என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Accident"

    • அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற தன்யாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • மோகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள ராசி குமரிபாளையம் காந்தமலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்தவர் நவீன் (29). இவரது மனைவி தன்யா (25), இவரது மாமியார் கோகிலா (45). இவர்கள் 3 பேரும் நேற்றிரவு மோகனூரில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    இதேபோல் அணியாபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி அருகே உள்ள பிள்ள விடுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (19), கள்ளக்குறிச்சி மாவட்டம் கொசப்பாடி பகுதியை சேர்ந்த இளவரசன் (18) ஆகிய 2 பேர் படித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் நாமக்கல்-மோகனூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை பாலகிருஷ்ணன் ஓட்டி வந்தார். அவருக்கு பின்னால் இளவரசன் அமர்ந்திருந்தார்.

    இந்த 2 மோட்டார் சைக்கிள்களும் நாமக்கல்-மோகனூர் சாலையில் எதிர் எதிரே சென்றபோது நேருக்கு நேர் மோதி விபத்தானது. இதில் நவீன், தன்யா, கோகிலா ஆகிய 3 பேரும் மோட்டார் சைக்கிளுடன் தார் சாலையில் கீழே விழுந்தனர். இதில் 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் தன்யாவை சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும், நவீனை கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும், கோகிலாவை அங்கிருந்து மற்றொரு தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

    அதேபோல் இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் பாலகிருஷ்ணன், இளவரசன் ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் 2 பேரையும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பாலகிருஷ்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இளவரசனை சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற தன்யாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நவீன் மற்றும் அவரது மாமியார் கோகிலா ஆகிய இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மோகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராயசந்திரா பகுதியில் மதுரம்மா கோவில் திருவிழா நடைபெற்றது.
    • காற்றின் வேகம் அதிகரித்ததால், 150 அடி தேர் ஒரு பக்கமாக சாய்ந்தது

    கர்நாடகா தலைநகர் பெங்களூரு அடுத்த ராயசந்திரா பகுதியில் மதுரம்மா கோவில் திருவிழாவின்போது 150 அடி உயர தேர் சாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

    நேற்று மாலை 5 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. காற்றின் வேகம் அதிகரித்ததால், 150 அடி தேர் ஒரு பக்கமாக சாய்ந்தது

    இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • சவுந்தர்யா மரணம் குறித்து தவறான தகவல்கள் பரவி வருவதாக அவரது கணவர் ரகு விளக்கம் அளித்துள்ளார்.
    • சொத்து தொடர்பாக பரவி வரும் ஆதாரமற்ற செய்திகள் தொடர்பாக மறுப்பு தெரிவிக்க விரும்புகிறேன்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த சௌந்தர்யா (31 வயது) கடந்த 2004 ஏப்ரல் 16 ஆம் தேதி உயிரிழந்தார்.

    தனது சகோதரர் அமர்நாத்துடன் பெங்களூரில் தேர்தல் பிரசாரம் ஒன்றுக்கு தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் இருந்து சௌந்தர்யா புறப்பட்ட தனி விமானம் விழுந்து நொறுங்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.

    இந்நிலையில் அவரின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும் அதன் பின்னணியில் தெலுங்கு நடிகர் மோகன் பாபு இருப்பதாகவும் கம்மம் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கம்மம் ஏசிபி மற்றும் கம்மம் கலெக்டரிடம் புகார் கடிதம் அளித்திருக்கிறார்.

    அவரது புகாரில், தெலுங்கானா மாநிலம் ஷம்ஷாபாத்தின் ஜல்லேபள்ளியில் சௌந்தர்யாகவுக்கு சொந்தமாக ஆறு ஏக்கர் விருந்தினர் மாளிகை ஒன்று இருந்தது. தெலுங்கு நடிகர் மோகன் பாபு அந்த மாளிகையை சௌந்தர்யாவிடம் கேட்டதாகவும், ஆனால் சௌந்தர்யாவின் சகோதரர் அமர்நாத்தும் அதை நிராகரித்தனர்.

    விமான விபத்தில் இருவரும் இறந்த பிறகு மோகன் பாபு அந்த மாளிகையை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துக்கொண்டார். செளந்தர்யா சென்ற விமானம் ஏன் விபத்துக்குள்ளானது என இதுவரை உறுதியாகவில்லை. இதன் பின்னணியில் சதித்திட்டம் உள்ளதா என்பதை காவல்துறை முழுமையாக விசாரிக்க வேண்டுமே என கோரியிருந்தார்.

    இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் சௌந்தர்யாவின் கணவர் ஜி.எஸ்.ரகு இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் உள்ள சொத்து குறித்து மோகன் பாபு சார் மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது.

    சொத்து தொடர்பாக பரவி வரும் ஆதாரமற்ற செய்தியை நான் மறுக்க விரும்புகிறேன். மோகன் பாபு சார் எனது மனைவி மறைந்த ஸ்ரீமதி சௌந்தர்யாவிடமிருந்து சட்டவிரோதமாக எந்த சொத்தும் வாங்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறேன்.

