search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sivangutty"

    • சமூக வலைத்தளங்களில் மம்முட்டியை அவரது இயற்பெயரான முகமது குட்டி என்ற பெயரில் மத ரீதியாக வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
    • வெறுப்பை பரப்புபவர்களின் இழிவான மனதில் மட்டுமே மம்முட்டி முகமது குட்டியாக இருக்கிறார்.

    2 ஆண்டுகளுக்கு முன்பு மம்முட்டி நடிப்பில் புழு என்ற திரைப்படம் மலையாளத்தில் வெளிவந்தது. அந்த படத்தில் உயர்சாதியினரை இழிவுபடுத்தியுள்ளதாக எழுந்த குற்றசாட்டில் சமூக வலைத்தளங்களில் மம்முட்டி விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார்.

    புழு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரதீனா. அண்மையில் இவரது கணவர் ஷர்ஷத் பனியாண்டி ஆன்லைன் மீடியா ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது புழு திரைப்படம் உயர்சாதியினரை இழிவுபடுத்தியுள்ளது. மம்முட்டி ஏன் அந்த திரைப்படத்தில் நடித்தார். அவர் படத்தின் ஸ்க்ரிப்டை படித்து பார்த்தாரா என்று கேள்வி எழுப்பினார்.

    மேலும், இந்த திரைப்படத்தின் திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவரான ஹர்ஷத் ஒரு தீவிரமான இஸ்லாமியர் என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் மம்முட்டியை அவரது இயற்பெயரான முகமது குட்டி என்ற பெயரில் மத ரீதியாக வெறுப்பு பிரசாரத்தில் பலரும் ஈடுபட்டனர்.

    நடிகர் மம்முட்டி மீதான இத்தகைய வெறுப்பு பிரசாரத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது சம்பந்தமாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், மம்முட்டியை மதம் அல்லது சாதியின் பிரிவுகளுக்குள் அடைத்து வைக்க முடியாது. வெறுப்பை பரப்புபவர்களின் இழிவான மனதில் மட்டுமே மம்முட்டி முகமது குட்டியாக இருக்கிறார். கேரளாவின் மதச்சார்பற்ற சமூகம் இந்த பிரச்சாரத்தை ஆதரிக்காது என்று தெரிவித்துள்ளார்.

    இதே போல் கேரள கல்வி அமைச்சர் சிவன்குட்டி, மம்முட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அதில், "மம்முட்டி மலையாளிகளின் பெருமை" என்று பதிவிட்டுள்ளார்.

    "மம்முட்டியை முகமது குட்டி என்றும், இயக்குநர் கமலை கமாலுதீன் என்றும், நடிகர் விஜய்யை விஜய் ஜோசப் என்றும் அழைக்கும் சங்பரிவார் அரசியல் கேரளாவில் இயங்காது" என்று கேரள வருவாய்த்துறை அமைச்சர் கே ஃபஜன் தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • யோகி ஆதித்யநாத்தின் கால்களில் விழுந்து வணங்கினார். ரஜினிகாந்தின் இந்த நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
    • பல்வேறு தரப்பினரும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    நடிகர் ரஜினிகாந்த், தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு யாத்திரை செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். உடல்நலக் குறைவு காரணமாக சில ஆண்டுகளாக இமயமலை செல்வதை தவிர்த்து வந்தார்.

    மேலும் கொரோன தொற்று பரவல் காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக அவர் இமய மலைக்கு செல்லவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் மாலத்தீவு, இலங்கை உள்ளிட்ட பகுதிகளில் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ரஜினிகாந்த், கடந்த 9-ந்தேதி பெங்களூரு சென்று, அங்கிருந்து டேராடூன் வழியாக இமயமலைக்கு சென்றார்.

    அந்த பயணத்தை முடித்துக்கொண்டு உத்தர பிரதேச மாநிலத்துக்கு சென்ற ரஜினிகாந்த், அம்மாநில முதல்-மந்திரியான யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார். அப்போது ரஜினிகாந்த், யோகி ஆதித்யநாத்தின் கால்களில் விழுந்து வணங்கினார். ரஜினிகாந்தின் இந்த நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு தரப்பினரும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதுகுறித்து ரஜினியோ, "வயதில் சிறியவராக இருந்தாலும் சன்னியாசிகள், யோகிகள் காலில் விழுவது என்னுடைய பழக்கம். அதைத்தான் செய்தேன்" என்றார். இந்நிலையில் கேரள மாநில கல்வித்துறை மந்திரி சிவன்குட்டி, தனது பேஸ்புக் பதிவில் ரஜினியை கிண்டலடித்து பதிவை வெளியிட்டுள்ளார். "ஹூகும் ஜெயிலர்" என்ற ஹேஸ்டேக்குடன் தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "உடலை நீட்டுவதும், வளைப்பதும் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. இருப்பினும் நம் சூப்பர் ஸ்டார் யோகி போன்ற ஒருவரின் முன் வளைந்த விதம், அவரது முதுகை எளிதில் உடைக்கக்கூடும். அவர் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

    ரஜினி குறித்து கேரள மந்திரியின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×