search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wedding day"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எம்.எஸ்.டோனி கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி சாக்ஷியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    • எம்.எஸ்.டோனி - சாக்ஷி தம்பதிக்கு ஸிவா என்ற ஒரு மகள் இருக்கிறாள்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி சாக்ஷியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எம்.எஸ்.டோனி - சாக்ஷி தம்பதிக்கு ஸிவா என்ற ஒரு மகள் இருக்கிறாள்.

    இன்று தங்களது 15 ஆம் ஆண்டு திருமண நாளை எம்.எஸ்.டோனி - சாக்ஷி கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



    திருமண நாளை ஒட்டி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் 15 ஆவது வருடத்தில் அடி எடுத்து வைக்கிறோம் என்று அவர் பதிவிட்டுள்ளார். 

    • இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
    • நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி தனது 2-வது திருமண நாளை வெளிநாடான ஹாங்காங்கில் கொண்டாடினர்.

    நீண்ட நாட்களாக காதலித்து வந்த இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022-ம் ஆண்டு ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன.

    அண்மையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி தனது 2-வது திருமண நாளை வெளிநாடான ஹாங்காங்கில் கொண்டாடினர்.

    இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி தனது மகன்களுடன் விக்னேஷ் சிவன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நயன்தாரா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அதில், "உலகில் உள்ள அனைத்து அப்பாக்களுக்கு தந்தையர் தினம் வாழ்த்துக்கள்" என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் விக்னேஷ் சிவன் 'போடா போடி' படத்தின் மூலமாக அறிமுகமானார். அந்த படத்தில் சிலம்பரசன், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்திருந்தனர்.
    • கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

    இயக்குநர் விக்னேஷ் சிவன் 'போடா போடி' படத்தின் மூலமாக அறிமுகமானார். அந்த படத்தில் சிலம்பரசன், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். 2012-ம் ஆண்டு வெளியான போடா போடி தோல்வி அடைந்ததை அடுத்து மூன்று வருடங்கள் திரைப்படம் இயக்காமல் இருந்தார். அதனையடுத்து நானும் ரவுடிதான் படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். தனுஷ் தயாரிப்பில் உருவான அப்படத்தில் நயன்தாரா நடித்தார். இப்படம் மாபெரும் வெற்றியை கண்டது இதன் மூலம் அனைவரும் திரும்பிப்பார்க்கும் இயக்குநராக மாறினார் விக்னேஷ். நானும் ரவுடி தான் திரைப்பட படப்பிடிப்பு பணிகளில் விக்னேஷ் மற்றும் நயன்தாரா இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதைத்தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

    அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன. நயன்தாரா சமீப காலமாக படத்தில் நடித்து கிடைக்கும் ஓய்வு நேரத்தில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார்.

    இந்நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி தனது 2-வது திருமண நாளை வெளிநாடான ஹாங்காங்கில் கொண்டாடியுள்ளனர்.

    சமூக வலைதளங்களில் தீவிர ஆர்வம் கொண்ட நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி இந்த புகைப்படங்கள் அனைத்தையும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ந்துள்ளனர்.

    அதில் இரண்டு குழந்தைகளுடன் படகில் போவது, அவரது மகன்கள் இருவரும் ட்ரவுசர்கள் அணிந்து மிகவும் க்யூட்டாக இருக்கின்றனர். மேலும் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் விக்னேஷ் அதில் நயன் தாராவை தூக்கி விலையாடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அப்பதிவில் வெட்டிங் ஆனிவர்சரி வாழ்த்து தெரிவித்து

    'உன்னை திருமணம் செய்து கொண்டது என் வாழ்வில் நடந்த சிறந்த விஷயம் என் உயிர் உலகம் நீயே. லவ் யூ லாட்ஸ் என் தங்கமே. இன்னும் நிறைய வேடிக்கையான நேரங்கள், நினைவுகள் மற்றும் வெற்றிகரமான தருணங்களுக்கு நீண்ட தூரம் உன்னுடன் செல்ல வேண்டும். . எப்பொழுதும் எங்களுடன் நின்று நம்மைப் பாதுகாத்து, நமது பெரிய பெரிய லட்சியங்களை வெற்றிகொள்ளச் செய்ய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நமது உயிர் & உலகம் உடன்." என்று பதிவிட்டுள்ளார்.

    சமீப காலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நயன்தாரா நடித்து வருகிறார். அடுத்து மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 , டெஸ்ட் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.

    • செங்கல்பட்டு என்.ஜி.ஓ.நகரை சேர்ந்தவர் ரமேஷ்.
    • ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார்.