    எனக்குத் தெரிந்தவரை அவருடன் நாங்கள் எந்த நில பரிவர்த்தனையும் செய்யவில்லை. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நான் மோகன் பாபு சாரை அறிவேன்.

    அவருடன் வலுவான நல்ல நட்பைப் பகிர்ந்து கொள்கிறேன். எங்கள் குடும்பங்கள், என் மனைவி, என் மாமியார் மற்றும் மைத்துனர் எப்போதும் மோகன் பாபு சாருடன் பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் பழகி வந்தனர். இதனால் அவரை நான் மதிக்கிறேன்.

    அவர் குடும்பத்தில் ஒருவர் போன்றவர். உங்கள் அனைவருடனும் உண்மையைப் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். இது ஒரு தவறான செய்தி என்பதால், தவறான செய்திகளைப் பரப்புவதை நிறுத்துமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    சௌந்தர்யா உயிரிழப்பதற்கு 1 வருடத்திற்கு முன் 2003 இல் சாப்ட்வேர் இன்ஜினீயரான ரகுவை மணந்து கொண்டார். உயிரிழந்த சமயத்தில் சௌந்தர்யா கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது. 

    • இரண்டு கார்கள் மோதி விபத்துக்குள்ளான நிலையில் அந்த கார் மீது பின்னால் வந்த மற்றொரு கார் மோதியது
    • விபத்து தொடர்பாக துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருச்சி:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் தங்கசாமி (வயது 67). இவரது மனைவி மங்கையர்க்கரசி (வயது 64). பேரன் பிரதுன் (வயது 7), உறவினர்கள் பூஜா (வயது 20), ரஞ்சனா (வயது 20) ஆகிய ஐந்து பேரும் ஒரு காரில் ராஜபாளையத்திலிருந்து திருச்சி மாவட்டம், நவல்பட்டில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.

    இன்று மாலை மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை அடுத்த செவந்தம்பட்டி விலக்கு அருகே கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை மையதடுப்பைத் தாண்டி எதிர்சாலைக்கு சென்று எதிரில் வந்த காரில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த இரண்டு கார்களும் விபத்துக்குள்ளான நிலையில் அந்த கார் மீது பின்னால் வந்த மற்றொரு காரும் மோதி விபத்துக்குள்ளானது.

    விபத்து குறித்து அறிந்த துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினர் சிறப்பு நிலை அலுவலர் நாகேந்திரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களையும் மீட்டு உடனடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதில் சம்பவ இடத்திலேயே மங்கையர்க்கரசி, ரஞ்சனா, பூஜா மற்றும் மற்றொரு காரில் சென்ற பத்மா ஆகிய நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மணப்பாறை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கடைவீதி பகுதிகளில் மக்கள் அதிக அளவில் பொருட்கள் வாங்க வருவது வழக்கம்.
    • இருசக்கர வாகனத்தில் செல்வோரை விரட்டுவதால் விபத்து ஏற்படும் அபாயம்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் கடைவீதி மற்றும் தோப்புத்துறை இலந்தையடி ரஸ்தா நகர் பகுதிகள் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அதிகமாக கூடும் இடங்களாகும்.

    நாள்தோறும், கடைவீதி பகுதிகளில் மக்கள் அதிக அளவில் பொருட்கள் வாங்க வருவது வழக்கம். நகரின் முக்கிய பகுதியாக காணப்படும் இந்த இடங்களில் நாய்கள் அதிக அளவில் காணப்படுகிறது. நடந்து செல்வோரை சில நாய்கள் கடித்துவிடுகிறது.

    மேலும், இருசக்கர வாகனத்தில் செல்வோரை விரட்டுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    இதனால், பொதுமக்கள் தினமும் அச்சத்துடனே செல்லும் அவல நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 5 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் இன்று காலை நெய்வாசலில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றனர்.
    • லாரி டிரைவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அரியலூர் மாவட்டம் இருங்காலங்குறிச்சி பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர், ஒரு பெண் உள்பட 5 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் இன்று காலை நெய்வாசலில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றனர். பின்னர்அவர்கள் நெய் வாசலில் இருந்து கடலூர் செல்லும் சாலையில்,  திட்டக்குடி அடுத்த கொடிகளம் பஸ் நிலையம் அருகே வந்தபோது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளின் மீது வேகமாக மோதியது.இதில் மோட்டார் சைக்கிளில் வந்து 5 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த வாலிபர் மற்றும் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து படுகாயம் அடைந்த மற்றொரு பெண் உட்பட 2 சிறுவர்களையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த திட்டக்குடி போலீஸ் டிஎஸ்பி காவியா தலைமையிலான போலீசார் மற்றும் ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? மற்றும் இவர்கள் மீது மோதிய லாரி டிரைவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமண மண்டபம் அருகில் நடந்து வந்தபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் இவரின் மீது வேகமாக மோதியது.
    • வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பிள்ளையார் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி செல்வி (வயது 36).  இவர் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகில் நடந்து வந்தபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் இவரின் மீது வேகமாக மோதியது. இதில் செல்வி தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தார். இதனை அக்கம்பக்கம் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக செல்வியை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற நபரை வலை வீசி தேடி வருகின்றனர். 

