவு உணவு ஓவியத்தை பிரதி செய்யும் வகையில் அமைந்த டிராக் கிவீன் நிகழ்ச்சி கிறித்தவர்கள் மனதை புண்படுத்தியதாக விமர்சனம் எழுந்தது.

    இதற்கு பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கண்டன குரல் எழுப்பினர். அந்த வரிசையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் காணும் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பேசிய அவர், "உண்மையில் நான் வெளிப்படையான ஒருவன், ஆனால் அவர்கள் செய்தது மிக மோசமான விஷயம். கடந்த இரவு லாஸ்ட் சப்பர் நிகழ்வை அவர்கள் வெளிப்படுத்தியதை போன்று நாங்கள் செய்ய மாட்டோம்," என்று தெரிவித்தார்.

    சர்ச்சைக்கு உள்ளான அந்த நிகழ்ச்சியில் வெள்ளிக் கிரீடத்தை அணிந்து அரை நிர்வாணமாக உடல் முழுவதும் நீல நிற சாயம் பூசி மலர்களால் அலங்கரித்துக் கொண்டு லாஸ்ட் சப்பரில் பரிமாறப்படும் உணவை குறிக்கும் வகையில் மேஜையில் படுத்திருந்தார்.

    ×