search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A time honoured honor"

    • திருத்தேரோட்டமும் அதேபோல் நகரின் நான்கு ரத வீதிகளில் தான் நடக்கும்.
    • கோவில் பணியாளர்களுக்கு போலீஸ் நிலையத்தில் இனிப்பு, காரம், டீ கொடுத்து மாரியாதை செய்வார்கள்.

    சென்னிமலை

    சென்னிமலை முருகன் கோவிலில் விழாக்கள் அனைத்தும் சென்னிமலை டவுன் கிழக்கு ரத வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் தான் நடக்கும். திருத்தேரோட்டமும் அதேபோல் நகரின் நான்கு ரத வீதிகளில் தான் நடக்கும்.

    சென்னிமலை முருகன் கோவில் தேரோட்டத்தில் தேர் நிலை சேர்ந்தவுடன் தேர் நிலையில் இருந்து சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்–இன்ஸ்பெக்டர்களுக்கு மாலை அணிவித்து மேள, தாளம் முழங்க கோவில் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் தலைமையில் ஊர்வலமாக சென்னிமலை போலீஸ் நிலைய த்துக்கு அழைத்து சென்று விடுவார்கள்.

    இந்த பழக்கம் பல நீண்ட வருடங்களாக உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கின்றனர். எந்த வி.ஐ.பி. கலந்து கொண்டா லும் சென்னிமலை போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர், சப்–இன்ஸ் பெக்டருக்கு தான் இங்கு மரியாதை.

    மேலும், ஊர்வலமாக போலீஸ் நிலையம் செல்லும் தேரோட்டி, கோவில் பணியாளர்களுக்கு போலீஸ் நிலையத்தில் இனிப்பு, காரம், டீ கொடுத்து மாரியாதை செய்வார்கள்.

    இது நடைமுறை என்பதை விட பழக்கம் என கூறலாம். 100 வருட ங்களுக்கு மேல் இந்த பாரம்பரிய மரியாதை தொடர்வதாக பெரியவ ர்கள் கூறு கிறார்கள். இந்த மரியாதை மாறாமல் இந்த ஆண்டும் நடைபெற்றது.

    ×