search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Slovenia"

    • ரொனால்டோவின் முயற்சியை ஸ்லோவேனியா கோல் கீப்பர் ஜான் ஒப்லாக் முறியடித்தார்.
    • ரொனால்டோ தேம்பி அழுத வீடியோ வெளியாகி அனைவரையும் கண்கலங்க செய்துள்ளது.

    யூரோ கோப்பை 2024 கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் துவக்க சுற்று போட்டிகள் நிறைவுபெற்று தற்போது காலிறுதிக்கு முந்தைய ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இதில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற போட்டியில் போர்ச்சுகல் மற்றும் ஸ்லோவேனியா அணிகள் மோதின. இந்த போட்டியில் பெனால்டி ஷூட்-அவுட்டில் போர்ச்சுகல் அணி ஸ்லோவேனியாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. ஆட்டத்தின் முதல் பாதியில் 0-0 என்ற கோல் கணக்கில் இரண்டு அணிகளும் இருந்ததால் பெனால்டி கோல் வாய்ப்பு வழங்கப்பட்டது.

     

    அப்போது இந்த போட்டியில் தனது முதலாவது கோலை அடிக்க முயன்ற போர்ச்சுகல் அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் முயற்சியை ஸ்லோவேனியா கோல் கீப்பர் ஜான் ஒப்லாக் முறியடித்தார். கோலை மிஸ் செய்த அதிர்ச்சியில் ரொனால்டோவின் கணகளில் இருந்து கண்ணீர் ஆறாக பெருகியது.

    ஆனால் அதன்பின்னர் சுதாரித்த ரொனால்டோ போட்டியின் அடுத்த பாதியில் போர்ச்சுகல் அணிக்கான முதல் கோலை ஸ்கோர் செய்து தொடர்ந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். ஆனால் தனது முதல் கோலை மிஸ் செய்ததால் ரொனால்டோ தேம்பி அழுத வீடியோ வெளியாகி அனைவரையும் கண்கலங்க செய்துள்ளது.

     

    சமீபத்தில் சவுதி யூரோ கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் தனது அல்- நாசர் அணி தோல்வி அடைந்ததால் ரொனால்டோ மைத்தனத்தில் கதறி அழுத்து குறிப்பிடத்தக்கது. 

     

    • ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
    • போட்டி முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

    யூரோ கோப்பை 2024 கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் துவக்க சுற்று போட்டிகள் நிறைவுபெற்று தற்போது காலிறுதிக்கு முந்தைய ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இதில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற போட்டியில் போர்ச்சுகல் மற்றும் ஸ்லோவேனியா அணிகள் மோதின. இந்த போட்டியில் பெனால்டி ஷூட்-அவுட்டில் போர்ச்சுகல் அணி ஸ்லோவேனியாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

     


    போட்டி முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்காததால், பெனால்டி முறை கொண்டுவரப்பட்டது. போர்ச்சுகல் அணி வெற்றிக்கு ரொனால்டோ முதல் கோல் அடித்து அசத்தினார். மறுபுறம் போர்ச்சுகல் அணி கோல் கீப்பர் டியோகோ கோஸ்டா மூன்று பெனால்டி ஷூட்-அவுட்களை தடுத்து தனது அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

    இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் போர்ச்சுகல் அணி யூரோ கோப்பை தொடர்களில் ஏழாவது முறையாக காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. இதுவரை எந்த அணியும் இத்தனை முறை காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    • குரூப் ‘சி’ பிரிவில் நடைபெற்ற போட்டியில் டென்மார்க்- ஸ்லோவேனியா அணிகள் மோதின.
    • ஆட்டத்தின் முதல் பாதியில், 17-வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சென் முதல் கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத்தந்தார்.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றுள்ளன.

    ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் நேற்று குரூப் 'சி' பிரிவில் நடைபெற்ற போட்டியில் டென்மார்க்- ஸ்லோவேனியா அணிகள் மோதின.


    ஆட்டத்தின் முதல் பாதியில், 17-வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சென் முதல் கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத்தந்தார். இதற்கு ஸ்லோவேனியா அணியினரால் பதிலடி தர முடியவில்லை. முதல் பாதி முடிவில் டென்மார்க் அணி 1-0 என முன்னிலையில் இருந்தது.

    ஆட்டத்தின் 2-வது பாதியில் ஸ்லோவேனியா வீரர் எரிக் ஜான்சா 77-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து, ஆட்டத்தை சமனுக்கு கொண்டுவந்தார். அதன் பின்னர் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்காததால் ஆட்டம் டிரா ஆனது.

    • பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க நடத்திய வாக்கெடுப்பு வெற்றி பெற்றது.
    • மால்டா நாடும் அதை விரைவில் பின்பற்றலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இதற்கிடையே ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் ஸ்பெயின், நார்வே, அயர்லாந்து ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனிநாடாக சமீபத்தில் அங்கீகரித்தன. இதற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    இந்த நிலையில் பாலஸ்தீனத்தை தனிநாடாக மற்றொரு ஐரோப்பிய நாடான சுலோவேனியா அங்கீகாரம் அளித்துள்ளது. பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர மற்றும் இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரிக்க சுலோவேனியா அரசாங்கம் முடிவு செய்தது. இதற்கு அந்நாட்டு பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க நடத்திய வாக்கெடுப்பு வெற்றி பெற்றது.

    இதுகுறித்து சுலோவேனியா பிரதமர் ராபர்ட் கோலோப் கூறும்போது, "இன்றைய பாலஸ்தீனத்தை ஒரு இறையாண்மை மற்றும் சுதந்திர நாடாக அங்கீகரிப்பது மேற்குக் கரை மற்றும் காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது" என்றார்.

    இந்த வாக்கெடுப்புக்கு எதிர்க்கட்சியான ஸ்லோவேனியன் ஜனநாயகக் கட்சி ஆட்சேபனை தெரிவித்து இருந்தது. சுதந்திர பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதற்கு இது சரியான நேரம் அல்ல என்றும், இந்த நடவடிக்கை ஹமாஸ் அமைப்புக்கு மட்டுமே பலன் அளிக்கும் என்றும் தெரிவித்து இருந்தது. இதனால் அக்கட்சி வாக்கெடுப்பை புறக்கணித்தது.

    ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பினர்களில் சுவீடன், சைப்ரஸ், ஹங்கேரி, செக் குடியரசு, போலந்து, ஸ்லோவாக்கியா, ருமேனியா, பல்கேரியா ஆகிய நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ளன. இதே போல் மால்டா நாடும் அதை விரைவில் பின்பற்றலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    ×