என் மலர்
நீங்கள் தேடியது "abhishekam"
- சோழீஸ்வரர் கோயிலில் சங்காபிஷேக விழா நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்
புதுக்கோட்டை:
பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி சங்காபிஷேக விழா நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக ருத்ரஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட 108 சங்குகளில் உள்ள புனிதநீரால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பூஜையை சிவாச்சாரியார் கணேஷ் வழிநடத்தினார். சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.அதுபோல வேந்தன்பட்ட நெய்நந்தீஸ்வரர் கோயில், புதுப்பட்டி நகரத்தார் சிவன் கோயில், வலையபட்டி மலையாண்டிகோயில் உள்ளிட்ட கோயில்களில் சங்காபிஷேகம் நடைபெற்றது.
- புனிதநீர் அடங்கிய கடம் நாதஸ்வர இன்னிசை முழங்க புறப்பட்டு கோவிலை வந்தடைந்தது.
- விநாயகருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்க ப்பட்டன.
பூதலூர்:
பூதலூர் அருகே கோவில்பத்து சிவன் கோவில் தெருவில் உள்ள மழை தரும் வேம்பரசு விநாயகர் கோவிலில் குடமுழுக்கு விழா கடந்த 16 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று சிறப்பாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு யாகசாலை அமைக்கப்பட்டு காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின.
இரண்டு கால யாகசாலை பூஜைகளை திருப்பூர் திருநாமலிங்கேஸ்வர சிவம் தலைமையில் ஸ்ரீ ஹரி கிருஷ்ணன் பட்டாச்சாரியார், சந்தோஷ் சிவம் ஆகியோர் நிகழ்த்தினர்.
மண்டபார்ச்சனை, வேதிகா சார்ச்சனை, பூர்ணாகுதி, உபசார பூஜைகள், வேதபாராயணம், திருமுறை விண்ணப்பம், நாடி சந்தானம், ஸ்பரிசாகுதி, த்ரவ்யாகுதி ஆகிய பூஜைகள் நடைபெற்றன.
பின்னர், யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடம் நாதஸ்வர இன்னிசை முழங்க புறப்பட்டு கோவிலை வந்தடைந்தது.
பின்னர், கோவில் கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதனை தொடர்ந்து, விநாயகருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு அனைவருக்கும் பிரசா தங்கள் வழங்கப்பட்டன.
விழாவில் ஐயப்ப குருசாமிகள், அய்யப்ப பக்தர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை பூதலூர் கோவில்பத்து கிராம மக்கள் செய்திருந்தனர். குடமுழுக்கு விழா நடந்த சில நொடிகளில் பலத்த மழை பெய்தது பக்தர்கள் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
- முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் நடக்கிறது.
- அன்னதானம் நடைபெறுகிறது.
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் வருகிற 12-ந்தேதி கார்த்திகை சோமவாரத்தன்று பாலாபிஷேக விழா நடைபெறுகிறது.
இதையொட்டி அன்று காலை 10 மணிக்கு திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து மலையைச் சுற்றி கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். பகல் 12 மணியளவில் முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் நடக்கிறது.
அதை தொடர்ந்து உச்சிகால பூஜை மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கழுகுமலை ஈஸ்ட் இந்தியா மேச் கோபாலகிருஷ்ணன் மற்றும் வர்த்தக சங்கம் சார்பில் வள்ளிநாயகம் ஆகியோர் செய்து வருகின்றனர்.
- செந்தூரத்தால் அலங்காரம் செய்யப்பட்டது.
- மூலவர் ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை, சிறப்புப்பூஜைகள் நடந்தது.
தமிழ் கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவில் எதிரே உள்ள பேடி ஆஞ்சநேயர் கோவிலில் மூலவருக்கு நேற்று காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து செந்தூரத்தால் அலங்காரம் செய்யப்பட்டது. மூலவர் ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை, சிறப்புப்பூஜைகள் நடந்தது.
