என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Aani ceremony"
- ஆனி திருவிழா வருகிற 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது.
- கன்னி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி ஸ்ரீ சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் ஆனி திருவிழா வருகிற 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கான முகூர்த்த கால் நாட்டும் விழா இன்று நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கன்னி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி, அம்பா ளுக்கும் சிறப்பு அபிஷேக தீபாராதனை நடந்தது. தொடர்ந்து ஆனி திருவிழா விற்கான முகூர்த்த கால் நாட்டும் நிகழ்ச்சி தொடங்கியது.
இதற்கான விழாவை ஆலய அர்ச்சகர் அய்யப்ப பட்டர் நடத்தினார். இதில் கோவில் மணியம் சுப்பையா, பக்தஜன சபை சார்பில் தெரிசை அய்யப்பன், பூபால் ராஜன், அசோக்குமார், இளைய பெருமாள், ஆன்மீக திருச்சபை நிர்வாகி சுப்பையா உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பூஜை ஏற்பாடுகளை ஆலய வழிபாட்டு மகளிர் குழுவினர் செய்திருந்தனர். விழாவின் தொடர்ச்சியாக இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜையும், சுவாமி- அம்பாளுக்கு அலங்கார பூஜையும் நடைபெறுகிறது.