search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirchendur"

    • இந்தியன் வங்கி சார்பில் மாணவிக்கு பாராட்டு விழா நேற்று பள்ளியில் நடைபெற்றது.
    • இந்தியன் வங்கி நெல்லை மண்டல மேலாளர் ஜெயபாண்டியன் மாணவியை பாராட்டி கோப்பை மற்றும் ரூ. 15 ஆயிரம் பரிசு தொகையினை மாணவியிடம் வழங்கினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி துர்கா கடந்த 2021-2022 கல்வியாண்டில் தமிழ்ப்பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார். இதையடுத்து இந்தியன் வங்கி சார்பில் மாணவிக்கு பாராட்டு விழா நேற்று பள்ளியில் நடைபெற்றது.

    விழாவுக்கு பள்ளி முதன்மை முதல்வர் செல்வவைஷ்ணவி தலைமை தாங்கினார். முதல்வர் ஜீனத் முன்னிலை வகித்தார். இந்தியன் வங்கி நெல்லை மண்டல மேலாளர் ஜெயபாண்டியன் மாணவியை பாராட்டி கோப்பை மற்றும் ரூ. 15 ஆயிரம் பரிசு தொகையினை மாணவியிடம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் வங்கி மண்டல வளர்ச்சி அலுவலர் சுஜா மாணவிக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். இதில் மாணவியின் தந்தையான ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார், தாய் ஹேமா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். சாதனை மாணவியை பள்ளி தாளாளர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் பாராட்டினர்.

    • திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் எந்திரவியல் துறை சார்ந்த மாஸ், மின்னணு தகவல் தொடர்பு துறை சார்ந்த ஸ்பேஸ் சங்கங்களின் நிறைவு விழா நடந்தது.
    • மாஸ் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுத்தொகை, சான்றிதழை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி வழங்கினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் எந்திரவியல் துறை சார்ந்த மாஸ், மின்னணு தகவல் தொடர்பு துறை சார்ந்த ஸ்பேஸ் சங்கங்களின் நிறைவு விழா நடந்தது.

    மாஸ் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட கேட் டைம் ஹேக்கர், அட்டை கலை, புதுமை கருத்து ஹேக்கத்தான், திட்ட யோசனைகள் போட்டி, பலூன் கார், மூளையதிர்ச்சி தொழில்நுட்பங்கள், குழு விவாதம், வேலைவாய்ப்பு பற்றிய அமர்வு மற்றும் ஸ்பேஸ் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட உலகளாவிய வளர்ச்சிக்கான படைப்பாற்றல் கண்டுபிடிப்புகளில் மின்னணுவியல், செல்போன் சேவை–யில் திறன் அபிவிருத்தி திட்டம், சைபர் பாதுகாப்பு அடிப்படை விழிப்புணர்வு, மைண்ட் ஸ்கிராம்பில், டெக் இன்டலெக்ட், டாகில் மைண்ட்ஸ் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுத்தொகை, சான்றிதழை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி வழங்கினார். இதில் துறைத்தலைவர்கள், சங்கங்களின் பொறுப்பு பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ×