search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "victory parade"

    • 2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது.
    • 17 வருடங்களுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்தது.

    வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 17 வருடங்களுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்தது.

    வெற்றிக் கோப்பையுடன் இந்தியா திரும்பிய வீரர்கள் திறந்தவெளி பஸ்சில் ஊர்வலமாக சென்றனர். பின்பு மும்பை மைதானத்தில் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டு ரூ,125 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து உலகக் கோப்பையில் இடம் பிடித்த வீரர்களுக்கு அவரது சொந்த மாநிலங்களில் வரவேற்பு மற்றும் வெகுமதிகளும் வழங்கப்பட்டன.

    அந்த வகையில் டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு பின் முதல்முறையாக சொந்த ஊரான வதோதராவுக்கு வருகை தந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

    'ஹர்டிக் பாண்டியா வதோதராவின் பெருமை' என்ற திறந்தவெளி பஸ்சில் ஹர்திக் பாண்ட்யா வலம் வந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா அணி இன்று இந்தியா வந்தடைந்தது.
    • மும்பை வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

    வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா அபாரமாக விளையாடியது. பார்படாஸில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

    17 வருடத்திற்குப் பிறகு டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி இன்று காலை இந்தியா வந்தடைந்தது. மும்பையில் இந்திய அணிக்கு வெற்றி ஊர்வலம் நடத்தப்பட்டது. லட்சக்கணக்கான ரசிகர்கள் மரைன் டிரைவ் பகுதியில் இருபக்கமும் குவிந்து வீரர்களை வரவேற்றனர். வீரர்களுடன் பயிற்சியாளர்களும் கலந்து கொண்டனர்.

    அதன்பின் வான்கடே மைதானத்தில் ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் பேச அழைக்கப்பட்டார். அப்போது அவர் கூறுகையில் "ரசிகர்களின் இந்த அன்பை இழக்கப் போகிறேன். இன்று இரவு தெருக்களில் நான் பார்த்ததை (ரசிகர்களின் வரவேற்பு) ஒருபோதும் நான் மறக்கமாட்டேன்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    விராட் கோலி பேசும்போது "2011-ம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பையை வென்றபோது சீனியில் வீரர்கள் அழுத எமோசன் உடன் நான் தொடர்பு கொள்ள முடியவில்ல. ஆனால் தற்போது அதை செய்கிறேன்" என்றார்.

    ×