search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A leopard in a"

    • கோழி பண்ணை அருகே மர்ம விலங்கு ஒன்று தோட்டப்பகுதியில் செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
    • வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் சிறுத்தை? போன்ற வனவிலங்கு வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அருகேயுள்ள கொங்க ர்பாளையம் வினோபா நகர் அருகில் செந்தில்குமார் என்பவர் தனது விவசாய தோட்டத்தில் பண்ணை அமைத்து கோழிகள் மற்றும் வாத்துகளை வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் தோ ட்டத்தில் வளர்க்கப்பட்ட வாத்து ஒன்று காணாமல் போய் உள்ளது. இதனை யடுத்து நேற்று மதியம் விவசாய தோட்டத்தில் உள்ள பண்ணையில் கோழிகள் மற்றும் வாத்து களுக்கு செந்தில்குமார் தீனி வைக்க சென்றுள்ளார். அப்போது கோழி பண்ணை அருகே மர்ம விலங்கு ஒன்று தோட்டப்பகுதியில் செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    இது குறித்து செந்தில்கு மார் டி.என்.பாளையம் வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின்பேரில் வனச்சரகர் கணேஷ் பாண்டியன் தலைமையிலான வனத்து றையினர் செந்தில்குமார் தோட்டத்திற்கு சென்று மர்ம விலங்கு குறித்து விசாரித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    கோழி பண்ணை மற்றும் தோட்டத்தை சுற்றிலும் கால் தடங்கள் உள்ளதா? எனவும், மர்ம விலங்கின் நடமா ட்டத்தின் அடையாளங்கள் ஏதேனும் உள்ளதா? எனவும் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். இதனையடுத்து தோட்டத்திற்குள் புகுந்த மர்ம விலங்கு குறித்து கண்டறிய அப்பகுதியில் 3 தானியங்கு கேமிராக்கள் பொருத்தப்பட்டு வனத்து றையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்ற னர்.

    விவசாய தோட்டம் உள்ள இடம் வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் சிறுத்தை? போன்ற வனவிலங்கு வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    ×