என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "A series of accidents"
- நோ என்ட்ரி போடப்பட்டுள்ள போதிலும் அதனை கண்டுகொள்ளாமல் மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்கள் ஆகியவை விதிமீறி செல்கின்றன.
- பல மாதங்களாக இதுபோன்ற விதிமீறல்கள் மற்றும்.பள்ளி குழந்தைகளை அதிக அளவு ஆட்டோக்களில் ஏற்றிச் செல்லும் வாகனங்களும் இதுபோன்ற விதிமீறலை சர்வ சாதாரணமாக கடைபிடிக்கின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் நகரில் குறிப்பிட்ட சில சாலைகள் ஒருவழிப்பாதையாக அமுல்படுத்தப்பட்டுள்ளது. விபத்துகளை தடுக்க பகல் நேரங்களில் கனரக வாகனங்கள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை மதிக்காமல் ஒருவழிப்பாதையில் வாகனங்கள் அடிக்கடி எதிரே விதிமீறி வருவதால் தொடர் விபத்துகள் நடந்து வருகிறது.
சாலைகளில் சென்டர் மீடியன்கள் அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டு வருகிறது. ஆர்.எஸ்.ரோடு, சத்திரம் தெரு, அரசு ஆஸ்பத்திரி எதிரே, ஜி.டி.என். சாலை உள்ளிட்ட சாலைகள் இதுபோல போக்குவரத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் நோ என்ட்ரி போடப்பட்டுள்ள போதிலும் அதனை கண்டுகொள்ளாமல் மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்கள் ஆகியவை விதிமீறி செல்கின்றன.
இதுபோன்ற சாலைகளில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தி விதிமீறும் வாகனங்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும். குறிப்பாக இரவு நேரங்களில் விதிமீறி வாகனங்கள் மின்னல் வேகத்தில் வருவதால் நடந்து செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கிவிடுகின்றனர். இந்த சாலைகள் மட்டுமின்றி பஸ் நிலையத்தில் எம்.ஜி.ஆர். சிலை எதிரே இருவழிப்பாதைக்காக பேரிக்கார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சாலையில் விதியை மீறி காலையில் ஆம்னி பஸ்கள், சரக்கு வாகனங்கள் அதிவேகத்தில் வருகின்றன.
பல மாதங்களாக இதுபோன்ற விதிமீறல்கள் நடந்தாலும் போக்குவரத்து போலீசார் இதனை கண்டு கொள்வதில்லை.பள்ளி குழந்தைகளை அதிக அளவு ஆட்டோக்களில் ஏற்றிச் செல்லும் வாகனங்களும் இதுபோன்ற விதிமீறலை சர்வ சாதாரணமாக கடைபிடிக்கின்றனர். இதனால் வாகன ஓட்டுனர்களுக்கிடையே வாக்குவாதம் மற்றும் கை கலப்பு நடக்கிறது.
பெரும் விபத்து நடப்பதற்கு முன்பு இதுபோன்ற விதிமீறலை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் செல்போன் பேசியபடியே வாகன விபத்துகளை ஏற்படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. இதனையும் தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- எதிர் பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது.
- போலீசார் விபத்தில் சிக்கிய பயணி களை பொதுமக்களின் உதவியுடன் பத்திரமாக பஸ்சில் இருந்து மீட்டனர்.
விழுப்புரம்:
நாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு அரசு பஸ் ஒன்று 27 பயணிகளை ஏற்றி கொண்டு நேற்று இரவு வந்தது. இந்த பஸ்சை கும்பகோணத்தை சேர்ந்த நடராஜ் (வயது 40) ஓட்டி வந்தார். இந்நிலையில் பஸ் இன்று அதிகாலை கிழக்கு கடற்கரை சாலை மரக்காணம் தாழ ங்காடு அருகே வந்தபோது எதிர் பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை ஓரத்தில் இருந்த 10 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு ள்ளானது. உடனே பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அலறினர். பயணிகளின் அலறல் சத்தம் கேட்ட அருகில் இருந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் இதுகுறித்து மரக்காணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் உடனடியாக சம்ப இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கிய பயணி களை பொதுமக்களின் உதவியுடன் பத்திரமாக பஸ்சில் இருந்து மீட்டனர். இந்த விபத்தில் பஸ் கண்டக்டர் ஸ்ரீராம் (57) மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த சந்தியா (29) வேதாரணியம் பகுதியை சேர்ந்த பாபா செல்வம் (35) நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த கார்த்திக (25) சாதிக் (40)ராஜேந்திரன் (50) உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடை ந்தவர்களை போலீசார் மரக்காணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப காலமாக தொடர்ந்து பஸ் விபத்துக்காளவது பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள் மத்தில் பீதியை ஏற்படுத்தி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்