search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Singapore Open Badminton"

    • சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இந்திய பாட்மிண்டன் வீராங்கனையான காயத்ரி கோபிசந்த் தனது அபாரமான திறமையை வெளிப்படுத்தினார்
    • ஆட்டம் தொடக்கத்தில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி முதல் ஆரம்ப செட்டில் தென் கொரியா ஜோடியிடம் ஆட்டத்தை இழந்தனர்.

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இந்திய பாட்மிண்டன் வீராங்கனையான காயத்ரி கோபிசந்த் தனது அபாரமான திறமையை சிங்கப்பூர் ஓபன் 2024 மகளிர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் வெளிப்படுத்தினார். காய்த்ரியும் அவரது ஜோடியான திரிஷா ஜாலியும் இணைந்து தென் கொரியா ஜோடியான கிம் செய்- யங் மற்றும் கொங் ஹீ - யங் உடன் நேற்று போட்டியிட்டனர்.

    ஆட்டம் தொடக்கத்தில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி முதல் ஆரம்ப செட்டில் தென் கொரியா ஜோடியிடம் ஆட்டத்தை இழந்தனர். ஆனால் ஆட்டத்தின் மூன்றாவது செட்டில் காயத்ரி செய்த செயல் இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.

    மூன்றாவது செட்டில் இந்திய அணி 3- 2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆட்டம் தீவிரம் அடைந்துக் கொண்டு இருக்கும் பொழுது ஆட்டத்தின் நடுவே காயத்ரி கோபிசந்த் அவரது ரேக்கட்டை மாற்றி 4-2 என்று ஸ்கோர் எடுத்து கால் இறுதி சுற்றில் வென்றனர். அந்த பரபரப்பான ஆட்டத்திலும் காய்த்ரி இந்த செயலை செய்தது விளையாட்டு ஆர்வலர்களிடம் மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளது. பலரும் இவரை சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.

    அதைத்தொடர்ந்து பெண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில், இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, ஜப்பானின் சிஹாரு ஷிடா-மத்சுயுமா ஜோடியுடன் மோதியது.

    அரை இறுதி ஆட்டத்தில் இதில் ஜப்பான் ஜோடியிடம் 21-23, 11-21 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

    • சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
    • இந்தியாவின் லக்‌ஷயா சென் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், டென்மார்க்கின் விக்டர் அக்செல்சென்னுடன் மோதினார்.

    இதில் லக்ஷயா சென் 13-21, 21-16, 13-21 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    மற்றொரு வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த், ஜப்பான் வீரர் நரோகாவுடன் மோதினார். இதில் கிடாம்பி 4-21 என முதல் செட்டை இழந்தார்.

    2வது செட்டில் 3-11 என பின்தங்கியிருந்த நிலையில், காயம் காரணமாக விலகினார். இதன்மூலம் தொடரில் இருந்தும் வெளியேறினார்.

    சிங்கப்பூர் ஓபன் தொடரின் முதல் சுற்றிலேயே இந்திய வீரர்கள் 2 பேர் வெளியானது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    • சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
    • இந்தியாவின் பி.வி.சிந்து, லக்‌ஷயா சென் உள்ளிட்டோர் இன்று களமிறங்குகின்றனர்.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் 'நம்பர் ஒன்' ஜோடியான இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, உலக தரவரிசையில் 34-வது இடத்தில் இருக்கும் டென்மார்க்கின் டேனியல் லண்ட்கார்ட்- மேட்ஸ் வெஸ்டர்கார்ட் ஜோடியுடன் மோதியது.

    இதில் சாத்விக்-சிராக் ஜோடி 20-22, 18-21 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

    இரண்டாவது நாளான இன்று இந்தியா சார்பில் பி.வி.சிந்து, பிரனாய், லக்ஷயா சென், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் களம் இறங்குகிறார்கள்.

