search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SouthAfrica"

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 181 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 168 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    முல்தான்:

    தென் ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி முல்தானில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்தது. முனீபா அலி 45 ரன்னும், நிதா தார் 29 ரன்னும், சித்ரா அமீன் 28 ரன்னும் எடுத்து அவுட் ஆனார்கள். பாத்திமா சனா 37 ரன்னும், அலியா ரியாஸ் 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இதையடுத்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. அந்த அணியின் சுனே லூவஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். லாரா 36 ரன்னும், அன்னெக் போஸ் 24 ரன்னும் எடுத்தனர். சுனே லூவஸ் 53 ரன்னும், குளோ 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 168 ரன்களே எடுத்தது. இதன்மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான், தொடரில் 1-1 என்ற சமனிலை பெற்றது.

    • தென் ஆப்பிரிக்கா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • 4 புள்ளிகளுடன் தென்ஆப்பிரிகா அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு உள்ள நிலையில், கடைசி சூப்பர் 8 சுற்றில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    ஐசிசி ஆண்கள் டி20 உலக கோப்பை போட்டியில் தென்ஆப்பிரிக்கா வீரர் டேல் ஸ்டெய்னின் பந்து வீச்சு சாதனையை அன்ரிச் நோர்ஜே முறியடித்துள்ளார்.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. தென் ஆப்பிரிக்கா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அன்ரிச் நோர்ஜே ஒரு விக்கெட்டை எடுத்தபோது அவர் டேல் ஸ்டெய்னின் சாதனையை முறியடித்துள்ளார்.

    தென்ஆப்பிரிக்கா வீரரான டேல் ஸ்டெய்ன், டி20 உலக கோப்பை போட்டிகளில் 30 விக்கெட்டுக்களை எடுத்து இருந்தார். தற்போது நோர்ஜே 31 விக்கெட்டுகளுடன் அவரை முந்தியுள்ளார்.

    இந்த போட்டியில், அன்ரிச் நோர்ஜே 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் தொடரில் இதுவரை அவர் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    டி20 உலகக் கோப்பையில் அன்ரிச் நோர்ஜே 16 போட்டிகளில் 31 விக்கெட்டுகளும், டேல் ஸ்டெய்ன் 23 போட்டிகளில் 30 விக்கெட்டுகளும், மோர்னே மோர்கல் 17 போட்டிகளில் 24 விக்கெட்டுகளும், ரபாடா 19 போட்டிகளில் 24 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர்.

    4 புள்ளிகளுடன் தென்ஆப்பிரிகா அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு உள்ள நிலையில், கடைசி சூப்பர் 8 சுற்றில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    5 நாள் அரசுமுறைப் பயணமாக தென்னாப்பிரிக்கா சென்றுள்ள சுஷ்மா சுவராஜ் இன்று மகாத்மா காந்தி தனது அமைதி போராட்டத்தை தொடங்கிய பீனிக்ஸ் செட்டில்மெண்டில் செடிகளை நட்டினார். #SushmaSwarajinSouthAfrica #Johannesburg #BRICS
    ஜோகனஸ்பர்க்:

    பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் உச்சி மாநாடு ஜோஹனஸ்பர்க் நபரில் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இந்த மாநாடு தொடர்பான ஏற்பாடுகள் மற்றும் விவாதிக்கப்படவுள்ள விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிப்பதற்காக ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்கும் கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது.

    இந்த கூட்டத்திலும், இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாபிரிக்காவுடனான முத்தரப்பு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக நடைபெறும் கூட்டத்திலும் பங்கேற்பதற்காக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 5 நாள் அரசுமுறைப் பயணமாக தென்னாப்பிரிக்கா சென்றடைந்தார்.


    இந்நிலையில், இன்று டர்பன் பகுதியில் உள்ள பாரம்பரிய இடமான பீனிக்ஸ் செட்டில்மெண்ட் பகுதியில் செடிகளை நட்டினார். இந்த பகுதியில் தான் மகாத்மா காந்தி தனது அகிம்சை போராட்டத்தை தொடங்கினார். காந்தியின் நினைவாக அங்கு சென்று அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

    இதையடுத்து, வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்தில் அடிமை நாடாக சிக்கிக்கிடந்த தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி ரெயிலில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவத்தின் 125-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பீய்ட்டெர்மார்ட்டிஸ்பர்க் ரெயில் நிலையம் பகுதியில் நடைபெறும் சில நிகழ்ச்சிகளிலும் சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்கிறார். #SushmaSwarajinSouthAfrica  #Johannesburg  #BRICS
    ×