search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Spelling Bee"

    • இறுதிப்போட்டியில் பங்கேற்ற 8 பேரில் 6 பேர் தெற்கு ஆசியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    • ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    வாஷிங்டன்:

    உலகப்புகழ் பெற்ற ஸ்பெல்லிங் பீ' எனப்படும் சொற்களை சரியாக உச்சரிக்கும் போட்டி 1925-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது.

    இந்த ஆண்டு நடந்த போட்டியில் 1.1 கோடி பேர் பங்கேற்றனர். அவர்களில் இருந்து தகுதிச்சுற்றுக்கு 228 பேரும், இறுதிப்போட்டிக்கு 8 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள நேஷனல் ஹார்பர் பகுதியில் ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீ-2024 இறுதிப்போட்டி நேற்று நடந்தது.

    இந்த போட்டியின் இறுதியில் நடந்த டை பிரேக்கர் சுற்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 12 வயது மாணவர் புருகத் சோமா 90 விநாடிகளில் 29 வார்த்தைகளைச் சரியாக உச்சரித்து சாம்பியன் பட்டம் வென்றார்.

    வெற்றி பெற்ற புருகத் சோமாவிற்கு 50,000 டாலர் ரொக்கம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த பைஜன் ஜகி என்ற மாணவர் 2-வது இடமும், கலிபோர்னியாவைச் சேர்ந்த ஷ்ரேய் பரேக் 3-வது இடமும் பிடித்தனர்.

    இறுதிப்போட்டியில் பங்கேற்ற 8 பேரில் 6 பேர் தெற்கு ஆசியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    வெற்றி பெற்ற ஹரிணி லோகனுக்கு பட்டத்துடன் இந்திய மதிப்பில் சுமார் 38 லட்சத்து 80 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில், ஆங்கில வார்த்தைகளுக்கான சரியான, ஸ்பெல்லிங் சொல்லும், தேசிய ஸ்பெல்லிங் பீ போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடப்பது வழக்கம். இந்தப் போட்டிகளில் உலக நாடுகளைச் சேர்ந்த, நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமியர்கள் பங்கேற்பர். அவர்களில் மிகச் சிறந்த போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இறுதிச்சுற்றுப் போட்டிக்கு அனுமதிக்கப்படுவர்.
     
    இந்நிலையில், அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவி ஹரிணி லோகன் ஸ்பெல்லிங் பீ என்ற ஆங்கில உச்சரிப்புப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். 2022-ம் ஆண்டிற்கான ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீ பட்டத்தை ஹரிணி லோகன் வென்றுள்ளார்.

    பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் இந்தப் போட்டியில் நடுவர்கள் குழு அளிக்கும் ஆங்கில வாக்கியத்தின் சரியான உச்சரிப்பை (ஸ்பெல்லிங்) மாணவர்கள் சொல்ல வேண்டும். பல கட்டங்களுக்கு பிறகு இறுதிச்சுற்றில் 2 மாணவர்கள் போட்டியிட்டார்கள். டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மாணவி ஹரிணி லோகன் (8 -ம் வகுப்பு), இந்திய வம்சாவளி மாணவன் விக்ரம் ராஜு ஆகியோர் இறுதிப்போட்டியில் பங்கேற்றனர்.

    இறுதிப்போட்டி மிகவும் பரபரப்பாகச் சென்றது. இறுதியில் ஒரு நீண்ட வாக்கியத்தின் உச்சரிப்பில் ஹரிணி லோகன் 21 வார்த்தைகளை சரியாகக் கூறி பட்டத்தைத் தட்டிச் சென்றார். விக்ரம் ராஜு 15 வார்த்தைகளை மட்டுமே கூறி 2-வது இடத்தைப் பிடித்தார்.

    அமெரிக்காவில் நடைபெற்ற சிக்கலான ஆங்கில எழுத்துகளை வாசிக்கும் ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கார்த்திக் நெம்மானி தேசிய விருது வென்றுள்ளார். #SpellingBee
    நியூயார்க்:

    அமெரிக்காவில், ஆங்கில வார்த்தைகளுக்கான சரியான, 'ஸ்பெல்லிங்' சொல்லும், 'தேசிய ஸ்பெல்லிங் பீ' போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடப்பது வழக்கம். இந்த போட்டிகளில், உலக நாடுகளை சேர்ந்த, நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமியர்கள் பங்கேற்பர். அவர்களில், மிகச் சிறந்த போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இறுதிச் சுற்றுப் போட்டிக்கு அனுமதிக்கப்படுவர்.

    இதுவரை நடந்த போட்டிகளில், தொடர்ந்து, 11 ஆண்டுகளாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த போட்டியாளர்களே வெற்றி பெற்று வந்துள்ளனர். கடந்த ஆண்டு இந்திய வம்சாவளியை சேர்ந்த அனன்யா வினய் என்ற மாணவி இந்த பட்டத்தை வென்றிருந்தார்.

    இந்நிலையில், அமெரிக்காவின் மேரிலாண்ட் பகுதியில் நடைபெற்ற இந்த ஆண்டிற்கான 91-வது 'தேசிய ஸ்பெல்லிங் பீ' போட்டியில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 516 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

    அவர்களில் சிறந்த போட்டியாளர்கள் 41 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு 16 பேர் மட்டும் இறுதிச்சுற்று போட்டிக்கு நுழைந்தனர்.  9 சிறுமிகள் மற்றும் 7 சிறுவர்கள் என இறுதிப் போட்டியில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் 11 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்கள்.  

    இதில் கடைசியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கார்த்திக் நெம்மானி மற்றும் நயாசா மோடி இடையே கடும் போட்டி நிலவியது. இருவருக்கும் இடையில் 20 வார்த்தைகள் தொடர்பான ஆங்கில ஸ்பெல்லிங் போட்டியில் இவர்கள் இருவருக்கும் இடையில் இழுபறி நீடித்தது.

    இறுதியாக, "koinonia" என்ற சொல்லுக்கான எழுத்துகளை மிகச்சரியாக உச்சரித்து, டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் நெம்மானி 'தேசிய ஸ்பெல்லிங் பீ' பட்டத்தை தட்டிச் சென்றார்.

    இதையடுத்து, 14 வயது சிறுவனான கார்த்திக் நெம்மானிக்கு பரிசுக்கான சுழல்கேடயத்துடன் 40 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசளிக்கப்பட்டது. மேலும், மெர்ரியம் - வெப்ஸ்ட்டர் சுற்றுலா நிறுவனத்தின் சார்பாக நியூயார்க், ஹாலிவுட் நகரங்களுக்கான சுற்றுலா பேக்கேஜ் மற்றும் 2500 அமெரிக்க டாலர்களும், கார்த்திக் பயிலும் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கு பிட்ஸா விருந்தும் அளிக்கப்பட்டது. #SpellingBee
    ×