அதில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- வாஞ்சிநாதர் மங்காளம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
- பக்தர்கள் குப்தகங்கையில் நீராடி எமதர்மராஜா மற்றும் வாஞ்சிநாதரை தரிசித்தனர்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஸ்ரீவாஞ்சியம் அருள்மிகு வாஞ்சிநாதர் சமேத மங்களாம்பிகை திருக்கோவிலில் கார்த்திகை மாத கடை ஞாயிறு தீர்த்தவாரியை முன்னிட்டு வள்ளி தேவசேனா முருகப்பெருமான் விநாயகர் சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு வசந்த மண்டபத்தில் தீபாரணை நடைபெற்ற பின்னர் ஆலயத்தின் வெளியே நான்கு வீதிகளில் நடன வாகனத்தில் எழுந்துருள் செய்யப்பட்டு ஆலயத்தில் உள்ள குப்த கங்கையில் அசுர தேவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தவாரி ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.
இந்த வருடம் கும்பாபிஷேகம் நடைபெறுவதை ஒட்டி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பாலாளையம் செய்யப்பட்டுள்ளதால் கோவில் தற்போது புனரமைக்க வருகிறது.
இந்த நிலையில் கார்த்திகை மாத கடை ஞாயிறு தினத்தை முன்னிட்டு வாஞ்சிநாதர் மங்காளம்பிகை சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து அசுர தேவர் சுவாமி குப்த கந்தையில் வைத்து அபிஷேகம் செய்தனர்.
ஆனால் 3000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் குப்தகங்கையில் நீராடி எமதர்ம ராஜா மற்றும் வாஞ்சிநாதர் சாமியை தரிசித்து செல்கின்றனர். மேலும் காவல் துறை தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
- பால், பன்னீர், சந்தனம், இளநீர், திரவிய பொடி, பழங்கள் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம்.
- சங்குகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சங்காபிஷேகம்.
நாகப்பட்டினம்:
வேளாங்கண்ணியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ராஜகிரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்கு அபிஷேகம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு முன் மண்டபத்தில் யாக குண்டம் அமைக்கப்பட்டு புனித நீர் அடங்கிய கடங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பால், பன்னீர், சந்தனம், இளநீர், திரவிய பொடி, பழங்கள் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது.
தொடர்ந்து சங்குகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சங்காபிஷேகம் செய்யப்பட்டது.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி கவசம் சாத்தப்பட்டது.
- கோபூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான வள்ளலார் கோயில் எனப்படும் வதான்யேஸ்வரர் கோயில் உள்ளது.
இக்கோயிலில் கடைசியாக 2004-ஆம் ஆண்டு 26-வது குரு மகா சன்னிதானத்தின் அருளாட்சி காலத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் கோயிலில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு இன்று பாலாலய விழா நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டு அடிக்கல் எடுத்து வைத்து திருப்பணிகளை தொடக்கி வைத்தார்.
முன்னதாக, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி கவசம் சாத்தப்பட்டது. பின்னர், கோயிலில் யாகம் வளர்க்கப்பட்டு மகா பூர்ணாகுதி செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் கோபூஜை செய்து வழிபாடு நடத்தினர். பூஜைகளை கோயில் அர்ச்சகர் பாலச்சந்திர சிவாச்சாரியார் செய்து வைத்தார்.
இதில் ஆதீன கட்டளை ஸ்ரீமத் சிவகுருநாத கட்டளை விசாரனை தம்பிரான் சுவாமிகள் வள்ளலார் கோயில் மற்றும் நகர மன்ற உறுப்பினர் ரமேஷ், செந்தில்குமார், ரங்கராஜன், வாஞ்சிநாதன், தர்மபுரம் கல்லூரி செயலர் செல்வநாயகம், முதல்வர் சுவாமிநாதன், திருக்கோயில் சிப்பந்திகள் மற்றும் நகர முகவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
கரூர்:
வேலாயுதம்பாளையம் கடைவீதியில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேய்பிறை சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், விபூதி உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதேபோல காகிதபுரம் வல்லபை கணபதி, புகழிமலை விநாயகா், ஓம் சக்தி நகர் கற்பக விநாயகர் உள்பட பல்ேவறு விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- செல்முத்துக்குமாரருக்கு 21 வகையான வாசனை திரவிய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம்.
