என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "The Chief Minister of Tamil Nadu is acting like a puppet"
- திருப்பத்தூர் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு
- கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்பு
திருப்பத்தூர்:
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திருப்பத்தூர் தொகுதி அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் குனிச்சி ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கந்திலி கிழக்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ், தலைமை வகித்தார் அனைவரையும் கந்திலி மேற்கு ஒன்றிய செயலாளர் சி எம் மணிகண்டன், வரவேற்றார்.
தொடக்க உரையாக அதிமுக நகர செயலாளர் டி.டி குமார், ஜெபேரவை ஒன்றிய செயலாளர் ஆர்.ஆறுமுகம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் வி.டி. முருகன், ஒன்றிய செயலாளர் சி செல்வம், டாக்டர் என். திருப்பதிமாவட்டத் துணைச் செயலாளர் ஏஆர் ராஜேந்திரன் உட்பட பலர் பேசினார்கள்.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலாளர் கே. சி. வீரமணி கலந்து கொண்டு பேசியதாவது:-
திமுக ஆட்சியில் தமிழக முதல்வர் பொம்மை போல் செயல்படுகிறார் 4, முதல்அமைச்சர்கள் தமிழ்நாட்டில் செயல்படுகிறார்கள், சினிமாத்துறை கவனிக்க ஒரு முதலமைச்சர், காண்ட்ராக்ட் துறை கவனிக்க ஒரு முதலமைச்சர்என 4 பேர் செயல்பட்டு வருகிறார்கள்.
இதில் மக்களுக்கான முதல்வர் யாருமில்லை, அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அனைத்து திட்டங்களும் நிறுத்தப்பட்டு விட்டது தாலிக்கு தங்கம், மடிக்கணினி, அம்மா ஸ்கூட்டர், அம்மா உணவகம் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டது. அதிமுக ஆட்சியின் போது மின் கட்டன உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் கருப்பு சட்டை அணிந்து வந்து கொரோனாவை விட கொடியது என பேசினார்.
தற்போது ஏற்றப்பட்டுள்ள மின் கட்டணத்தால் அனைவருக்கும் பல மடங்கு கட்டண உயர்வு வரும் இது மட்டும் இன்றி சொத்து வரி, வீட்டு வரி, பால் பஸ் கட்டணம் உயர்வு என அனைத்தும் ஏற்றி மக்களுக்கு போனஸ் வழங்கி உள்ளார்.
திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்ற வில்லை பெண்களுக்கு ரூபாய் ஆயிரம் நீட் தேர்வு ரத்து எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றவில்லை திமுக பொய்யான வாக்குறுதியை அளித்தனர் அதனை நம்பி மக்கள் ஏமாந்து விட்டனர்.
விரைவில் திமுக ஆட்சியை மக்கள் தூக்கி அடிப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்
கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் டாக்டர் லீலா சுப்ரமணியம், தொகுதி செயலாளர் கே.எம்.சுப்பிரமணியம், டிடிசி சங்கர், ஆர்.நாகேந்திரன், தம்பா கிருஷ்ணன், நகராட்சி கவுன்சிலர் எஸ்எம்எஸ். சதீஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர் இறுதியில் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் சுப்பிரமணி நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்