என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Achievement Briefing General Meetings"
- தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் நாளை (7-ந் தேதி) முதல் 9-ந் தேதி வரை 24 இடங்களில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது.
- கூட்டங்களில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், உட்பட பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
தூத்துக்குடி:
மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான அனிதாராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2 ஆண்டுகள் சாதனை
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. பெரும்பாலான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி மக்களுக்கான அரசாக செயல்பட்டு வரும் தி.மு.க. அரசு தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளையும், அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய சமச்சீரான வளர்ச்சியை உருவாக்க திட்டமிட்டுள்ளது. கல்வி, வேலைவாய்ப்புடன் கூடிய உயர்கல்வி, விளையாட்டு மேம்பாடு என இளைய தலைமுறை யினரின் வருங்கா லத்தை வளப்படுத்துவதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது.
விவசாய வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, தகவல் தொழிலநுட்ப வளர்ச்சி, பெண்களின் பாது காப்பு, சமூகநீதி என அணைத்து பகுதியினரின் மேம்பாடு இந்த அரசின் லட்சியம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அரசின் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும், எதிர்கா லத்திற்கான திட்டங்களையும் மக்களிடம் விளக்கி சொல்வ ற்காக தமிழ்நாடு முழுவதும் 1,222 பொதுக்கூட்டங்களை நடத்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
24 இடங்களில்....
அதன் அடிப்படையில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் நாளை (7-ந் தேதி) முதல் 9-ந் தேதி வரை 24 இடங்களில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது.
நாளை மாலை 6 மணிக்கு காயல்பட்டினம் சீதக்காதி திடலில் நான் (அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன்), ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றியம் ஏரலில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், மத்திய ஒன்றியம் சாயர்புரத்தில் தாமரை பாரதி, மேற்கு ஒன்றியம் ஸ்ரீ வைகுண்டத்தில் பாம்பு கிருஷ்ணன், திருச்செந்தூர் ஒன்றியம் அம்மன்புரத்தில் நெல்லை முத்தையா, சாத்தான்குளம் மத்திய ஒன்றியம் முதலூரில் முன்னாள் எம்.பி. விஜிலா சத்தியானந்த், ஓட்டபிடாரம் மேற்கு ஒன்றியம் ஒட்டநத்தத்தில் சிவராஜ், தூத்தக்குடி மேற்கு ஒன்றியம் முடிவைதானேந்தலில் வசந்தம் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
நாளை மறுநாள் ( 8-ந் தேதி ) மாலை 6 மணிக்கு திருச்செந்தூர் நகரில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகம் அருகில் அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், வசவப்பபுரத்தில் முன்னாள் எம்.பி. கம்பம் செல்வேந்திலன், ஆத்தூரில் லிவிங்ஷ்டன், ஆழ்வார்தி ருநகரியில் ஜூடு, பரமன்குறிச்சி யில் நெல்லை ரவி, இடைச்சிவிளையில் கல்லிடை கனல்பேச்சி, மாப்பிள்ளையூரணி பாரதிநகரில் தாமரை பாரதி, முத்தம்மாள் காலனியில் புகழ்காந்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
திரளாக கலந்து கொள்ள வேண்டும்
வருகிற 9-ந் தேதி மாலை 6 மணிக்கு ஓட்டபிடாரம் வடக்கு ஒன்றியம் தேரடி திடலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஸ்பிக்நகர் பகுதியில் முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், புதுக்கோட்டையில் ஆல்பி ரட்தாஸ், தெய்வசெயல்புரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டீன், செய்துங்கநல்லூரில் ஆவின் ஆறுமுகம், சாத்தான்குளத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, குரும்பூரில் நாசரேத் பசிலியான், மெஞ்ஞா னபுரத்தில் பரணிசேகர் ஆகியோரும் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
எனவே இந்த கூட்டங்களில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட அணி அமைப்பா ளர்கள், துணை அமைப்பா ளர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஒன்றிய சேர்மன்கள், நகர்மன்ற தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், மாவட்ட பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள், வட்டம், வார்டு நிர்வாகிகள், மாவட்டம் முழுவதும் உள்ள செயல்வீரர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்