    வானூர் அருகே மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதி பள்ளி காவலாளி பலியானார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் சமரசம் பகுதியை சேர்ந்தவர் முகமது சுலைமான் (வயது 44) இவர் புதுவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த 28ஆம் தேதி வழக்கம்போல் பணி முடித்துவிட்டு சுலைமான் தனது மோட்டார் சைக்கிளில் கோட்டகுப்பத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். அப்போது சின்ன கோட்டகுப்பம் அருகே மோட்டார் சைக்கிள் வந்த போது சாலையின் குறுக்கே மாடு ஒன்று சென்றது. எதிர்பாராத விதமாக சுலைமான் மோட்டார் சைக்கிளை மாடு மீது மோதி கீழே விழுந்தார்.

    இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு புதுவை அரச ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சுலைமான் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த கோட்டகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லாரி மீது கார் மோதியதில் இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.
    • இந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.

    விருதுநகர்

    ஈரோடு மாவட்டம் கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணுவரதன் (வயது 40). இவர்களது உறவினர் வீட்டு திருமணம் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற்றது. இதற்காக விஷ்ணுவரதன் தனது குடும்பத்தினருடன் சம்பவத்தன்று இரவு காரில் புறப்பட்டார். அவருடன் மனைவி பிரதீபா, குழந்தைகள் சாருண்ணிகா, உறவினர்கள் கோவர்த்த ணன், சரவணராஜ், இவரது மனைவி ஹரிபிரியா (28) ஆகியோர் பயணம் செய்தனர். காரை சரவ ணராஜ் ஓட்டினார்.

    அதிகாலை 3 மணியளவில் விருதுநகர் மாவட்டம் மதுரை-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செம்பட்டையன்கால் விலக்கு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது ரோட்டில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் காரில் இருந்த அனைவரும் படுகாயமடைந்தனர்.

    விபத்தில் சிக்கியவர்களை அந்தப்பகுதி மக்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஹரிபிரியா பரிதாபமாக இறந்தார். மற்ற அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து தொடர்பாக கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தூத்துக்குடி தாளமுத்து நகரை சேர்ந்த மகேஷ் இவரது மகன் அஜயை தனது மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து சென்றார்
    • எதிர்பாராத விதமாக தண்ணீர் லாரி அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்து நகர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் மகேஷ்.

    பள்ளி மாணவன்

    இவரது மகன் அஜய் ( வயது 12) அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். இன்று காலை பள்ளி செல்வதற்காக அஜயை மகேஷ் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

    தாளமுத்து நகர் அருகே உள்ள ராஜபாளையம் என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் சென்றபோது தண்ணீர் லாரியை முந்தி சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீர் லாரி அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    அப்போது லாரி அஜய் மீது ஏறி இறங்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே அவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுதொடர்பாக லாரி டிரை வரை பிடித்து தாளமுத்து நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்துக்குள்ளான லாரியில் சிக்கிய டிரைவர் உயிருடன் மீட்கப்பட்டார்
    • முன்னாள் சென்ற லாரியின் பின்பகுதியில் மோதியது

    கரூர்:

    கரூர் அருகே, விபத்துக்குள்ளாகி, லாரியில் சிக்கி கொண்ட டிரைவரை, தீயணைப்பு துறைனர் உயிருடன் மீட்டனர்.

    விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதியை சர்ந்தவர் மணிகண்டன், (வயது35) லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு, சிவகாசியில் இருந்து ரப்பர் லோடுகளை ஏற்றிக்கொண்டு, சூருக்கு புறப்பட்டார்.

    கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், காணப்பரப்பு பகுதியில், நேற்று காலை மணிகண்டன் ஓட்டி வந்த லாரி, முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் பின்பகுதியில் மோதியது.

    இதில், மணிகண்டனின் இரண்டு கால்களும் லாரி இடிபாடுகளில் சிக்கிக் கொண்டன. தகவல் அறிந்த, வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறை வீரர்கள் அங்கு சென்று, மணிகண்டனை மீட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்.

    இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • முடிவைதானேந்தலை சேர்ந்த கணேசன் தனது மோட்டார் சைக்கிளில் மனைவி விமலாவை அழைத்து கொண்டு நேற்று இரவு கடைக்கு சென்றார்
    • நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த கார் அவர்கள் மீது மோதியது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள முடிவைதானேந்தல் கீழத்தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி விமலா (வயது42).

    கார் மோதி விபத்து

    கணேசன் தனது மோட்டார் சைக்கிளில் மனைவி விமலாவை அழைத்து கொண்டு நேற்று இரவு கடைக்கு சென்றார்.

    அவர்கள் வாகைக்குளம் அருகே உள்ள வர்த்தக ரெட்டிபட்டியில் சென்ற போது நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த கார் அவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். தகவலறிந்ததும் புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி, சப்-இன்ஸ்பெக்டர் முத்து வீரப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை விமலா பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×