search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil name board"

    • பதிவு பெற்ற வணிகர்களின் எண்ணிக்கை 88,219 ஆக அதிகரித்துள்ளது.
    • வணிகர்களுக்கும் அரசுக்கும் இடையே இடைத்தரகர்கள் கிடையாது.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர்களின் முதல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முதலமைச்சர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * கலைஞர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட வணிகர் நலவாரியம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    * வணிகர் நல வாரிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை 30 ஆக திமுக அரசு உயர்த்தியது.

    * 40,000-க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்கள் தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் இணைந்துள்ளனர்.

    * பதிவு பெற்ற வணிகர்களின் எண்ணிக்கை 88,219 ஆக அதிகரித்துள்ளது.

    * வணிகர்களுக்காக பல முக்கியமான நடவடிக்கைகளை முன்னெடுக்க தயாராக உள்ளோம்.

    * வணிகர்களுக்கும் அரசுக்கும் இடையே இடைத்தரகர்கள் கிடையாது.

    * தமிழில் பெயர் பலகை வைக்க வணிகர்கள் முன் வரவேண்டும்.

    * நலிவுற்ற வணிகர்களுக்கு பெட்டிக்கடை வைக்கவும், 3 சக்கர வாகனம் வழங்க ரூ.10,000 வழங்கப்படுகிறது.

    * வணிகர் நல வாரிய உறுப்பினர்கள் உயிரிழந்தால் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதி ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

    • தமிழில் பெயர்ப்பலகை வைக்காவிட்டால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும்.
    • இதுதொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    மதுரை:

    தமிழ்நாட்டில் செயல்படும் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை கண்டிப்புடன் பின்பற்றுமாறு வணிகர்களுக்கு உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் ஒருவர் மனு தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு விசாரணையில், தமிழில் பெயர்ப்பலகை வைக்காவிட்டால் ரூ.50 லிருந்து ரூ.2000 ஆக அபராத தொகையை உயர்த்த தமிழ்நாடு அரசு விரைவில் அரசாணை பிறப்பிக்க இருப்பதாக அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, தமிழில் பெயர்ப்பலகை வைக்காத எத்தனை நிறுவனங்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

    • பல்லடம் நகர பகுதியில் கடைகளின் பெயர் பலகைகள் ஆங்கிலத்தில் மட்டும் எழுதப்பட்டுள்ளது.
    • சில கடைகளில் தமிழ் பெயர்கள் பெயர்பலகையின் ஓரத்தில் எழுதப்பட்டுள்ளது.

     திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டரிடம் பல்லடம் அனுப்பட்டியை சேர்ந்த சமூக நல ஆர்வலர் கூட்டமைப்பை சேர்ந்த அண்ணாதுரை அளித்த மனுவில், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் கட்டாயம் தமிழில் இருக்க வேண்டும். மற்ற மொழிகள் அதற்கு கீழ் இடம்பெற உத்தரவு உள்ளது.

    ஆனால் பல்லடம் நகர பகுதியில் கடைகளின் பெயர் பலகைகள் ஆங்கிலத்தில் மட்டும் எழுதப்பட்டுள்ளது. சில கடைகளில் தமிழ் பெயர்கள் பெயர்பலகையின் ஓரத்தில் எழுதப்பட்டுள்ளது. இது போன்ற பெயர்ப்பலகைகளை அகற்றி தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    ×