search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Subramaniam Badrinath"

    • தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
    • இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி ரிலீசுக்கு தயாராக இருக்கும் புதிய படம் தி கோட் (தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்). செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில், தி கோட் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

    ரசிகர்கள் இந்த படத்திற்கான டிக்கெட் எடுப்பதில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தி கோட் படம் குறித்த புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்திய தேசிய அணி மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரருமான சுப்ரமனியம் பத்ரிநாத்- தி கோட் படத்திற்கு டப்பிங் பேசியுள்ளார்.

    இதனை அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார். அதில், கோட் படத்தில் எனது பங்கை செய்துள்ளேன். முதல் முறையாக படத்தில் அங்கம் வகிக்கிறேன். சுவாரஸ்யமாக இருக்கிறது. ரிவ்யூ மற்றும் கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன், என குறிப்பிட்டுள்ளார்.  

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
    • ரியான் பராக்கிற்கு பதிலாக ருதுராஜ் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

    இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 , 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்த டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும் டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த தொடரில் ருதுராஜ் இடம் பெறாதது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜிம்பாப்வே தொடரில் 3 போட்டிகளில் விளையாடிய ருதுராஜ் ஒரு அரை சதம் மற்றும் ஒரு போட்டியில் 49 ரன்கள் குவித்தார்.

    இந்நிலையில் இந்திய அணியில் ருதுராஜ் தேர்வு செய்யப்படாததை முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சித்து பேசியிருந்தார்.

    அதேபோல் இந்திய அணியில் ருதுராஜ் தேர்வு செய்யப்படாதது குறித்து முன்னாள் இந்திய வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.

    இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசிய அவர், "ருதுராஜ் தேர்வு செய்யப்படாதது ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் அவர் இந்தியாவுக்காகவும் உள்ளூர் தொடர்களிலும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அப்படிப்பட்ட அவரை நீக்குவதற்கு எந்த காரணமும் இல்லை.

    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கடைசி 7 இன்னிங்ஸில் அவர் 71.2 என்ற அபாரமான சராசரியில் 158.7 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் குவித்தார். அப்படி கடந்த சில வருடங்களாகவே அவர் தொடர்ந்து ரன்கள் மேல் ரன்கள் அடித்துள்ளார். ஆனாலும் தேர்வு செய்யப்படாததற்கான காரணம் தெரியாததால் ருதுராஜ்க்கு நியாயம் வேண்டும் என்று நான் வெளிப்படையாகவே கேட்கிறேன். அவரை எடுக்காதது மிகப்பெரிய தவறு. அது எனக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

    மறுபுறம் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. விராட்கோலி , ரோகித்துடன் நானும் விளையாடியுள்ளேன். அவர்களிடம் பேட்டிங்கில் எக்ஸ்ட்ரா திறமை இருந்தது. ஆனால் அவர்களைப் போல கில்லையும் சிலர் தத்தெடுத்து வளர்க்க நினைக்கின்றனர்.

    ரியான் பராக்கிற்கு பதிலாக ருதுராஜ் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ருதுராஜ், ரிங்கு போன்ற வீரர்கள் கழற்றி விடுவதை பார்க்கும் போது எனக்கு ஒன்று தோன்றுகிறது. அதாவது நீங்கள் ஏதாவது நடிகைகளுடன் தொடர்பிலிருந்து கிசுகிசுக்களை வைத்துக் கொள்ள வேண்டும். வித்தியாசமாக உடலில் டாட்டூ குத்திக்கொள்ள வேண்டும். சொந்தப் புகழை பெருமை பேசுவதற்காக பிஆர் ஏஜென்சியை வைத்துக் கொள்ள வேண்டும்.

    கிரிக்கெட்டில் நன்றாக விளையாடத் தெரிவதுடன் இந்தியாவுக்காக விளையாட இப்போதெல்லாம் இந்த 3 விஷயங்களை வைத்திருப்பது அவசியமாகிறது. அப்போது தான் உங்களால் பெரியாளாக வர முடியும் போல" என்று காட்டமாக பேசியுள்ளார்.

    • போட்டி துவக்கத்தில் இந்திய அணி 15 ஓவர்களுக்குள் நான்கு விக்கெட்களை இழந்து தடுமாறியது.
    • ஷகீன் அஃப்ரிடி வீசிய பந்து, ரோகித் ஷர்மா கண் இமைக்கும் நேரத்தில் ஸ்டம்ப்களை பதம்பார்த்தது.

    ஆசிய கோப்பை 2023 தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி நேற்று நடைபெற்றது. மழை காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்ட போதிலும், முதல் பாதி ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

    போட்டியின் துவக்கத்தில் இந்திய அணி 15 ஓவர்களுக்குள் நான்கு விக்கெட்களை இழந்து தடுமாறியது. இந்த போட்டியில் ரோகித் ஷர்மா அவுட் ஆன விதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஷகீன் அஃப்ரிடி வீசிய பந்து, ரோகித் ஷர்மா கண் இமைக்கும் நேரத்தில் ஸ்டம்ப்களை பதம்பார்த்தது.

    இவர் அவுட் ஆன புகைப்படம் இணையத்தில் வெளியானதும், கோலிவுட்டில் ரிலீசான சென்னை 600028 படத்தில் வெளியான காட்சியை போன்றே இருக்கிறது. இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆக, அதனை இந்திய அணியின் முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் தனது சமூக வலைதள பதிவில் பகிர்ந்து இருக்கிறார்.

    ×