search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A daily wage of Rs.425 should be implemented for plantation workers"

    • அமுல்கந்தசாமி எம்.எல்.ஏ. கலெக்டரிடம் மனு அளித்தார்.
    • 7 ஆயிரம் ஏக்கர் ஆயக்கட்டு சேர்க்கப்படாமல் விடுபட்டுள்ளது.

    கோவை

    வால்பாறை ெதாகுதி அமுல்கந்தசாமி எம்.எல்.ஏ. கலெக்டர் சமீரனிடம் மனு அளித்தார்.

    அந்த மனுவில் கூறியிரு ப்பதாவது:-

    வால்பாறை மக்கள் பயன்பெறும் வகையில் முடீஸ் பகுதியில் தொழில் பயிற்சி நிறுவனம் ஒன்றை அமைக்க வேண்டும். தேயிலைதோட்ட தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 425 ரூபாய் 40 பைசா என நிர்ணயம் செய்து கடந்த ஆண்டு தமிழக அரசால் வரைவு ஆணை வெளியிடப்பட்டது.

    இறுதி ஆணை வெளியிடாததால் 40 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இறுதி அரசாணை வெளியிட வேண்டும். வனவிலங்கு மோதல் அதிகமாக இருப்பதால் வால்பாறையில் குடியிருப்பு பகுதிகளை சுற்றி பாதுகாப்பு வேலி மற்றும் அகழிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வால்பாறை பகுதி சிறந்த சுற்றுலா தலமாக மாறி வருகிறது. அதனை மேம்படுத்த முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட படகு இல்லம், பூங்கா ஆகியவற்றை உடனடியாக திறக்க வேண்டும்.வால்பாறை நகரத்திற்கு பொள்ளாச்சியில் இருந்து மாற்றுப்பாதையும் வால்பாறை மலைப்பகுதிக்கு கீழ் பகுதியில் இருந்து ரோப்கார் அல்லது வின்ச் வசதி செய்து தர வேண்டும்.

    ஆனைமலையில் தீயணைப்பு நிலையம், கலைக்கல்லூரி அமைக்க வேண்டும். குடிநீர் பிரச்சினை கம்பாலப்பட்டி கூட்டுகுடிநீர் குழாய்கள் மிகவும் பழுதாகி, ஒரு பகுதி மட்டும் சீரமைக்கப்பட்டுள்ளது. முழுமையாக சீரமைத்து திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காளியப்ப கவுண்டன்புதூர் கிரா மத்தில் தரைப்பாலத்தை உயர்மட்ட மேம்பாலமாக மாற்ற வேண்டும். சர்க்கார்பதி, பவர்ஹவுஸ் இடத்தில் மலைவாழ் மக்கள் வசதித்து வருகிறார்கள். அங்கு சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்.

    பி.ஏ.பி. பாசன திட்டத்தில் வேட்டைக்கா ரன்புதூர் பகுதியில் உள்ள 7 ஆயிரம் ஏக்கர் ஆயக்கட்டு சேர்க்கப்படாமல் விடுபட்டுள்ளது. இந்த நிலங்களை ஆயக்கட்டில் சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×