    • சிந்து முதல் சுற்றில் லினே ஹோஜ்மார்க் கிஜார்ஸ்பெல்டை (டென்மார்க்) சந்திக்கிறார்.
    • லக்‌ஷயா சென் உலகின் நம்பர் ஒன் வீரரான விக்டர் ஆக்சல்செனுடன் (டென்மார்க்) மல்லுக்கட்டுகிறார்.

    சிங்கப்பூர்:

    மொத்தம் ரூ.7 கோடி பரிசுத்தொகைக்கான சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடங்கி வருகிற 2-ந்தேதி வரை நடக்கிறது. ஒலிம்பிக் போட்டிக்கு தன்னை தயார்படுத்தி வரும் வீராங்கனை பி.வி.சிந்து, வீரர் எச்.எஸ்.பிரனாய் மற்றும் லக்ஷயா சென், ஸ்ரீகாந்த், பிரியன்ஷூ ரஜாவத், இரட்டையர் நம்பர் ஒன் ஜோடியான சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி உள்ளிட்ட இந்தியர்கள் இந்த போட்டியில் பங்கேற்கிறார்கள்.

    கடந்த வாரம் மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டனில் இறுதி சுற்றில் தோல்வி அடைந்த சிந்து அதற்கு பரிகாரம் தேடும் வகையில் ஆடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. சிந்து முதல் சுற்றில் லினே ஹோஜ்மார்க் கிஜார்ஸ்பெல்டை (டென்மார்க்) சந்திக்கிறார். இதே போல் இந்திய இளம் புயல் லக்ஷயா சென் உலகின் நம்பர் ஒன் வீரரான விக்டர் ஆக்சல்செனுடன் (டென்மார்க்) மல்லுக்கட்டுகிறார்.

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வியடைந்து வெளியேறினார். #SingaporeOpenBadminton #Sindhu
    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில், மகளிருக்கான ஒற்றையர் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. இதில், ஒரு ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையும், ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவருமான பி.வி.சிந்து, முன்னாள் உலக சாம்பியன் நஜோமி ஒகுஹாரா (ஜப்பான்) ஆகியோர் மோதினர்.

    போட்டியின் ஆரம்பத்தில் சிந்து தொடர்ந்து தவறுகளை செய்ததால் பின்தங்கினார். குறிப்பாக நெட்டில் பந்தை அடிப்பது, அவுட்லைனுக்கு வெளியே அடிப்பது போன்ற தவறுகளால் புள்ளிகளை இழந்தார். சில சமயம் பொறுமையிழந்து அவசரப்பட்டு ஆடுவது போல் தெரிந்தது. இதனால் முதல் செட்டை 7-21 என இழந்தார்.

    2வது செட் ஆட்டத்தில் சிந்து சற்று நிதானமாக ஆடி, ஒகுஹாராவுக்கு நெருக்கடி கொடுக்க முயன்றார். ஆனாலும், ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒகுஹாரா, அடுத்தடுத்து 6 புள்ளிகளைப் பெற்று முன்னேறினார். இறுதியில் அந்த செட்டையும் 11-21 என்ற கணக்கில் சிந்து இழந்தார். வெற்றி பெற்ற ஒகுஹாரா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    பி.வி.சிந்துவும், ஒகுஹாராவும் இதுவரை 13 போட்டிகளில் மோதி உள்ளனர். இதில் 7 போட்டிகளில் சிந்துவும், 6 போட்டிகளில் ஒகுஹாராவும் வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக கடைசியாக மோதிய இரண்டு போட்டிகளில் சிந்து வெற்றி பெற்றார். அதற்கு பழிதீர்க்கும் வகையில் ஒகுஹாராவின் இன்றைய ஆட்டம் அமைந்திருந்தது.



    மற்றொரு அரையிறுதியில் சீன தைபேய் வீராங்கனை தாய் சு யிங், 15-21, 24-22, 21-19 என்ற செட்கணக்கில் ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் ஒகுஹாரா, திய் சூ யிங் பலப்பரீட்சை நடத்த உள்ளனர். #SingaporeOpenBadminton #Sindhu
    ×