- பின்பு, சண்முகார்ச்சனை செய்து மகாதீபாராதனை காட்டப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகிஅம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது.
இக்கோயிலில் செல்வமுத்துக்குமாரசுவாமிக்கு கிருத்திகை வழிபாடு நடைபெற்றது.முன்னதாக கிருத்திகை மண்படம் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை உடனாகிய செல்முத்துக்குமாரசுவாமிக்கு 21வகையான வாசனை திரவியப்பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்ப்பபட்டு சண்முகார்ச்சனை செய்து மகாதீபாராதனை காட்டப்பட்டது.
இதில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தபரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று தரிசனம் செய்தார்.தொடர்ந்து அடிபிரதட்சனம் செய்து தருமபுரம் ஆதீனம் வழிபாடு மேற்கொண்டார்.
- இன்று காலை 5 மணி வரை விடிய விடிய அபிஷேகம் நடந்தது.
- 4 ஆண்டுகளுக்கு பின் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடந்தது.
ஆருத்ரா தரிசன விழா சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து சுகவனேஸ்வரர், சொர்ணாம்பிகை அம்மன் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதனை
திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது.
தொடர்ந்து முருகன் சன்னதி அருகே பந்தல் அமைக்கப்பட்டு அங்கு அலங்கரிக்கப்பட்ட மேடையில் சுவாமி சிலைகள் வைக்கப்பட்டன. நள்ளிரவு 12.15 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி தொடங்கியது. நடராஜர், சிவகாமசுந்தரி அம்மனுக்கு பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், கரும்பு சாறு, அன்னம், அரிசி மாவு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் இன்று காலை 5 மணி வரை விடிய விடிய அபிஷேகம் நடந்தது.
சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் 4 ஆண்டுகளுக்கு பின் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சேலம் காசி விஸ்வநாதர், குகை அம்பலவாணர், அம்மாப்பேட்டை சுப்பிரமணியர், மேச்சேரி பசுபதீசுவரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடந்தது.
அதேபோல் தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசித்தனர் .பெண்களுக்கு திருமஞ்சன கயிறு வழங்கப்பட்டது. பஞ்சமூர்த்திகள் விழாவும் நடந்தது.
நாமக்கலில் மாரியம்மன் கோவில் அருகே உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் ஆருத்ர தரிசன விழா நடந்தது. இதையொட்டி அங்குள்ள நடராஜருக்கு விடிய விடிய சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவிலில் இருந்து சாமி ஊர்வலம் புறப்பட்டு துறையூர் ரோடு வழியாக நகராட்சி அலுவலகம் வரை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து காமாட்சி அம்மன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்து நின்று பக்தர்கள் நடராஜரை தரிசனம் செய்து வருகிறார்கள்.
அவர்களுக்கு பிரசாதம் கோவில் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இதயொட்டி அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- இன்று அதிகாலை 3 மணிக்கு ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் சிறப்புவாய்ந்த பெருங்கருணை நாயகி உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடராஜப்பெருமான்-சிவகாமி அம்மையாருக்கு 32 திரவியங்களால் அபிஷேகம் நடத்தி ஆருத்ரா தரிசன விழா விமர்சையாக நடைபெறும்.
அதேபோல் இந்த ஆண்டும் இன்று அதிகாலை 3 மணிக்கு ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. விழாவில் நேற்று மாலை 6 மணிக்கு திருவாதிரை அம்மன் கிளி வாகனத்தில் திருவீதி உலா நிகழ்ச்சியும், ஊஞ்சல் உற்சவம் மற்றும் மாங்கல்ய நோன்பு பூஜையும் நடைபெற்றது.
