search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Abdul Kalam Birthday Celebration"

    • வாணியம்பாடியில் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா
    • மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது

    வாணியம்பாடி:

    வாணியம்பாடியில் வருட்சா பவுண்டேஷன், இசுலாமிய கல்லூரி ரோட்ராக்ட் சங்கம், இன்னோவேட்டிவ் டீச்சர்ஸ் குழு மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஆகியோர் இணைந்து மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் 91-வது பிறந்தநாள் விழா இஸ்லாமிய கல்லூரி வளாகத்தில் கொண்டாடினர்.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் டி.முஹம்மத் இலியாஸ் தலைமை தாங்கினார். கல்லூரி தமிழ் துறை தலைவர் முனைவர் சிவராஜி, பேராசிரியர் லியாகத் கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் அருண்குமார் அனைவரையும் வரவேற்றார்.

    இதில் சிறப்பு விருந்தினர்களாக வாணியம்பாடி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், ஆம்பூர் ரோட்டரி சங்கம் தலைவர் சந்திரன், சின்னத்திரை புகழ் கே.பி.ஓய். அமீர் சந்தானம், தலைமை ஆசிரியை லதா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

    சிறப்பு அழைப்பாளராக பெங்களூர் யூ.ஆர்.எஸ்.சி முன்னாள் உதவி திட்ட இயக்குனர் விஞ்ஞானி அருணாச்சலம் கலந்துகொண்டு முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் சிறப்புகள் குறித்து பேசினார்.

    தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கியும், 91 மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.

    பின்னர் சிந்தாமணி பெண்டா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் தயாரித்த மாதிரி ஏவுகணையை விண்ணில் விட்டு சோதனையிட்டனர்.

    நிகழ்ச்சியை ஆம்பூர் பெத்தலகம் பள்ளி ஆசிரியர்கள் சரவணன் ஜெயசீலன், சிந்தகமாணி பெண்டா பஞ்சாயத் யூனியன் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் அருண்குமார், வாணியம்பாடி டி.வி.கே பள்ளி ஆசிரியர் நிகானந்தன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

    கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள், பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை வெண்ணிலா நன்றி கூறினார்.

    ×