search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "periyar river"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நேற்று காலை பத்தளம் அணைக்கட்டு மற்றும் கீழக்கரையில் அதிகளவில் மீன்கள் செத்து மிதந்தன.
    • பத்தளம் அணைக்கு அருகில் உள்ள ஆறுகள் கருப்பாக மாறி உள்ளது.

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள பெரியாறு ஆற்றில் நேற்று முன்தினம் இரவு ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. திடீரென ஆற்றில் மீன்கள் செத்து மிதந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மீன்கள் உயிரிழப்புக்கு காரணம் அப்பகுதியில் உள்ள ஏலூர்-எடையார் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் என சந்தேகிக்கப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று காலை பத்தளம் அணைக்கட்டு மற்றும் கீழக்கரையில் அதிகளவில் மீன்கள் செத்து மிதந்தன. இதனால் பெரியாற்றில் கூண்டு அமைத்து மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    கனமழையைத் தொடர்ந்து மே 20-ந்தேதி அணையின் ஷட்டர்கள் திறக்கப்பட்டதையடுத்து, பத்தளம் அணைக்கு அருகில் உள்ள ஆறுகள் கருப்பாக மாறி உள்ளது.

    கேரள தொழில்துறை அமைச்சர் ராஜீவ், பெரியாற்றில் மீன்கள் செத்து மிதந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


    கேரளாவின் பல பகுதிகளில் இடைவிடாது பெய்துவரும் அடைமழையினால் பெரியார் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு பாய்கிறது. எர்ணாக்குளம் மாவட்டத்தில் உள்ள 78 நிவாரண முகாம்களில் 10 ஆயிரம் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளன. #KeralaFloods #KeralaRains
    திருவனந்தபுரம்:

    கேரள மாவட்டத்தில் மே மாத இறுதியிலேயே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அதன் பிறகு விட்டு விட்டு பெய்த மழை ஆகஸ்டு முதல் வாரத்தில் மிகப்பலத்த மழையாக உருவெடுத்தது.

    மாநிலத்தின் மலையோர மாவட்டங்கள் தொடர்மழையால் பெரும் பாதிப்புக்கு ஆளானது. நிலச்சரிவு போன்ற மழையால் ஏற்படும் விபத்துக்களில் இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    எர்ணாகுளம், கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு, பாலக்காடு, இடுக்கி, கண்ணூர் உள்பட 8 மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக மழை இடைவிடாமல் பெய்து வருகிறது.



    தொடர் மழை காரணமாக இம்மாவட்டங்கள் அனைத்தும் வெள்ளக்காடாக மாறியது. வீடுகள், கட்டிடங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியது. தரைப்பாலங்கள், சாலைகள் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டன.

    கேரளத்தின் பெரிய அணைகளில் ஒன்றான இடுக்கி அணையும் மழையால் நிரம்பியது. 2403 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 2401.90 அடியாக உயர்ந்தது.

    இந்நிலையில், பெரியார் ஆற்றில் அதிகரித்து வரும் நீரின் அளவு காரணமாக ஆற்றின் கரையோரம் இருக்கும் மக்கள் அனைவரும் எர்ணாக்குளம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எர்ணாக்குளம் மாவட்டத்தின் பரவூர், அலுவா, கனயன்னூர், குன்னத்துநாடு ஆகிய தாலுக்காக்களில் அமைக்கப்பட்டுள்ள 78 நிவாரண முகாம்களில் இதுவரை 10  ஆயிரத்து 501 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.



    அதேசமயம், பெரியார் ஆற்றில் அமைந்துள்ள சிவன் ஆலையத்தில் வருடாந்திர பூஜை செய்ய வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அப்பகுதிக்கு வந்துள்ளனர். இதையடுத்து, பாதுகாப்பான பகுதியில் இருந்தபடி பூஜையை செய்ய ஏற்பாடு செய்து தரப்படும் என மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

    இந்த பகுதியில் மட்டும் 3 படகுகள், 20 மீட்பு படகுகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன், தேசிய மீட்புப் படையினரும் தயார் நிலையில் இருப்பதாகவும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #KeralaFloods #KeralaRains
    ×