விழாவையொட்டி இன்று காலை மயில் இறகு, கல் ஆபரணம், பாக்குப்பூ, மரிக்கொழுந்து, விருச்சிப்பூ, சம்பங்கி, மனோரஞ்சிதம், செண்பகம், வில்வம், ரோஜா உள்ளிட்ட மலர்களால் மயிலிறகு பாவாடை, கிரீடம், நெத்தி அட்டி, ஒட்டியானம், குஞ்சிதபாதம் ஆகிய ஆபரணங்கள் கலைநயத்துடன் தயாரிக்கப்பட்டு அம்மையப்பருக்கு அணிவிக்கப்பட்டது. மேலும் 32 திரவியங்களால் நடராஜப்பெருமான்-சிவகாமி அம்மையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதேப்போல் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.
- 33 வகையான அபிஷேகங்கள் அதிகாலை 3 மணி வரை விடிய, விடிய நடத்தப்பட்டது.
- அதிகாலை 5 மணிக்கு கோபுர தரிசனம் நடந்தது.
திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் நடராஜபெருமான் திருநடனம் புரிந்த 5 சபைகளில் முதல் (ரத்தின) சபையாக திகழ்கிறது.
இங்கு ஆண்டு தோறும் மார்கழி மாதம் வரும் திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசன விழா பத்துநாட்கள் விமரிசையாக நடப்பது வழக்கம்.
அதன்படி விழாவின் 9-வது நாளான நேற்று மாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து இரவு ரத்தின சபாபதி பெருமான் பழைய ஆருத்ரா அபிஷேக மண்டபத்தில் விபூதி அபிஷேகத்துடன் எழுந்தருளினார்.
பின்னர், நடராஜருக்கு, கதம்பத்தூள், நெல்லிப் பொடி, வில்வப் பொடி, வாழை, பஞ்சாமிர்தம், பால், தேன், சொர்ணாபிஷேகம், கலச அபிஷேகம், புஷ்பாஞ்சலி என மொத்தம் 33 வகையான அபிஷேகங்கள் அதிகாலை 3 மணி வரை விடிய, விடிய நடத்தப்பட்டது.
பின்னர் இன்று அதிகாலை சுவாமிக்கு சர்வ அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது. இதை தொடர்ந்து அதிகாலை 5 மணிக்கு கோபுர தரிசனம் நடந்தது. பகல் 12 மணிக்கு அனுக்கிரக தரிசனம் நடைபெற்றது.
ஆருத்ரா தரிசன விழாவில் பல்லாயிரக்கணக் கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர். நாளை காலை 8.45 மணிக்கு, சாந்தி அபிஷேகம் நடை பெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடு களை முருகன் கோவில் துணை ஆணையர் விஜயா, தக்கார் ஆகியோர் செய்தி ருந்தனர். திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம் நகரின் மையப்பகுதியில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் உள்ள பெருமாள் மச்ச அவதாரத்தில் சிவனை வழிபட்டதாக வரலாறு.
ஆருத்ராதரிசன விழாவையொட்டி 9 அடி உயரம் கொண்ட ஐம்பொன் நடராஜர் சிலைக்கு 48 வகை வாசனை திரவியங்கள், 23 வகைபழ வகைகள், பால், தயிர், இளநீர், சந்தனம், தேன் மற்றும் மலர்கள் ஆகியவை கிலோ கணக்கில் கொண்டு அபிஷேம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அச்சரைப் பாக்கத்தில் உள்ள ஸ்ரீ ஆட்சீஸ்வரர் கோவிலில் ஆருத்தார தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு நடராஜ பெருமானுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 36 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், வழிபாடும் நடைபெற்றன.
கோவில் சிவாச்சாரியார் சங்கர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்தி ரங்கள் முழங்க, மேளதாளங்களுடன் சிறப்பு ஆராதனை நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து நடராஜ பெருமானும், சிவகாம சுந்தரியும் கோவிலின் உள் பிரகார வளாகத்தில் வலம் வந்தனர். பின்னர் சூரிய பிரபையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
மாட வீதிகளில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.