search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Victory celebration"

    • நேஷனல் பிரிமீயர் லீக் தொடரின் ஒரு போட்டியில் ரெயின்போ 1 கிரிக்கெட் அணியும் சோகோ ரேன்சர்ஸ் என்ற அணியின் மோதியது.
    • இந்த போட்டியில் ரெயின்போ அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது.

    நேஷனல் பிரிமீயர் லீக் தொடரின் ஒரு போட்டியில் ரெயின்போ 1 கிரிக்கெட் அணியும் சோகோ ரேன்சர்ஸ் என்ற அணியின் மோதியது. இந்த போட்டியில் 45 ஓவர்கள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் விளையாடிய சோகோ ரேன்சர்ஸ் அணி 230 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து விளையாடிய ரெயின்போ அணிக்கு கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. முதல் 5 பந்துகளில் 7 ரன்கள் எடுக்கப்பட்டது. இதனால் கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது பேட்டிங் செய்த ப்ரான்சிஸ் கடைசி பந்தை சிக்சராக விளாசினார்.

    இதனையடுத்து வெற்றியை கொண்டாடும் விதமாக பேட்டை பறக்கவிட்டார். அந்த பேட் நடுவரின் காலில் வந்து தாக்கியது. வலியால் துடித்த நடுவர் அந்த சமயத்திலும் பணியை சிறப்பாக செய்யும் விதமாக சிக்சர் என சிரித்தப்படி வழங்கினார். நடுவர் மீது பேட் பட்டத்தை கண்டும் காணாமல் இருந்த பேட்டர் கொண்டாடுவதை நிறுத்தவில்லை. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • குஜராத்தில் பா.ஜ.க. 7-வது முறையாக தொடர்ந்து வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
    • ஆழ்வை கிழக்கு மண்டல் தலைவர் குமரேசன், மாநில கூட்டுறவு பிரிவு செயலாளர் மாரிதுரைசாமி உள்பட பா.ஜ.க வினர் பலர் கலந்து கொண்டனர்.

    தென்திருப்பேரை:

    குஜராத்தில் பா.ஜ.க. 7-வது முறையாக தொடர்ந்து வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக தென்திருப்பேரையில் பா.ஜ.க. சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஆழ்வை கிழக்கு மண்டல் தலைவர் குமரேசன், மாநில கூட்டுறவு பிரிவு செயலாளர் மாரிதுரைசாமி, மாவட்ட துணைத் தலைவர் ரேவதிசெல்வகிருஷ்ணன், மண்டல் பொதுசெயலாளர் முருகன் என்ற பரமசிவன், துணைத்தலைவர்கள் ராஜாராம், கோவிந்தராஜன், செயலாளர் கண்மணி, பொருளாதார பிரிவு செயலாளர் ராமையா, விவசாய அணி செயலாளர் கணேசமூர்த்தி, கூட்டுறவு பிரிவு தலைவர் ஜெயசிங், பிரச்சார பிரிவு தலைவர் ஆட்டோ சுப்பிரமணியன், இளைஞரணி பொது செயலாளர் பாலமுருகன், பிரச்சார பிரிவு செயலாளர் முருகபெருமாள், ஓ.பி.சி அணி தலைவர் பட்டுராஜ், மகளிரணி தலைவர் காமினி, கிளை தலைவர்கள் ராஜகோபால், முத்துலிங்கம், முத்து சஷ்டிகுமார், ஓன்றிய செயற்குழு உறுப்பினர்கள் வெங்கடசுப்பிரமணியன், செந்தூர்செல்வன், செல்வி, சந்தியா, சிந்தனையாளர் பிரிவு செயலாளர் கங்கா துரை, அரசு தொடர்புத்துறை செயலாளர்கள் கெருடப்பன், கார்த்திக் மற்றும் பா.ஜ.க வினர் கலந்து கொண்டனர்.

    ×