search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SUV Car"

    • அக்டோபர் 31-ம் தேதி வரை புக் செய்பவர்களுக்கு இந்த விலையில் கிடைக்கும்.
    • டாடா கர்வ், ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஹோண்டா எலிவேட் ஆகியவற்றிற்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சிட்ரோன் பசால்ட் சொகுசு கார் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. யாருமே எதிர்பாராத வகையில் ரூ.7.99 லட்சம் என விலை நிர்ணயம் செய்துள்ளது சிட்ரோன் நிறுவனம். ஏற்கனவே இருக்கும் ஷோரூமில் மட்டுமே இந்த விலைக்கு கிடைக்கும் குறிப்பிடத்தகுந்தது. அக்டோபர் 31-ம் தேதி வரைதான் இந்த விலைக்கு கிடைக்கும்.

    சாய்வான மேற்கூரை, மூன்று அடுக்குகளாக காட்சியளிக்கும் முகப்பு பகுதி, கவர்ச்சியான எல்இடி ஹெட்லைட் மற்றும் டிஆர்எல் உள்ளிட்டவை இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளன. இதுதவிர ஒரு ஹாலோஜன் பனி மின் விளக்கும் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இவைகள் இந்த காரின் முன் பக்கத்திற்கு அழகு சேர்க்கும் விதமாக உள்ளன.

    டைமண்ட் கட் அலாய் வீல், பிளாஸ்டிக் கிளாடிங், எல்இடி டெயில் லைட், இரண்டு வண்ணங்கள் கொண்ட ரியர் பம்பர் ஆகியவையும் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

    ப்ளஷ் (Plush) வகை இருக்கை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. 3 படிகளாக அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ளக் கூடிய இருக்கையே பின் பக்கத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் வாயிலாக, உயரமான பயணிகள் தங்களின் தேவைக்கேற்ப இருக்கையை அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ள முடியும். இதுதவிர, பின் பக்கத்திற்கு என தனி ஏசி துவாரங்கள் உள்ளன.

    டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்டவையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    கியர்பாக்ஸை பொருத்த வரை 5 ஸ்பீடு மேனுவல் மட்டுமே இந்த மோட்டாருடன் வழங்கப்படுகின்றது. ஆனால், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் ஆப்ஷனில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டு வகையான கியர்பாக்ஸ ஆப்ஷனும் வழங்கப்படுகின்றது.

    விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் டாடா கர்வ்-க்கு இது மிகப்பெரிய போட்டியாக இருக்கும். இதுதவிர, ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஹோண்டா எலிவேட், மற்றும் மாருதி கிராண்ட் விட்டாரா உள்ளிட்ட கார் மாடல்களுக்கும் இது போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கரிஷ்மாவின் திருமணத்தின் போது விகாசின் குடும்பத்தினருக்கு ₹ 11 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் ஒரு எஸ்யூவி காரை வரதட்சணையாக கொடுத்தோம்
    • விகாஸ் குடும்பத்தினர் ஒரு ஃபார்ச்சூனர் கார் மற்றும் கூடுதலாக ₹ 21 லட்சம் பணம் கேட்டுள்ளனர்

    உத்தரபிரதேசத்தில் 2022 டிசம்பரில் கரிஷ்மா என்ற பெண் விகாஸ் என்பவரை திருமணம் செய்தார். பின்பு இந்த ஜோடி கிரேட்டர் நொய்டாவில் உள்ள விகாஸ் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

    இந்நிலையில், வரதட்சணை கொடுமையால் கரிஷ்மா அவரது கணவர் மற்றும் கணவரது குடும்பத்தினரால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

    இது தொடர்பாக கரிஷ்மாவின் சகோதரர் தீபக் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், கரிஷ்மாவின் திருமணத்தின் போது விகாசின் குடும்பத்தினருக்கு ₹ 11 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் ஒரு எஸ்யூவி காரை வரதட்சணையாக கொடுத்தோம். ஆனால், விகாசின் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக இன்னும் அதிக வரதட்சணை கேட்டு கரிஷ்மாவை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனர்.

    இந்நிலையில், கரிஷ்மாவிற்கு ஒரு பெண் குழந்தையைப் பிறந்துள்ளது. அதன்பிறகும் விகாஸ் குடும்பத்தினரின் அதிக வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளனர். அதனால் கரிஷிமாவின் குடும்பத்தினர் விகாஸ் குடும்பத்திற்கு கூடுதலாக ₹10 லட்சம் கொடுத்தனர். அதன்பின்பும் இந்த கொடுமை முடிவுக்கு வரவில்லை.

    அண்மையில், விகாஸ் குடும்பத்தினர் ஒரு ஃபார்ச்சூனர் கார் மற்றும் கூடுதலாக ₹ 21 லட்சம் பணம் கேட்டுள்ளனர். அதனை கரிஷ்மா குடும்பத்தினரால் கொடுக்கமுடியவில்லை.

    இந்நிலையில், மார்ச் 29 அன்று கரிஷ்மா எங்களை தொடர்பு கொண்டு விகாஸ் குடும்பத்தினர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக தெரிவித்தார். உடனே நாங்கள் விகாஸ் வீட்டிற்கு சென்று பார்க்கையில் கரிஷ்மா இறந்து கிடந்தார். கரிஷ்மாவை அவரது கணவர் மற்றும் கணவர் குடும்பத்தினர் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த புகாரில், விகாஸ், அவரது தந்தை சோம்பல் பதி, அவரது தாய் ராகேஷ், சகோதரி ரிங்கி மற்றும் சகோதரர்கள் சுனில் மற்றும் அனில் ஆகியோர் மீது வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தி கொலை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் விகாஸ் மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 

    ×