    புதுச்சேரி:

    செங்கல்பட்டு என்.ஜி.ஓ.நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார்.

    இவருக்கும் புதுவை உருளையன்பேட்டை ஒத்தவாடை வீதியை சேர்ந்த ரேவதி என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

    கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரேவதி இதய நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் உருளையன்பேட்டையில் உள்ள தாய் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அவ்வப்போது ரமேஷ் மனைவியை பார்த்து செல்வார்.

    இந்த நிலையில் நேற்று திருமண நாளையொட்டி ரமேஷ் மனைவியை பார்க்க தனது மாமியார் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் அறையில் ரேவதி மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ரேவதியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ரேவதி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது கணவர் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் உருளை யன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமண நாளில் பெண் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே சோகத்ததை ஏற்படுத்தியது.

    125-வது திருமணநாளையொட்டி வடிவமைக்கப்பட்ட செல்லம்மாள்-பாரதி ரதம் கடையம் வந்தடைந்தது.
    கடையம்:

    மகாகவி பாரதியாரின் 125-வது திருமணநாள் விழாவை முன்னிட்டு சேவாலயா தொண்டு நிறுவனம் சார்பில், பாரதி- செல்லம்மாள் சிலை சென்னையில் வடிவமைக்கப்பட்டு கடந்த 1 மாதமாக தமிழகம், புதுச்சேரி முழுவதும் சுற்றி வந்தது.

    சுமார் 1,000 கிலோமீட்டர் சென்ற ரதம் -செல்லமாளின் சொந்த ஊரான தென்காசி மாவட்டம்  கடையத்திற்கு இன்று வந்து சேர்ந்தது. கடையம் வடக்கு தெரு பிள்ளையார் கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து பொதுமக்கள் ரதத்தை வரவேற்றனர்.

    முன்னாள் தலைமை ஆசிரியர் கல்யாணி சிவகாமிநாதன் தலைமையில் ஓய்வுபெற்ற ஆசிரியர் கோபால் முன்னிலையில், லயன்ஸ் கிளப் குமரேசன் பத்திர எழுத்தர்கள் பால்சிங், ராஜசேகர் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.


    ரதத்தில் இருந்த பாரதியார்- செல்லம்மாள் சிலைக்கு பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில் சேவாலயா கிங்ஸ்டன் காஞ்சனா, ஒருங்கிணைப்பாளர் சங்கிலிபூதத்தான் ஆகியோர் கலந்து கொண்டனர். சேவாலயா நிறுவனர் முரளிதரன் நன்றி கூறினார்.

    பின்னர் கல்யாணிபுரத்தில் நடந்த பாரதியார்- செல்லம்மாள் சிலை வரவேற்பு நிகழ்ச்சிக்கு கீழக் கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாதன் தலைமை தாங்கினார்.
    திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு மலர்தூவி பாரதியார் சிலைக்கு மரியாதை செய்தனர்.

    பாரதியாரின் நண்பர் சுடலைமாடன் என்பவர் வசித்த இல்லத்தை சேவாலயா நிறுவனர் முரளிதரன் சென்று பார்வையிட்டார். பாரதியார் கடையத்தில் இருந்தபோது இங்கு பலமுறை வந்து இருந்ததை அங்கிருந்த மக்களும் நெகிழ்ச்சியோடு நினைவுபடுத்தினர்.
    பெரியகுளம் அருகே தனது முதலாவது திருமண நாளை கொண்டாட இருந்த சுரேஷ் அணையில் மூழ்கி பலியானது அவர்கள் குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    ஆண்டிப்பட்டி:

    பெரியகுளம் அருகே உள்ள எண்டப்புளி புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30). இவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பாதுகாப்பு அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த வாரம் இவரது மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதற்காக சுரேஷ் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று வைகை அணை அருகே நடந்த தனது உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்றார்.

    பின்னர் நண்பர்களுடன் வைகை அணை நீர் தேக்கத்துக்கு குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதியில் இறங்கினார். நீரில் மூழ்கிய அவர் தனது நண்பர்களிடம் காப்பாற்றுமாறு சத்தம் போட்டார். ஆனால் அவர்களால் முடியாததால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தீயணைப்பு துறையினர் அங்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் 3 மணி நேரம் போராடி அவரது உடலை மீட்டனர். இது குறித்து வைகை அணை போலீசார் வழக்கு பதிவு செயது விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இன்று தனது முதலாவது திருமண நாளை கொண்டாட தயார் நிலையில் இருந்த சுரேஷ் அணையில் மூழ்கி பலியானது அவர்கள் குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.



    ×