search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A youth"

    • கைகாட்டி பாலத்தில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
    • அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் மதுவிற்ற வெங்கடேசன் என்பவரை கைது செய்தனர்.

    ஆப்பக்கூடல்:

    அத்தாணி அருகே உள்ள கைகாட்டி பாலத்தில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் மதுவிற்ற திண்டுக்கல் கள்ளிமந்தையம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 45) என்பவரை கைது செய்தனர்.

    மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.910 மதிப்புள்ள 7 மதுபானபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • மது பாட்டில்கள் விற்பனை செய்த பவானி பாலக்கரை வீதியை சேர்ந்த குணசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • மேலும் அவரிடம் இருந்து 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பவானி:

    பவானி அந்தியூர் பிரிவு ரோட்டில் பவானி போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது செல்லியாண்டி அம்மன் பூக்கடை அருகில்‌ 12 மது பாட்டில்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து தடை செய்யப்பட்ட மது பாட்டில்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக பவானி பாலக்கரை வீதியை சேர்ந்த குணசேகரன் (44) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் அவரிடம் இருந்து 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • மாணவி வாலிபர் ஒருவருடன் பெருந்துறை பகுதியில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இதனைத்தொடர்ந்து ரங்கநாதனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்து விஜயமங்கலம் பகுதியில் 17 வயது மாணவி அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி பள்ளிக்கு சென்ற அந்த மாணவி வீடு திரும்பவி ல்லை.

    இதனால் மாணவியின் பெற்றோர் பல இடங்களிலும் அவரைத் தேடிப்பார்த்தனர் .

    அவர்களால் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வந்தார்.

    இந்த நிலையில் அந்த மாணவி வாலிபர் ஒருவருடன் பெருந்துறை பகுதியில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தொடர்ந்து பெருந்துறை போலீசார் விரைந்து சென்று பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மாணவி மற்றும் அவருடன் இருந்த வாலிபரையும் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அந்த வாலிபர் சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள உதயத்துறையை சேர்ந்த ரங்கநாதன் (வயது 26) என்றும், பெயிண்டரான இவர் இன்ஸ்டாகிராம் மூலம் அந்த மாணவியிடம் பழகியதாக கூறப்படுகிறது.

    மேலும் அவர் அந்த மாணவிக்கு காதல் வலை வீசி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதையடுத்து கடந்த 5-ந் தேதி பெருந்துறை பகுதிக்கு வந்த அந்த மாணவியை கடத்திச் சென்று கெங்க வல்லி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.

    மேலும் அந்த மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து ரங்கநாதனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் மருத்துவ பரிசோத னைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அந்த மாணவி அனுப்பி வைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட ரங்கநாதன் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

    • சந்தேகப்படும் விதமாக வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர்.
    • அவரிடம் இருந்த 40 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் குமரன் கோவில் பகுதியில் பங்காளாப்புதூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் விதமாக வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர்.

    சோதனையில் மோட்டார்சைக்கிளில் மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் பெரியகொடிவேரி அருகே உள்ள வேட்டுவன்புதூர் பகுதியை சேர்ந்த சின்னமாரப்பன் (வயது 58) என்பதும், மதுபாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து சின்னமாரப்பன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 40 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ×