search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Varun Kumar"

    • வந்திதா பாண்டே IPS மீது இணையவழி ஆபாச தாக்குதல் நடத்தி வரும் அனைவர் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
    • வந்திதா பாண்டே IPS அவர்களின் கரம்பற்றி எனது ஆதரவையும், அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக வருண்குமார் ஐ.பி.எஸ் பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மனைவி வந்திதா பாண்டே புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.யாக உள்ளார்.

    இவர்கள் இருவருக்கும் எதிராகவும் தொடர்ச்சியாக இணையத்தில் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் அவதூறு கருத்துக்கள் பதிவிட்டு வந்தனர். இதனால், எக்ஸ் தளத்தில் இருந்து நானும், எனது மனைவியும் விலகுவதாக திருச்சி எஸ்.பி. வருண்குமார் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அவர் விடுத்துள்ள அறிக்கையில், "ஒரு சராசரி குடும்ப நபராக, குழந்தைகள், பெற்றோர்கள் மீது கொண்டுள்ள அக்கறை காரணமாக X இணைய உரையாடல்களில் இருந்து நானும் எனது மனைவி வந்திதா பாண்டே IPSம் தற்காலிகமாக விலக முடிவு எடுத்துள்ளோம். இதை பயத்தினாலோ அருவருப்பினாலோ செய்யவில்லை. வக்கிர புத்தியும் கொடூர எண்ணமும் கொண்டவர்கள் தான் இதற்காக அவமானப்பட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்நிலையில், வந்திதா பாண்டேவுக்கு ஆதரவாக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "பெண்கள் எந்த துறையில் இருந்தாலும், எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், அவர்கள் சார்ந்த ஆணை இழிவு செய்யும் வண்ணம், அந்த பெண்களை ஆபாசமாக இழிவுபடுத்துவதும், அறுவெறுக்கத்தக்க முறையில் பிரச்சாரம் செய்வதும் எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ளமுடியாத இழிச்செயல்.

    புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே IPS மற்றும் அவரது குடும்பத்தினர் மீது இணையவழி ஆபாச தாக்குதல் நடத்தி வரும் அனைவர் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒரு சக பெண்ணாகவும், சமூக அக்கறை உள்ள நபராகவும் வந்திதா பாண்டே IPS அவர்களின் கரம்பற்றி எனது ஆதரவையும், அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
    • சாட்டை துரைமுருகனை குறி வைத்து திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் செயல்படுகிறார்.

    சென்னை:

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசார மேடையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தேவர், நாடார், கோனார், தேவேந்திரர் மீது வருணுக்கு பிறப்பு வெறுப்பு. அதனால் அவர்களுக்கு எதிராக செயல்படுகிறார்.

    * ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் சாதி வெறுப்புடன் செயல்படுகிறார் என்பதற்கு ஆதாரம் உள்ளது.

    * சாட்டை துரைமுருகனை குறி வைத்து திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் செயல்படுகிறார் என்று அவர் கூறினார்.

    • இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 17 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்.
    • 2020 ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தவர் வருண் குமார்.

    இந்திய ஹாக்கி அணி வீரர் வருண் குமார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலிப்பாக கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம்பெண் பெங்களூருவில் உள்ள ஞானபாரதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அந்த புகார் அடிப்படையில் ஹாக்கி வீரர் வருண் குமார் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் வருண் குமார் இடம் பெற்றிருந்தார். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியிலும் இடம் பிடித்திருந்தார்.

    2021-ல் அர்ஜூனா விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. போக்சோ தவிர்த்து மோசடி பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    புகார் அளித்த பெண் ஐதராபாத்தை சேர்ந்த கைப்பந்து வீராங்கனை ஆவார். இவருக்கு 17 வயதாக இருக்கும்போது இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதன்பின் திருமணம் செய்வதாக உறுதி அளித்து ஏமாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

    ×